2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஊரே ஒன்றுக்கூடி நின்றது செல்லத்துரையின் வீட்டின் முன்னால்.
புற்றிலிருந்து கிளம்பிய ஈசல் போல என்ன இது செல்லத்துரையின் வீட்டு முன்னாள் இவ்வளவு கூட்டம் நிற்கிறது! என்று மாடசாமி தாத்தா மூக்குக் கண்ணாடியை சரியாக கண்ணுக்குப் பொருத்தி தலையில் இட்ட எண்ணெய் மெதுவாக கையில் எடுத்து தேய்த்து கூட்டத்தில் ஒருவரை நோக்கி என்னப்பா பிரச்சினை என்று கேட்டார்.
பிறகு செல்லத்துரை அம்மாவுக்கு ரொம்ப முடியலையா இப்பவோ, எப்பவோ இழுத்துகிட்டு இருக்கா என்று கூறினார்.
அய்யோ! அது நல்ல மனுஷி ஆச்சே அதா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போக வேண்டியது தான்.
அங்க தான் சிக்கல் தாத்தா. என்ன சிக்கல் செல்லத்துரை போன் பண்ணி சொல்ல வேண்டியது தானே.
அவரோ வெளி ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது சம்சாரம் வீட்டுலா தானா இருக்கு அது கூட்டி போக வேண்டியது தானா.
கூட்டத்தில் இருந்து ஒரு பெண் அவளது கும்பிட்டு போறதாவது அதெல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்காது பெரியவரே.
ஏம்மா அப்படி சொல்லுற அவளே இந்த பத்மா அம்மா எப்ப சாகுமோ தவம் கிடைக்கிற
ஓ அப்படியா? பத்மாவுக்கு மகள் ஒன்னு இருந்துச்சுலா அந்த பெண்ணு இல்ல செல்லத்துரைக்கும் சுமதிக்கும் எப்ப கல்யாணம் நடந்துச்சே அதிலிருந்து இங்க வரதே இல்லா.
கல்யாணத்துலா ஏதோ நகை திருட்டு போயிருச்சுன்னு பிரச்சினையாம்.
நானும், பத்மா அம்மா மகா சுந்தரியும் இங்கா இருக்கிற மேல்பள்ளிக் கூடத்துலா ஒன்ன படிச்சோம். அப்படியா?
சட்டென்று இடுப்பில் இருந்த மூக்குப்பொடி டப்பா மேலா ஒரு தட்டு கீழா ஒரு தட்டு தட்டி தன் விரல்களுக்கேற்ப மூக்குப்பொடியை எடுத்து மூக்கில் திணித்தார் மாடசாமி தாத்தா
நச்சு நச்சு என்று ஒரு தும்மல் மூக்கினை துளைத்து வெளியில் வந்து சில மூக்குப்பொடி தூள்கள்
சீச்சீ என்று ஒரு சில தள்ளி நின்றனர்.
வயதான காலத்தில் இது உனக்கு தேவையா தாத்தா.
அடா போ கிறுக்கு பேய புள்ள
முன் பற்கள் விழுந்த நிலையில் பின் புறத்தில் உள்ள எட்டு பற்கள் தெரியும் சட்டென்று வாய் பிளக்க சிரித்தார் மாடசாமி
பூவரசம் மரத்தினை தானே பிடுங்கி நட்டு வச்சது போல அதை அடைக்கலமாக பிடிச்சு நின்று கொண்டிருந்த பார்வதி பாட்டியை நோக்கி மெதுவாக நடந்தார்.
என்னையா அங்கா இங்கா கேட்டு பார்த்து யாரும் ஒரு தகவலும் உருப்படியா சொல்ல மாட்டிங்கீறங்க என் கிட்ட வந்தியா
இல்லா பார்வதி முந்த நேத்து வேலைக்கு போன உன் மகனைப் பத்தி ஒன்னு சொல்லுறங்க அது உண்மையை?
என்ன சொல்லுறங்க?
அது என்ன உண்மை ஒன்னுமே புரியலயே
கன்னத்தில் கை வைத்து யோசிக்க ஆரம்பித்தால் பார்வதி. என் சொல்லற அதா தெளிவா சொல்லு இந்த பொடி வைச்சு பேசுவதெல்லாம் என்கிட்ட வேண்டாம் மாடசாமி.
பார்வதி பத்மாவை விட மாடசாமி இரண்டு வயது குறைவு தான். இருந்தாலும் இந்த மாடசாமி யாருக்குமே மரியாதை கொடுத்ததே இல்லா.
சின்ன வயதிலிருந்தே பெரிய சாண்டியர் மாதிரி ஊருக்குள்ள ஒரு வேலையும் பார்க்க மாட்டான்.
அங்க பிரச்சினை வந்தாலும் இவனுக்கு மூக்கு வியர்த்துடன் அந்த பிரச்சினையா தெரிந்து அதில் குளிர் காய்வது இல்லையென அந்த பிரச்சினையை “ஊதி ஊதி பெருசு பண்ணி விடுவதே இவனுக்கு வழக்கம்”.
இப்ப என் மகனா பத்தி என்ன சொல்ல போறான் தெரியலா என்று தன் மனத்திற்குள் மாடசாமியை திட்டி தீர்த்தாள் பார்வதி.
உனக்கு ஒன்னு தெரியாதது போல் நடிக்காத பார்வதி.
நீ சொல்றா ஒன்னுமே விளங்கால மாடசாமி அதான் பத்மா மகன் செல்லத்துரையும் உன் மகனும் என்ன ஒரே இடத்துலா தான் வேலை பார்க்குறாங்களா.
உன் மகே மாதவன் ஒன்னு சொல்லாமலா இருப்பியன் அதெல்லாம் வந்து உங்கிட்ட சொல்லிருப்பான் இருப்பியன் உன் மகன்.
அடா வீணா போனவனே என்று முணுமுணுத்தால் பார்வதி இந்த பத்மா விஷயத்தை விசாரிக்க எப்படி? ஒரு புதிரா என்கிட்ட போட்டுருக்கியான் பாரு.
நான் கூட வேற என்னமோ! ஏதோ பயந்துட்டேன் இதா மட்டும் என் மருமகள் சொல்லிருந்தாயான் அவ்வளவு வேற வினையே வேண்டாம்.
கை குத்தமா கால் குத்தமா என் மகனா கடைச்சு எடுத்து வீதியில் வீசுறுவா.
ஏதோ ஏதோ புரிகளையெல்லாம் போட்டு ஒரு வழியாக பார்வதி வாயில் உண்மையை சொல்ல வைத்தான் மாடசாமி.
பார்வதியும் இவன் கிட்ட ஏதாவது ஒன்றை சொல்லி தப்பிக்கலானு பார்த்தா பார்வதி எது சொன்னாலும் நம்பமா.
அந்த இடத்தில் முட்டுக்கட்டை போட்டு முடக்கினார் மாடசாமி,
அது வந்து என்னா இந்த செல்லத்துரை அவன் வேலை பார்க்குறா ஊரிலே ஒருத்தியா கல்யாண பண்ணி குடும்பம் நடத்தி கிட்டு இருக்கான்
அது தெரியதா இங்க இவா ராணி மாதிரி எல்லாத்தையும் ஆட்டி படைச்சுட்டு இருக்கா செல்லத்துரை அது மட்டுமா அங்க அவனுக்கு ஒரு மகனும் இருக்கானாம்.
ஓ அப்படியா? செல்லத்துரை பார்த்த அப்பாவி போல ஊருக்கு வரதும் தெரியாது ஊருக்கு போறது தெரியாது.
இத்தெல்லாம் நம்புற மாதிரியே இல்லை பார்வதி.
இதுக்கு தான் நான் உன்கிட்ட எதுவும் சொல்லக்கூடாது பாத்தயா என்னமோ பத்மாவை சிறு வயதிலிருந்து எனக்கு பிடிக்காது மாதிரியும் என்னையா கூலிக்காரருக்கு கட்டி கொடுத்தும், பத்மா அந்த காலத்திலேயே போலீஸ்காரர் கட்டிக் கொடுத்தாங்க அதா நினைச்சு அவ குடும்பத்தை பத்தி தவறா சொல்லுறது மாதிரிலா நினைக்கிறது.
என்ன அது தான் உண்மா. செல்லத்துரை பொண்டாட்டி ஒரு பத்ரகாளி அவனுக்கோ ஒரு ஆண் குழந்தை பெண் குழந்தையென இரண்டு குழந்தைகள் இருக்கு. செல்லத்துரை ஊர் அறிந்த உத்தம்.
யாரவது உதவி என்று கேட்டால் உடனே செய்யும் பண்பு உடையவன்.
அவனா போய் நீ சொல்றது மாதிரி நினைச்சு பார்க்க கூட வெறுப்ப இருக்கு பார்வதி.
எப்ப நினைக்காத என்று முகத்தை சுழித்து வாயில் இருந்து எச்சியை வெளியில் உமிழ்ந்தாள் பார்வதி.
மாடசாமி இது மகன் இது மாதிரி ஏதும் பண்ணிருப்பனோ இது அந்த காலத்திலேயே வீட்டு ஓட்டை பிரித்து ஓடி போய் இது முனிசாமிவே கட்டி கிச்சு. அது மட்டுமா அவே அம்மா சோறே போடமாக சாக வச்சா ஆளு தானா இது.
ஊருக்குள்ளே வேற அர போரசலா இது மகன் தான் வெளியூலா ஒருத்தி கல்யாணம் பண்ணி வைச்சுருக்கான் சொன்னாங்க.
இதுவா இது மகனுக்கு உலகத்திலா இருக்கிற எல்லா பழக்கமும் உண்டு என்று தன் மனத்திற்குள்ளேயே முணுமுணுத்தான் மாடசாமி.
என்னடா என்ன யோசனை என்றாள் பார்வதி.
அது ஒன்னுமில்லை…..
முகத்தை ஒரு வெட்டு வெட்டி அந்த இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்தாள் பார்வதி.
மாடசாமி தனது வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் எதிரில் செல்லத்துரை அம்மா! அம்மா என்று கூறி அழுதுக்கொண்டே வந்தான்.
தம்பி செல்லத்துரை, அழுகாதப்பா அம்மாவுக்கு ஒன்னுமில்லை. செல்லத்துரை ஓடி வந்து அணைத்துக் கொண்டான் மாடசாமியை. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான் மாடசாமி.
பிறகு இருவரும் செல்லத்துரையின் வீட்டிற்கு சென்றன.
கயிற்றுக் கட்டிலில் தளர்ந்த உடலில் மாரப்பில் சேலையை இழுத்து அணைத்து உறங்கினாள் பத்மா.
அம்மா அம்மா என அழைத்தான் செல்லத்துரை
மெதுவாக கண்களை தேய்த்து கண்களை விழித்து விழித்து பார்த்தாள். சற்று மங்கலாக தெரிந்தது.
யாருப்பா நீ என்றாள்.
மனதில் இறுக்கமான மன நிலையுடன் ஏதும் பேசாது அம்மாவை வெறித்து பார்த்தான்…. அவனது பால்யங்களின் நினைவாய் சற்று கடந்த அனுபவங்களை நினைத்து பார்த்தான்.
தன் அம்மா தனக்காக எவ்வளவு விஷயங்களை செய்ததையும், தன் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததையும், தன்னை
இந்த உயர்ந்த மனிதனாக்கி பார்க்க வேண்டுமென்பதற்கு அவள் செய்த ஒப்பற்ற செயல்களையும் மனதில் நிழலாய் ஓடி மூளையை சலசலக்காக வைத்தது.
அவை அனைத்தும் மனதில் இறங்கி மன வலியை கூட்டிக் கொண்டே இருந்தது…. பிறகு ராதாவிடம் உங்கப்பா டீ வேண்டுமா என்ற கேளு ராதா செல்லமுத்திடம் சென்று அப்பா டீ என்று ஆரம்பிப்பதற்குள் செல்லமுத்துவிற்கு உதடுகள் உலற ஆரம்பித்தது.
பேச வார்த்தையின்றி தவித்து அய்யோ அம்மா
பூமிக்கு பிளக்க கத்தி அழுதான்
நான் தான் செல்லத்துரை வந்திருக்கிறேன் அம்மா கண்களில் ததும்பி ஆறு போல நீர் வழிந்து ஓடியது. தனது அம்மாவை வாரி அணைத்து கொண்டான்.
பத்மா வாயில் வார்த்தைகள் நிற்க பேச உதடுகள் தடுமாறி திகைத்து திகைத்துப் பார்த்தாள்.
என்ன எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்தா. வயதான காலத்தில் உன்னை பார்த்துக் கொள்ள முடியாது ஒரு பாவி இருக்கேன் அம்மா.
கைகளில் சுருக்கங்கள் நிறைந்திருந்தாலும் மனதில் எந்த ஒரு நெருடும் இல்லை. மகனை ஒரு நூறு தடவையாவது தடவி தடவி பார்த்து ரசித்தாள் பத்மா.
செல்லத்துரை மனைவியோ இவர்களும் அவளுக்கும் சம்பந்தம் இல்லாத ஆள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பத்மா ரவி, ராதா பார்த்து கூப்பிட்டாள். அவர்கள் இருவரும் அவர்களது அம்மாவை பார்த்தனார்.
இப்ப என்னமோ புதுசா பாசம் வருது போல பேரன்,பேத்தி மேல் போங்க இல்லைனா உங்க அப்பா இதுக்கும் ஏதாச்சும் குறை சொல்வாரு
பிறகு இருவரும் பத்மா விடம் போய் நின்றனர். உடனே பத்மா பேரன் கையும், பேத்தி கையும் பிடித்து கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீரை விட்டாள் பத்மா
என் மகனை நல்லப்படியாக பார்த்துக்கோங்க…. அதற்கு மெதுவாக தலையசைத்து நின்றனர்
செல்லமுத்து நீ உன் குடும்பத்தை நல்லப்படிய பாத்துக்கணும் எதை நினைச்சும் கவலைப்படாதப்பா….
பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வையு நல்ல இடத்திலா என் செல்ல பேத்தி ராதா கட்டிக் கொடுப்பா
வீட்டிற்குள்ள ஒரு தாழிப்பானை இருக்கேலா அதை மெதுவா நீயும், ரவியும் அத எடுத்து வாங்க என்றாள் பத்மா
வேகவேகமாக சென்று அதை எடுத்து வந்து பத்மாவிடம் கொடுத்தனர்
அதை திறந்த போது அதில் பழைய தங்க நகைகள் நிறைய இருந்தது அதையெல்லாம் எடுத்து ராதாவிடமும், தன் மகனிடமும் கொடுத்தாள் பத்மா
பத்மா கையசைத்து மருமகளை அருகில் வர சொன்னாள்
அதுவரை தள்ளிலிருந்து எட்டிப் பார்த்த மருமகள் அருகில் வந்து நின்றாள். அதிலிருந்து மீதி நகைகளை எடுத்து மருமகள் கையில் கொடுத்தாள் வாயடைத்து போன மருமகள் அடிக்கடி இந்த தாழிப்பானைவே உற்று உற்று பார்க்கும் அப்ப சேதி இதுதானா என மனதிற்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்
கனத்து இதயத்துடன் உரத்த குரலில் அம்மாயென செல்லத்துரை அழைத்தான் “கண்களில் நீர் ஆறு போல பெருகி ஓடியது”.
மெதுவாக கைகளைக் அசைத்து செல்லத்துரை அருகில் சென்று பத்மாவின் முகத்தோடு முகம் வைத்து கொட்டி தீர்த்தான் அழுகா மகனே அழுகா எனக்கு நிம்மதியாக சாவு தான் என்றால் அதற்கு வாயை மூடினான் செல்லத்துரை
நீ நல்ல இருப்பா? உன் குடும்மத்தோடு நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் செல்லத்துரை
சரிங்க அம்மா சண்டை சச்சரவு போடக்கூடாது
அம்மா உங்களுக்குயென்ன வேணும் அம்மா என் செல்லத்துரை கேட்டான்
எனக்கு ஒண்ணும் வேண்டாம் செல்லத்துரை
உங்க அக்காவா ஒரு முறைவாது பார்த்து விட வேண்டும் அல்லது இந்த தோட்டப்பத்திரத்தையாவது அவளுக்கு கொடுக்க வேண்டும் மனதின் நெருடல்களாய் ஓடியது அதை தன் மகன் காதுகளில் முணுமுணுத்தாள் பத்மா….
சரி இதற்கு சுமதி ஒத்துக்கிற மாட்டா செல்லத்துரை அதற்கு செல்லத்துரை அவனது அம்மா காதுகளில் ஏதோ கூறினான்
பத்மாவின் முகம் மலர்ந்தது அப்படியே செய் செல்லத்துரை
உடனே வீட்டுக்குள்ளே சென்று கையில் எதையோ மறைத்து கொண்டு வந்து கொடுத்தான் செல்லத்துரை
கையில் ஒரு பொருளை மறைத்து கொண்டு வந்தான் செல்லத்துரை அதை வந்து பத்மாவிடம் கொடுத்தான்…. அதை வாங்கி பத்மா…
சுமதி இந்த சாவியா பிடி அடுத்து நீ தான் இந்த வீட்டா பாத்துக்கணும் என்றாள்
அதற்கும் தலையை மட்டும் அசைத்தால் சுமதி
சரிங்க அத்தை எந்த தோட்டப் பத்திரம் யாருக்கு கொடுப்பிங்க எங்களுக்காக உங்க ஆசை மகளுக்காக அத்தை
ஏய் சுமதி வாயை அடக்கு என்றான் செல்லத்துரை
அதை என் மகளுக்கே கொடுக்க வேண்டும் என்று மகன் கையைப் பிடித்து அவர்கள் கையில் கொடுத்து விட்டு உயிர் விட்டாள்
அவளின் மரணப் பார்வையானது
நாளைக்கு உனக்கும் இதே நிலைமை வந்து விடக்கூடாது என்று மகனையும்
மகனோ தனது மனைவியைப் பார்த்தான்
மனைவி தனது இறுக்கமான மனத்தை கலைத்தது…. இதயத்தின் ஓரத்தில் இருந்த அன்பை இதயம் முழுவதும் நிரம்பி என்னை மன்னித்து விடுங்கள் அத்தை என்று கதறி அழுதாள்….
இன்னும் பத்மாவின் ஆசை நிறைவேறவில்லை அக்காவிடன் தோட்டப்பத்திரத்தை கொடுக்க முடியவில்லை இரு வருடங்களாகியும் அக்காவை சந்திக்க முடியவில்லை ஆழ் மன நெருடல்களாய் இன்னும் “அம்மாவின் ஆசை”செல்லத்துரையிடம் உறங்கிக் கொண்டிருக்கிறது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings