இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலிங்பெல் அழுத்தின அடுத்த நொடி ஒரு கட்டை குட்டையான புளி மூட்டை மாதிரி ஒருவர் சிரித்த முகமாய் கதவை திறந்தார்.
இவர்களை பாத்து கொஞ்சம் திகைத்தார், முன்னறையிலிருந்த குக்கு கடிகாரம் பறவையை வெளியே அனுப்பி 12 முறை குக்கியது.
அவர், நீங்கனு இழுக்கும் போதே அவரை லேசாக விலக்கியவாறு உள்ளே நுழைந்த தினேஷும், பாஸ்கரும் மாந்திரீகரை பாக்க வந்தோம்னு உள்ளே நுழைந்தனர்.
“குருஜீ பூஜைல இருக்கார், அரை மணி நேரம் ஆகும் அப்பாயின்ட்மென்ட் இல்லாம யாரையும் பாக்க மாட்டார்”.
தினேஷ் சிரித்துக் கொண்டே “எல்லாம் பாப்பார், சென்னை போலீஸ் கமிஷனர் அனுப்பின ஆள்கள் வந்திருக்காங்கனு போய் சொல்லு”,
அந்த சிஷ்யனின் முக மாறுதல் வேடிக்கை , உக்காருங்க சார், குருஜீ கிட்ட சொல்றேன்.
கிட்டத் தட்ட 20 நிமிஷ காத்திருப்புக்கு பின் , தூக்கி முடியப்பட்ட மலையாள கொண்டை,சந்தனம் பூசிய கரடிக்குட்டி முடியோட அகன்ற மார்பு, கொஞ்சம் பயம் தரும் அகண்ட கண்கள் (கண் மை பூசி இருப்பாரோ), சுமார் உயரம், சிவந்த நிறம் கொண்ட உன்னி நாயர் இரு கரம் குப்பியவாறு வந்தார்.
உக்காருங்கோ கமிஷனர் அனுப்பினாரோ? என்னால ஆனதை செஞ்சு கொடுக்கறேன், யாராவது தொல்லை கொடுக்கறாளோ, சொல்லுங்கோ.டே குட்டச்சா லெமன் ஜூஸ் கொண்டு வா. மட மடவென பொரிந்து கொண்டே எதிரில் அமர்ந்தார்.
அதற்குள், இரண்டு கிளாஸ் டம்ளரில் லெமன் ஜூஸ் புளி மூட்டை குட்டச்சனால் கொண்டு வரப்பட்டது.
பாஸ்கருக்கு மலையாள மாந்ரீகர்னாலே அலர்ஜி, அதுவும் எலுமிச்சை ஜூஸ்னா வேண்டாம் ரிஸ்க்னு தொடலை.
தினேஷ் லெமன் கிளாசை சப்பிக் கொண்டே ஒண்ணும் இல்லை ஐயா, இங்கே பக்கத்துல ஒரு சின்ன பொண்ணு மர்டர், 4 நாள் முன்னாலேயும் சென்னைல ஒரு சின்னப் பொண்ணு இதே மாதிரி.
நாயர் உடனே,“அடடா இந்த கொலை தேடற பொறுப்பெல்லாம் எண்ட பகவதிக்கோ, சாத்தானுக்கோ கொடுக்றதில்லை நான் அது என் மாந்த்ரீக சக்திக்கு தப்பாயிடும், வேற காரியம்னா சொல்லுங்கோ”.
“இல்லை நீங்க கொலை விஷயமா உதவி பண்ண வேண்டாம், ஆமாம் ஸவிட்சர்லாண்ட் சமீபத்துல போயிட்டு வந்தீங்களா சாமி?”
நாயர் “ இல்லையே இந்த பூத உடல் கடலை தாண்டி போக பகவதியோட அனுமதி இல்லை”.
அப்ப இந்த குக்கு கடிகாரம்னு இழுத்தார் தினேஷ். நாயர்,
“அதுவா அது ஒரு பக்தரின் அன்பளிப்பு”
யார் பெரியணனா? நாயரின் முகம் மாறியது. இந்த மாதிரி சின்ன விஷயங்களை பானுமதி கவனிக்கிறாள், டொனேஷன்,வெகுமதி, பரிசு பொருள் இதெல்லாம் நிர்வாகம் பண்ற பொண்ணு அவளை நீங்க தேவைன்னா கேக்கலாம்.
தினேஷ்,“தேவையில்லை அவரோட கட்சி ஸ்டிக்கர் தெரியுதே, பெரியணனை உங்களுக்கு தெரியுமா?”
நாயர் ,”எத்தனையோ பேர் வருகிறார்கள, ஏதாவது பூஜை செய்ய எல்லாரும் எனக்கு ஞாபகமில்லையே” ,
“அப்படியா உங்க பகவதியை நாங்க தரிசிக்கலாமா?”
வாங்கனு பூஜை அறைக்கு கூட்டிட்டு போனார், நுழையறதுக்கு முன்னால கை கால் சுத்தம் செய்து கொள்வது கட்டாயம்.
அது ஒரு இருட்டான அறை, எண்ணை விளக்குகள் மட்டும் இரண்டு உயர்ந்து நின்று வெளிச்சம் தந்து கொண்டிருந்தது.
பெரிய பீடம் மரத்தால் செய்தது அதில் நடு நாயகமாக பகவதி அம்மன், அதற்கு முன்னால் பெரிய பித்தளை தட்டு நெல் பரப்பப் பட்டு நடு நாயகமாக ஏதோ மாவினால் செய்யப்பட்ட ஒரு உருவம், இரண்டு வேல் போன்ற குச்சிகள் குத்தப் பட்டு.முன்னால் குடுமி இல்லாத தேங்காய் தாமிரச் சொம்பின் மேல் மூன்று கண்களும் தெரிகிறார்போல. அந்தக் கண்கள் குங்குமம் சந்தனத்தால் அடைக்கப் பட்டிருந்தது.அறை முழுவதும் சந்தனம்,ஊது பத்தி, சாம்பிராணி, சூடம், மலர்கள் கலந்த புது மாதிரி வாசனை நெடி ஏறியது.
ஒரு வாழை இலையில் வெள்ளை உழுந்து பரப்பி அதில் மலையாளத்தில் ஏதோ எழுதி இருந்தது. அதை சுற்றி ரெண்டாக வெட்டப் பட்ட எலுமிச்சம் பழ மூடிகள் ரத்த நிற குங்குமத்தை அப்பிக் கொண்டு, ஒரு பெரிய முழு எலுமிச்சம் பழம்.
தினேஷ் கண்ணை காட்ட, பாஸ்கரின் பட்டன் கேமரா அனைத்தையும் அமைதியாக பதிவு செய்து கொண்டது.
மன அமைதி தர வேண்டிய பூஜை அறை மனதை கசக்கி பிழியும் ஒரு பய உணர்வை தந்தது, சட்டெனஅந்த சூழ்நிலையை விட்டு விலக மனம் விளைந்தது.
நாயரிடம் விடை பெற்றக் கொண்டு சரி மாந்ரீகரே தேவைப் பட்டால் மீண்டும் சந்திப்போம்னு வீட்டிற்கு வெளியே வந்தனர்.பின்னால் கதவு பட்டென சாத்தப் பட்டது.
காருக்கு வரும் முன்னரே தினேஷின் கை பேசி அலறியது. லதா, பாஸ் , பெரியணன் சார் அப்பாயின்ட்மென்ட் கான்சல் பண்ணிட்டார் ஏதோ அவசர வேலையாம்.
சரி பாப்போம்னு ஃபோனை வைக்கவும்,அடுத்த ஃபோன் கமிஷனர் ஜான் சக்திவேல் கிட்ட இருந்து, சக்ரபர்த்தி விஷயம் கேள்விப் பட்டீங்களா, ஒரு மணி நேரத்துக்கு முன்னால நீலங்கரை கடற்கரையில் மற்றொரு இளம் ஸ்கூல் மாணவி பிணம், ஏறக்குறைய அதே பேட்டர்ன்,யாரோ மனோநிலை சரியில்லாதவன் வேலையாதான் இருக்கணும் பாருங்க டிபார்ட்மென்ட்டுக்கு பெரிய சவால் இது சீக்கிரம் நிப்பாட்லைனா எத்தனை கொலை விழும் தெரியலை.
அவர் ஃபோன் கட் பண்ணவும், மீண்டும் லதா ,“பாஸ், பாண்டி சீரியசா அடி பட்டு நீலாங்கரை கவர்மென்ட் ஆஸ்பத்திரில கிடக்கிறானாம்”
பாஸ்கர் பைக்கை இங்கேயே ஓரிடத்தில் வை, நீலாங்கரை சூடாகுது இப்ப நீ எங்கூட கார்லயே வா…நீலாங்கரை ….வி ஆர் கமிங்.
இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings