2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
முன்குறிப்பு: இந்தக் கதை நடந்த வருடம் 1990. இளைய தலைமுறைக்கு இது புதிதாக /புதிராக இருக்கலாம்.
பெரியவன் நாகப்பனுக்கு லெட்டர் எழுத வேண்டும் என்று இரண்டு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த ராஜாத்தி, சின்னவனைக் கூப்பிட்டாள்.
‘தம்பி… மணி… போஸ்ட் ஆபீஸ் போயி ஒரு இன்லான்ட் லெட்டர் வாங்கிட்டு வா… அண்ணனுக்கு ஒரு லெட்டர் எழுதணும்… ரொம்ப நாளாச்சி அண்ணனுக்கு லெட்டர் போட்டு… ‘ என்றாள்.
மணி கிளம்பியவுடன் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாள். ‘இவன் ஒழுங்காக எழுதுவானா… இல்லை திரும்பவும் தப்புத் தப்பாகவே எழுதுவானா ‘
நான்கு வீடுகள் தள்ளி நளினி இருக்கிறாள். அவளும் எட்டாவதுதான் படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. அவளை வரவழைத்து அவளிடமே லெட்டர் எழுதச் சொல்லலாமா என்றும் யோசனை எழ மெல்ல அவள் வீட்டுப் பக்கம் போனாள் ராஜாத்தி.
அவளது தோழி ஒருத்தியைப் பார்க்க அவள் வெளியே போயிருக்கிறாள் என்று தகவல் கிடைக்க கவலையுடன் திரும்பி வந்தாள் அவள். அதற்குள் மணியும் வந்து சேர்ந்துவிட்டான்.
‘டேய்… ஒழுங்கா எழுதுவியாடா… போன தடவை உங்கண்ணன் வந்தப்போ நல்ல திட்டினான் பாரு… நீ வடக்குக்கு வாடக்குனு எழுதியிருந்தியாம்… பணம் அனுப்புன்னு எழுதறதுக்கு பாணம் ஆணுப்புனு எழுதியிருந்தியாம்… எட்டாவது படிக்கிறே… இன்னும் தமிழு தகிடுதத்தம் போடுதுன்னு திட்டினான்… ‘ என்று புலம்பினாள் அவள்.
‘அம்மா… நீ கவலைப் படாதம்மா… நான் முன்ன மாதிரியெல்லாம் இல்லைம்மா… இப்போலாம் கரெக்டா எழுதறேம்மா… நீ கவலைப் படாதே… ‘ என்று அவளை சமாதானப்படுத்தினான் மணி.
அரைமனதுடன் அவள் சொல்லச் சொல்ல, அவனும் எழுதினான். இடையிடையில் கேட்டுக் கொண்டாள், ‘டே தப்பு இல்லாமத்தானே எழுதறே… மானத்த வாங்கிடாதடா… ‘ என்று.
‘அம்மா… நீ சொல்லும்மா…நான் சரியாத்தான் எழுதறேன்… ‘ என்றான்.
எழுதி முடிக்கும் சமயம் பார்த்து நளினி அங்கே வந்து சேர்ந்தாள்.
‘அத்தை… என்னைப் பார்க்க வந்தீங்களாமே… ‘ என்றாள்.
விஷயத்தைச் அவளிடம் விலக்கிவிட்டு, ‘ ஏம்மா மணி எழுதியிருக்கறதை வாங்கி படிச்சுப் பார்மா… தப்பு இல்லாம எழுதியிருந்தான்னா சரி… ‘ என்றாள்.
லெட்டரை பிடுங்கி வரி வரியாக படித்துப் பார்த்துவிட்டு… ‘அத்தை… ஒரு தப்புக் கூட இல்லை… ‘ என்று கண்களை அகல விரித்தாள் நளினி. ராஜாத்தியும் சந்தோசமடைந்தாள்.
‘சரிடா… லெட்டரை பசை போட்டு ஓட்டிட்டு, அட்ரஸ் எழுதிட்டு கொண்டுபோய் தபால் பெட்டில சேர்த்திடு… ‘ என்றுவிட்டு வேறு வேலைகளை பார்க்கப் போய்விட்டாள் ராஜாத்தி.
இந்த மாதம் ஆயிரம் ரூபாய் சேர்த்து அனுப்பச் சொல்லியிருந்தாள் ராஜாத்தி. அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்.
மறுநாள் தபால்காரர் சைக்கிள் பெல் அடித்துக் கொண்டே வாசலில் வந்த நின்றார். வந்தவர், ஒரு லெட்டரை நீட்டினார். ‘யாருப்பா போட்டிருக்கா.. ‘ என்று இவள் விவான, ‘நாகப்பன்மா’ என்றுவிட்டு அவர் போய்விட்டார்.
நம்ம லெட்டர் போய்ச் சேர்றதுக்கு முன்னாடியே தம்பியும் லெட்டர் போட்டிருக்கான் போல என்று நினைத்துக் கொண்டே லெட்டரை வாங்கிக்கொண்டாள் ராஜாத்தி. அதேசமயம் நளினி அந்தப் பக்கமாய் வர, அவளை விட்டு லெட்டரைப் பிரித்து படிக்கச் சொன்னாள். லெட்டரை பிரித்து படித்தாள் நளினி.
‘அன்புள்ள மகன் நாகப்பனுக்கு அம்மா எழுதிக்கொள்வது… ‘
திகைத்தனர் இருவரும். நளினி சொன்னாள், ‘அத்தை… மணி எழுதின அதே லெட்டர்…‘ என்றவள் திருப்பிப் பார்த்துவிட்டு, ‘மணிப்பையன் அட்ரஸை மாத்தி எழுதிட்டான்… அதான் உங்களுக்கே திரும்பி வந்திடுச்சு… ‘
பின்குறிப்பு: மணி வந்தவுடன் ஒரு பிடிபிடிக்க கோபத்துடன் காத்திருக்கிறாள் ராஜாத்தி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை
நன்றி…நன்றி…
மிகவும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.