2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
பாந்திராவிலிருந்து, காந்திவிலிக்கு ஆட்டோ பிடித்து பொய்சரிலிருந்த புனித பாத்திமா மாதா தேவாலயத்திற்கு அருகில் இறங்கினான்.
ஆலயத்திலிருந்து வெளியே வந்த பெரியவரிடம், “நியூடெக் அனிமல் ஃபூட் புராடெக்ட் கம்பெனி எங்கே இருக்கிறது?” என்று கேட்டான்.
“அடுத்தத் தெருவில் முதல் கட்டிடம்” என்றார் பெரியவர்.
அந்தக் கட்டிடம் வந்த போது, நியூடெக் புதிதாக திடீர் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி என்று புரிந்தது.
உள்ளே வந்து ‘திலக்’ என்று ஒரு வேலையாளிடம் கேட்டபோது ”மூட்டை கட்டும் (பாக்கிங்) செக்சனில் நின்று கொண்டிருக்கிறார்” என்று இந்தியில் சொல்லி விட்டுப் போனான்.
அடுத்த பாக்கிங் செக்ஷனுக்கு வந்தபோது. ’இவந்தான் திலக்காக இருக்க வேண்டும்’ என்று அருகில் வந்தவுடன், “வாருங்கள் அரசு. நீங்கள் வரப்போவதாக தீபக் சொன்னார்” என்றான் திலக்.
“பரவாயில்லை தீபக். இவ்வளவு எனக்காக உதவி செய்திருக்கிறார். நீங்கள் ரொம்ப பிசி என்றால் வெளியே காத்திருக்கிறேன்.” என்றான்.
“அரசு அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று சொல்லி அருகிலிருந்த குழாயைத் திறந்து கையைக் கழுவிக் கொண்டு பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டு, ”நாம் மராத்தியில் பேசுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே?” என்று கேட்டு விட்டு அரசுவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல், “ஒரு எக்ஸ்போர்ட் ஆர்டர்…. முதல் முதலாக எக்ஸ்போர்ட் ஆர்டர் கிடைத்துள்ளது. அதுதான் நேரடியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஆமாம் வீட்டை விட்டு வந்து விட்டீர்கள். எங்கே தங்கியிருக்கிறீர்கள்.” என்று கேட்டான்.
“அது.. வந்து… “ அரசுவின் தயக்கத்தைப் பார்த்து, “பரவாயில்லை. நான் பக்கத்திலே ஒரு சால் கட்டிடத்தில்தான் தங்கியிருக்கிரேன். கொஞ்சம் கொசுக்கடி அதிகமாக இருக்கும்” என்று தமிழரசின் அனுமதி கூட கேட்காமல் அருகில் நின்ற பியூனிடம், “போய் இரண்டு பிளேட் சாப்பாடு வாங்கிக் கொண்டு வா. ஆபீஸ் மேஜையில் வை. நானும் சாரும் சாப்பிட ஆரேஞ்ச் பண்ணு” என்று சொல்லி விட்டு, “சரி இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.
“இன்னும் முடிவெடுக்கவில்லை. ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்ற முடிவு. வேலை பார்த்து கண்டிப்பாக என் கனவு நிறைவேறாது. வேண்டுமானால் அன்றாடம் சாப்பாடு கழியும். என் குறிக்கோள் எல்லாம் என் அப்பா சம்பாதித்தைவிட அவர் அவரின் வியாபார சாம்ராஜ்யத்தை விட பெரிதாக அவர் முன்னால் செய்து காட்டவேண்டும். அதற்கு ஒரு அடி நுனி… அல்லது ஆணிவேர் தேட வேண்டும். கிளை பரப்ப நாளாகலாம். ஆனால் இது என்ற முடிவில் இறங்கவேண்டும். கனவில் கோட்டைகள் பல இருக்கின்றன. ஆனால் அவைகளை நிஜ சுவர்களாக எழுப்ப வேண்டும்” என்றான் மராத்தியில்
“ரொம்ப அழகா மராத்தியில் பேசுகிறீர்கள். எனக்குக் கூட இவ்வளவு இலக்கண சுத்தமாக மராத்திய மொழி வராது. சரி, என்னிடம் என்ன எதிர்ப்பார்த்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது “சாப்பாடு தயார்” என்றான் பியூன் சந்தீப்.
“வாருங்கள், சாப்பிட்டுக் கொண்டே பேசலாம். சாப்பிடும் போது பேசுவதில் பிரச்சினை இல்லையே. என் அம்மா சாப்பிடும் போது பேசினால் உணவின் ருசி தெரியாது. சாப்பிடும் போது ருசித்து சாப்பிட வேண்டும் என்பார்கள். இங்கே மெஸ் சாப்பாடு அவ்வளவாக ருசிக்க முடியாது. அதனாலே பேசிக்கொண்டே சாப்பிடலாம். கையைக் கழுவுங்கள்” என்று சொல்லி விட்டு மேஜையில் அமர்ந்தான்.
சந்தீப் தட்டில் எடுத்து வைத்த கூட்டையையும் சப்பாத்தியையும் எடுத்துக் கொண்ட போது, “சொல்லுங்கள். ஏதாவது அடிப்படையாக செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணியிருப்பீர்கள். எந்த வழியிலே… அல்லது எந்த விதமான பிஸினஸ் செய்ய வேண்டும் என்று நினக்கிறீர்கள்?” என்று கேட்டான் தீலக் சப்பாத்தியைக் கடித்துக் கோண்டு.
“திலக்… நீங்கள் தீர்க்கமாக சிந்திக்கிறீர்கள். அடிப்படையில் இதுதான் வழி… அல்லது இந்த வியாபாரம் செய்ய வேண்டும்… இதிலே எத்தனை மடங்கு சம்பாதிக்க முடியும் என்று நான் கணக்குப் போட்டு இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. நுனிப்புல் மேய்ந்த கதையாக ஏதாவது வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்போடுதான் இருந்து விட்டேன். இனிதான் முடிவு செய்ய வேண்டும்.”
“சரி முடிவு செய்யாமல் ஒரு விஷயத்தில் இறங்க முடியாதே.?”
“ஆமாம்”
“அப்படியென்றால் உடனடியாகச் சொல்லுங்கள் என்ன வியாபாரம்?”
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings