இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அடுத்த பத்தாவது நிமிஷம் திருமழிசை போலீஸ் ஸ்டேஷன் லாக் அப்ல.தினேஷ் சாரை கான்டாக்ட் பண்ண கூட வழி இல்லை, கைபேசியை பிடுங்கி வைத்து விட்டனர். வேற வழியில்லை தினேஷ் சார் தேடி வர வரை.
சப் இன்ஸ்பெக்டர் வைரவன் 11 மணி வாக்கில் ஸ்டேஷன் திரும்பினார்.முகத்தில் களைப்பு தெரிந்தது,
பாடியை திருவள்ளூர் அரசு ஹாஸ்பிடலுக்கு போஸ்ட் மார்ட்டம் அனுப்பும்முன்,மேலதிகாரிகளை கலந்தாலோசித்து, டெக்னீஷயன்களை வரவழைத்து தடயம சேர்த்தது, மூக்கில் வேர்த்து வந்த பத்திரிகை நிருபர்களை சமாளித்து அலுத்துப் போய் வந்திருந்தார்.
உக்காந்தவுடனே மேஜை மேலிருந்த ஃபோன் அலறியது.லைனில் கமிஷனர், நேரடியாக பேசினது பீதியை கிளப்பி இருந்தது,
“மிஸ்டர் வைரவன்,இது ரீசன்ட் மயிலாப்பூர் மர்டர் பேட்டர்ன்ல இருக்கு. தீர விசாரிங்க, உதவிக்கு சென்னை போலீஸ் கிட்ட கேக்கலாம், சரியா”, என்ற உறுமலுடன் ஃபோனை கட் பண்ணினார், இவர் பதிலுக்காக காத்திருக்காமல்.
பேண்ட் பாக்கெட்ல இருந்து கர்சீப் எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார். இப்ப ஸ்டேஷன் சுறுசுறுப்பாய் தெரிந்தது, ஓய் ரைட்டர் லாக்அப்ல இருந்து அந்த பையனை கூப்பிடு, இப்ப கக்க வைக்கிறேன் உண்மையை,
பாஸ்கர் வரவழைக்கப் பட்டான். வைரவன் முகத்தில் புன்முறுவல்.
“ஏய் பயில்வான் உன் பேர் என்ன சொன்னே”,
ரைட்டர் பக்கத்தில் அமர்ந்தார் குறிப்பு எடுக்க.
“பாஸ்கர் சார்”,
“ஓ, பாஸ்கர், உங்க பைக் வாசல்ல நிக்கற ஹோண்டாவா?
“ஆமாம் சார்.
“சரி முதல்ல இருந்து நடந்ததை சொல்லுங்க.”
“காலைல 6மணிக்கு சென்னை பெரிய மேட்ல இருந்து புறப்பட்டேன், பக்கத்துல பெட்ரொல் பங்க்ல 5 லிட்டர் பெட்ரொல் போட்டேன். நேரா பூந்தமல்லி ஹைவே புடிச்சு வந்தேன் நடுவுல ஹோட்டல் சங்கீதால டிபன் சாப்டு வண்டி ஏறினேனா கொஞ்சம் ஸ்பீடு, நாய் குறுக்கே வந்து பைக் கிணத்து சுவர்ல மோதி, நான் எழுந்து அந்த பிணத்தை பாத்து, போலீஸ்ல ரிபோர்ட் பண்ணி, லாக்அப், இப்ப நானே கொலை பண்ணிட்ட மாதிரி உங்க முன்னாலே. “
மூச்சு விடாமல் சொல்லி நிறுத்திய பாஸ்கரை பாத்த வைரவன்
“என்ன கதை எழுதறவனோ நீ?
“திடீரென ஒருமையில் “ஏண்டா பொய் கூட ஒழுங்கா சொல்ல மாட்டேன்றீக,காலங்காத்தால திருமழிசைல என்னத்தை பிடுங்க வந்தே?நீ யார் ஸ்டூடன்டா?, ரெண்டு கொலைதான் பண்ணினயா வேற ஏதாவதா?அரிப்பெடுத்தா தேவடியா கிட்ட போறதுதானே , ஸ்கூல் குழந்தைங்களை ஏண்டா அலங்கோலம் பண்றீக?நடுவுல ரைட்டரை பாத்து உறுமல் இதையெல்லாம் பதிவு பண்ணாதீரும்.
பாஸ்கர் பொறுமை இழந்து ,” என்னை பேச விடுங்க மிஸ்டர். வைரவன்”
சப் இன்ஸ்பக்டர் கை நீளும் முன் பாஸ்கர் சுதாரித்து எழுந்தான்.
ஏய் ஒன்நாட் சிக்ஸ் இந்த ஆளை சோதனை போட்டயா? எடுத்த சாமானை டேபிள் மேல வை.
ஒன்நாட் சிக்ஸ் பாஸ்கரோட உடைமைகளை மேஜையில் பரப்பினார், வாட்ச், பர்ஸ், வில்ஸ் பாக்கெட், சிகரட் லைட்டர், கர்சீப், பாக்கெட் சீப்பு, ட்யூரெக்ஸ் காண்டோம் பாக்கெட்,பைக் சாவி, கடைசியா ஒரு விக்டரி நாக்ஸ் பாக்கெட் கத்தி.
தன் முன்னாலிருந்த பொருட்களை லத்திக் குச்சியால் தள்ளி நிதானமாய் பாத்தார் வைரவன். இப்போது எல்லாம் தெரிந்து கொண்ட புன் முறுவலோட பாஸ்கரை பாத்தார்.
ஓ ஸ்விஸ் கத்தியா இது? ரொம்ப ஷார்ப்பா இருக்குமே, கர்சீப்ல ரத்தத்தை துடைச்சிகளோ ரத்தமா தெரிதே, ட்யூரெக்சுக்கு ஒத்துக்கலைனு கிழிச்சிட்டீரோ,படு பாவி ,குழந்தை ஐயா அது”
பாஸ்கர் இப்ப கொஞ்சம் டென்ஷன்ல, “சார் நான் போலிசுக்கு நண்பன், இந்த மாதிரி மட்டமான காரியம் செய்ற ஆளு இல்லை, என் பாஸ் இப்ப வருவார், அவர் கிட்ட கேளுங்க”.
வைரவன்,“அட பாஸ் வேறயா இதுல, கூட்டுக் களவாணியா?”
சொல்லும் போதே சிவப்பு மாருதி வேகனார் ஸ்டேஷன் வாசலில் நின்றது, கம்பீரமாய் உள்ளே நுழைந்தான், தினேஷ் சக்ரபர்த்தி.
அவரை பார்த்த வைரவன் தன்னால் எழுந்து நின்றார்.” என்ன வைரவன் நம்ம பையன் பாஸ்கர் என்ன சொல்றான்”
வைரவன் “தினேஷ் சார் நீங்க இங்கேன்னு இழுத்தார்.
“ஒரு வசதியான இருக்கையை இழுத்து உக்காந்த தினேஷ், “நான்தான் இவனை திருமழிசை அனுப்பினேன், என்ன ஏதும் பிராப்ளமா?”
சப்இன்ஸ்பெக்டர்,“இல்லை சார், இவர் உங்க பையன்னு சொல்லவே இல்லை செஞ்சது எல்லாம் சந்தேகமா இருந்ததாலே மரியாதையாதான் ரெகுலர் விசாரணை.”
தினேஷ்,“இதே மாதிரி மயிலாப்பூர் மர்டர் நடந்தது தெரியுமா அது விஷயமான விசாரணைல நாங்க கமிஷனருக்கு உதவி பண்றதா ஒத்துட்டிருக்கோம் அந்த லிங்க்லதான் பாஸ்கரை இங்கே அனுப்பினேன்,இப்ப என் சொந்த பொறுப்புல இவனை கூட்டிட்டு போறேன், எப்ப வேணா கூப்டா வருவான்.”
பாஸ்கரை பாத்து,”எதுலயாவது கையெழுத்து போட்டயா? “
“இல்லை பாஸ்.”சரி வா நாம ரெண்டு பேருமே சேந்து மாந்ரீகர் உன்னி நாயரை பாப்போம்.“என்ன நாங்க போலாமா வைரவன்?
“எஸ் சார், சாரி ஏதாவது தப்பா பேசி இருந்தா கமிஷனர் சார் கிட்ட தயவு பண்ணி பெரிசாக்கிடாதீங்க.
தினேஷ், சிரித்துக் கொண்டே வைரவனின் தோளை தட்டினார்.
சிவப்பு மாருதி வேகனார், ஜெகநாத பெருமாள் கோவிலை ஒட்டி இருந்த கேரள ஸ்டைல் வீட்டு வாசலில் நின்றது. இறங்கி பெரிய தேக்கு கதவை பாத்து வியந்தனர். சந்தனம், சாம்பிராணி புகை மணம் கதவு இடுக்கு வழியே வந்து நாசியை துளைத்தது.
காலிங் பெல் அழுத்தின அடுத்த நொடி ஒரு கட்டை குட்டையான புளி மூட்டை மாதிரி ஒருவர் சிரித்த முகமாய் கதவை திறந்தார். இவர்களை பாத்து கொஞ்சம் திகைத்தார், முன்னறையிலிருந்த குக்கு கடிகாரம் பறவையை வெளியே அனுப்பி 12 முறை குக்கினது.
இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings