in

கண்ணா…வருவாயா? (கவிதை) – ராஜேஸ்வரி

மதி மயங்கிய மையலுடன்

மை தீட்டிய விழிகளுடன்

என் மனங்கவர்ந்த மாயவனை காண

இந்த இளைய ராதை காத்திருக்கிறேன்…

காதலின் வாசமதை கலந்து மேனியில் தழுவி

நம் ஆடையை இணைத்து 

பறக்க செய்து விளையாடும்

கள்ளமிகு தென்றலும்

வந்துவிட்டது….

கார்முகில் வண்ண நின்

கருவண்ண மேனி கண்டு

வண்ணம் கொண்ட 

தோகை தனை விரித்து 

அழகு நடம் புரிய

ஆண் மயிலும் வந்துவிட்டது….

நம் விழிகள் கலந்த

பரவசப் பாதையின்

ஏகாந்த நிலைதனில்

இணைந்த காதலிசையில்

கானம் பாட

கருநீல குயிலினங்களும்

வந்துவிட்டது…

இன்னும் நம்மை அலங்கரிக்க

தேன்கொண்ட மணமிகு மலர்களும்,

தாமரை மொட்டுகளும்….

பாதம் தாங்கும் பச்சயமிகு இலைகளும்,

பனித்துளி புற்களும்….

நம்முடைய

நிகரில்லா அன்பினை காண வந்த

அன்னப் பறவைகளும்….

காத்துக் கொண்டிருக்கிறது….

என் கண்களில்

கண்ணீர் துளியும்  பூத்துவிட்டது…

உனை இன்னும் காணவில்லையே…..கண்ணா…

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என்னைக் காணவில்லை (சிறுகதை) – இரஜகை நிலவன்

    உறவுக்கோலங்கள் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன்