in , ,

ஏனிந்த கொலை வெறி (பகுதி 9) – சுஶ்ரீ

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தினேஷை பார்த்து விழித்த பாண்டி, “பாஸ் நீங்களும் இந்த கூட்டத்தை சேந்தவரா, எம்.ஜி.ஆர் சினிமா கிளைமாக்ஸ் பாக்கற மாதிரி இருக்கே”

தினேஷால் வெடிச் சிரிப்பை அடக்க முடியவில்லை.பெரியணனும் சேரந்து சிரித்தார்.

“என்னப்பா தம்பி நான் வீரப்பாவா, நம்பியாரா?, ஏய் விடுங்கடா தம்பியை, வா இவர் உன் பாஸா? பங்களாக்கு வெளியே ஏதோ பறக்கற கேமரால ஃபோட்டோ எடுத்தயாமே, அதான் பசங்க எதிர் கட்சி ஆளுனு அடிச்சு தூக்கிட்டானுவ, நான்தான் பாவம்டா ஆஸ்பத்திரிக்கு போய் கட்டுப் போட்டு கூட்டியாங்கடா என்னனு கேப்போம்னேன்”

பாண்டிராஜ் “இல்லை சார் எனக்கு அரசியலே தெரியாது, மம்முட்டி சார் வீடு, இளைய தளபதி விஜய் சார் வீடெல்லாம் இங்கேதான் இருக்குனு என் கேர்ல் பிரண்ட் சொன்னா,அதான் அவங்க வெளில தெரிஞ்சா ஃவீடியோ எடுத்து ஷைலுவை இம்ப்ரஸ் பண்ணி நீலாங்கரை தள்ளிட்டு வரலாம்னு பாத்தேன், இந்த தடியன்க அடிச்சு தூக்கிட்டானுவ” .

பெரியணன்,“மன்னிக்கணும் தம்பி தவறான புரிதல் உனக்கும், எங்க பசங்களுக்கும், இங்கே உக்காரு, சாப்பிட கொடுத்தாங்களா?”

“ஓ சூப்பரான தேவதை சிரிச்சிட்டே பிரியாணி கொடுத்துச்சே, ஷைலுவை கேன்சல் பண்ணிட்டு இதோட இங்கயே செட்டில் ஆயிடலாம் போல இருக்கே, மிஸ்டர் தினேஷ் சக்ரபர்த்தி பிளீஸ் அக்செப்ட் மை ரிசிக்னேஷன், நான் இந்த க்ஷணத்திலிருந்து ஐயாவுக்கும், அந்த தேவதைக்கும் அடிமை”

பெரியணன் மனம் விட்டு சிரித்தார், தினேஷை பார்த்து “வேடிக்கையான பையனா வேலைக்கு வச்சிருக்கீங்களே, வேலை எதுவும் செய்வானா இதே மாதிரி வாயடிச்சிட்டே இருப்பானா? “

தினேஷ்,“விடுங்க சார், அவனை, உங்க நேரத்தை வீணடிக்க விரும்பலை நான், இங்கே பீச்ல ஒரு அசம்பாவிதம் சின்ன ஸ்கூல் கேர்லை கிழிச்சு போட்டுட்டானுக,கமிஷனர் உத்தரவுப் படி ஆரோக்யசாமி சாருக்கு உதவியா வேலை செய்றேன், அப்படியே மரியாதை நிமித்தமா உங்களையும் பாக்கலாம்னு வந்தேன்”

“உன் பேரு என்ன தம்பி, ஏதோ ‘தினேஷ் பத்தி’இல்லை? பெரிய ஜேம்ஸ்பாண்ட் கணக்கானு கேள்விப் பட்டேன், சரி என்னிடம் என்ன எதிர்பாக்கே சொல்லு, மக்கள் சேவை என் தலையாய கடமை”

“வேற ஒண்ணும் இல்லை சார், உங்களுக்கு சுந்தரேச ஜோதிடரை தெரியமா, திருமழிசை மாந்த்ரீகர் உன்னி நாயரை தெரியுமா?”

யோசனையுடன் தாடையை தடவிக் கொண்ட பெரியணன், பேரு கேட்ட மாதிரிதான் இருக்கு ஞாபகம் வரலையே.

நடவுல புகுந்த பாண்டி, “சார் அந்த சுந்தரேச ஜோதிடர் வொய்ப் கூட நம்ம நமிதா கணக்கா கிச்னு இருக்குமே”

தினேஷ்,“பாண்டி உன் விளையாட்டு , ரசிக்கற மாதிரி இல்லை, தமிழ் நாட்டின் பெரிய அரசியல் தலைவர் முன்னால இருக்கோம்னு ஞாபகம் வை”

பாண்டி,“இல்லை கொஞ்ச நாள் முன்னால ‘மக்கள் மனம்’ பத்திரிகைல ஒரு கிசு கிசு படிச்ச ஞாபகம்” தினேஷின் முறைப்பை பாத்து வாயை கையால் பொத்திக் கொண்டான்.

பெரியணன்,“விடுங்க வயசு பசங்களுக்கு இப்பல்லாம் யார் தலைவர், யார் கயவர் என புரிவதில்லை, தமிழ்நாடு தத்தளிப்பதின் காரணமே தகுதியில்லாதவர்களின் தேர்வு, அவர்களை இனம் பிரிக்கத் தெரியாத இளைஞர் கூட்டம் இதுதான்”.

தினேஷ்,“ஐயா நீங்கதான் அவங்க ரெண்டு பேருக்குமே ஸ்விச்சர்லான்ட் பேமஸ், குக்கு கடிகாரம் கொடுத்தீங்க போல இருக்கே”

ஹா ஹா என சிரித்த பெரியணன் ,“என் விசுவாசி ஒருத்தன் ஸ்விஸ்ல இருந்து 12 கடிகாரம் அனுப்பினான் கார்பரேட் கிப்ட் கொடுக்க, என்னை பாக்க வர பல பேருக்கு அதை போன வருட அன்பளிப்பா கொடுத்தேன் அதுக்கும் உன் துப்பறியற வேலைக்கும் என்ன சம்பந்தம்”

பாண்டி, “ யார் சார் அந்த விசுவாசி உங்க ஸ்விஸ் அக்கவுன்ட் ஏஜன்டா?”

பெரியணன் அவன் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாமல் அலட்சியம் செய்தார். சரி ஆரோக்யசாமிதான் அமைதியாயிட்டாரு சீக்கிரமா இந்த கேசை முடிங்க அடுத்து நம்ம ஆட்சி வரதுக்குள்ளே.இந்த நீலங்கரை ஏரியால இது தொடரக் கூடாது என் உதவி எப்பவும் உண்டு, வணக்கம்

ஆரோக்யசாமி சார் உங்களுக்கு கிருஸ்த்மஸ் வாழ்த்துகள், அவர் சொல்லி முடிக்கும் முன் ஒரு டிரேயில் ஒரு அழகான பையில் ஸ்காட்ச் பாட்டிலை சுமந்து ஒரு வெள்ளை யூனிபார்ம் பட்லர் ஆரோக்யசாமியிடம் பவ்யமாக நீட்டினான்.

அப்ப பாக்கலாம், வர தேர்தல்ல நம்ம கட்சியை ஜெயிக்க வைங்க சொல்லிக்கொண்டே பேட்டி நேரம் முடிந்தது என சொல்லாமல் சொன்னார்.

பாண்டி,“சார் என் ஓட்டு உங்களுக்குதான், நீங்கதான் அடுத்த முதலமைச்சர், ஜெயிச்சவுடனே அந்த சிவப்பு மச்ச தேவதையை எனக்கு உயில் எழுதி கொடுத்துடுங்க”

பெரியணன் உள்ளே மறைந்து போனார், எங்கோ ஒரு கதவு திறந்து மூடியது குப்பென சந்தனம்,           ஊது பத்தி, சாம்பிராணி, சூடம், மலர்கள் கலந்த புது மாதிரி வாசனை நாசியை தாக்கியது

இரண்டு பயில்வான்கள் அவர்களை கேட் வரை வழி நடத்தினர். இப்ப அந்த சிரிக்கத் தெரியாத செக்யூரிடி கண்ணில் படவில்லை.

வெளியே வந்தவுடன் ஆரோக்யசாமி கையில் இறுகப் பற்றிய பையுடன் நான் ஸ்டேஷன் போறேன்னு புறப்பட்டார்.

அந்த மூணு நட்சத்திர போட்டை சுற்றியே வந்து கொண்டிருந்த பாஸ்கரை நோக்கி நடந்தனர் தினேஷும் பாண்டியும். டே வாடா பாஸ்கர் போலாம் ஆபிசுக்கு, அவங்க அவங்க வண்டியை………சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எங்கிருந்தோ “ஏய் என் கோலி சோடாவே, என் கறிக்குழம்பே உன் குட்டி பப்பி நானே” பாடல் பளிச்சென கேட்டது.

பாண்டி,” ஐ ரெளடி பேபி சாய் பல்லவி இதுல அல்வா பாஸ்.”                                                                     

தினேஷ்,“அல்வா காரச்சேவெல்லாம் இருக்கட்டும் எங்கே இருந்து சத்தம் வருது பாரு.”

பாண்டியும் , பாஸ்கரும் அந்த போட்டை சுற்றி வந்தனர, பாண்டி கையில் கிடைத்தது ஒரு காலி சிகரெட் பாக்கெட் சென்னையில் சாதாரணமாக பார்க்க கிடைக்காத பிராண்ட்.” பாஸ் இந்த காலி பாக்கெட் கூட கவி பாடுமா?”

அவன் கையிலிருந்த காலி பாக்கெட்டை மேலும் கீழுமாய் பாத்த தினேஷ், “இது கென்ட் பிராண்ட்            ஏர் போர்ட்ல இல்லை ஸ்டார் ஹோட்டல்லதான் கிடைக்கும்” சொல்லிக் கொண்டே தன் பாக்கெட்டில் போடும் போது மீண்டும்,

“ஏய் என் கோலி சோடாவே, என் கறிக் குழம்பே, உன் குட்டி பப்பி நானே” இப்ப கொஞ்சம் கரகரத்த குரலில்.

பாஸ்கர்,“பாஸ் இந்த போட்ல இருந்துதான் சத்தம் வருது”சொல்லிக் கொண்டே பக்க வாட்டில் தொங்கிய டயரில் கால் வைத்து போட்டுக்குள் தாவினான்.

தினேஷ் ஒரு வித பெருமை குரலில் தொனிக்க,“சரியான குரங்கு பசங்கடா என்னனு பாரு”

உள்ளே இருந்து சத்தம் வந்தது ,”பாஸ் சாம்சங் கலாக்சி எம் 51 மெல்ல செத்துட்டிருக்கு”

அடுத்த சில வினாடிகளில் அந்த மொபைலுடன் பீச் மணலில் படகின் விளிம்பிலிருந்து குதித்தான் பாஸ்கர்.

மொபைலை வாங்கி பாத்தார் தினேஷ், பேட்டரி பவரை வேகமாய் இழந்து உயிர் போகும் நிலை,                புது ஃபோனில் எண்ணற்ற கீரல்கள்.

புன்முறுவல் தோன்றியது தினேஷ் முகத்தில், “ அட்லாஸ்ட், சம் க்ளூ”.

நீலாங்கரை விட்டு தனித்தனியே சென்னை நகர் நோக்கி புறப்பட்டனர் மூவரும்.

நைனியப்ப நாயக்கன் தெரு , டிடெக்டிவ் தினேஷின் அலுவலகம், லதா தன் இருக்கையில் அமர்ந்து தன் நகங்களை ஆராய்நது கொண்டிருந்தாள்.

சட்னு அந்த அறையை அதிர வைத்தது ஃபோன் சத்தம். போனை நிதானமாக எடுத்த லதா, “ சக்ரபர்த்தி டிடெக்டிவ் சர்வீஸ்”என்றாள்,

ஆங்கிலத்தில் பட படவென யாரோ ஒன்றும் புரியவில்லை, ரிகார்டரை ஆன் செய்வதற்குள் இணைப்பு துண்டிக்கப் பட்டது, கேர்புல், ரேசர் பிளேட், கமிங் சூன் இந்த வார்த்தைகள் தெரிந்தன.திடீரென அறைக்குள் சிகரெட் மணம்லேசாக வந்தது.

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 தொடரும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நசுக்கப்பட்ட இளைய தலைமுறை (சிறுகதை) – முகில் தினகரன்

    முள் பாதை (அத்தியாயம் 14) – பாலாஜி ராம்