in , ,

ஏனிந்த கொலை வெறி (பகுதி 11) – சுஶ்ரீ

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பாஸ்கரின் காதில் பளீரென மோதியது, “என் கோலி சோடாவே, என் கறிக்குழம்பே, உன் குட்டிப் பப்பி நானே” வாயில் கவ்வின பாதி மெக்சிகன் பட்டீஸ் சப்வே பிரெட்டுடன் வெளியே சத்தம் வந்த திக்கில் பாய்ந்தான் பாஸ்கர்.

லேடஸ்ட் யமாஹா பைக்கில் சாய்ந்தவாறு நின்றிருந்த அந்த பையனின் ஃபோனில் இருந்துதான் அந்த காலர் ட்யூன் வந்திருக்கணும்.கிட்டத்தட்ட 6 அடி உயரம், சிவந்த நிறம், படு ஒல்லியான உடல் வாகு, போல்வால்ட் குச்சி போல.,20 வயசு கூட இருக்காது.உதட்டோரம் பில்டர் சிகரெட் கையில் லேட்டஸ்ட் சாம்சங் கெலாக்சி. ஸ்பாயில்ட் ரிச் பாய்னு எழுதி ஒட்டியிருந்தது.

பாஸ்கர் பக்கத்துல போய், ஏய் தம்பி இந்த காலர் ட்யூன் எப்படி உன் ஃபோன்ல?

நல்ல கேட்சி இல்லை சார்? இப்ப டிரெண்ட் இதுதான்.

உனக்கு நீலங்கரைல நடந்த சம்பவம் தெரியுமா?

தெரியாதே எது சார்?

பேப்பர் படிக்க மாட்டயா? தொடர் கொலைகள் சென்னைல நடக்கறது தெரியாதா?

ஓ அதுவா, தெரியும் ஏதாவது பைத்தியத்தோட வேலையா இருக்கும். இதை என் கிட்ட ஏன் சொல்றீங்க தெரியலையே, நீங்க போலீசா?லைசென்ஸ்லாம் போன மாசமே எடுத்துட்டேன். என் அப்பா 19 வது பிறந்த நாளுக்கு பிரசென்ட் பண்ணின பைக் இது. ரேசிங்க்லாம் பண்ண மாட்டேன்.மட மடவென அடுக்கினான் அந்த பையன்.

சரி சரி உன் பேர் என்ன உன் அப்பா பேர் என்ன?

நான் சுதேஷ் எங்க அப்பா நம் நாடு கட்சித் தலைவர் பெரியணனோட உதவியாளர் ஜீவநாதன்.

மறு படி பெரியணனானு நினைத்த பாஸ்கர், நீ எந்த காலேஜ்ல படிக்கறே? இல்லை படிக்கலையா?

நான் இங்கே படிக்கலை ஆஸ்திரேலியால பி.எஸ் பண்றேன். பர்த்டே பேமிலியோட செலிப்ரேட் பண்ண வந்தேன்.எல்லாம் சொல்லியாச்சு நான் போறேன், சொல்லியவாறே பைக்கை ஸ்டார்ட் பண்ணி பறந்தே விட்டான்.

ஏதோ யோசனையுடன் பாஸ்கர் மீண்டும் தன் சாண்டவிச்சை சுவைக்க ஆரம்பித்தான்.

தினேஷ் , பாண்டிராஜிடம் கேட்டார் ஏண்டா பெரியணன் வீட்ல இருந்தயே சில மணி நேர கைதியா, அங்கே ஏதாவது விசேஷமா தெரிஞ்சதா? அவரோட அசிஸ்டன்ட்ஸ் எல்லாரையும் பாத்தயா?

ஆமாம் பாஸ் ஜீவநாதன்னு ஒத்தர்தான் படு பந்தாவா திரியறார். அவர் சொல்றதுதான் அங்கே சட்டம்.

அதான் கேட்டேன், அந்த ஆளு பின்னணியை தோண்டணும், நான் பாத்துக்கறேன். அவர் பையன் கூட ஆஸ்திரேலியால படிக்கறான் இல்லை?

பாண்டி, ஏன் பாஸ் தினம் பூரா ஊர் சுத்தி தேடற எங்களுக்கு தெரியாத விஷயம்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது?

அது வந்து என்னோட பஞ்சவர்ணக்கிளி தினம் வந்து சொல்லும், சுத்தி என்ன நடக்குதுன்னு.

நிஜமாவா பாஸ்? செட் பண்ணிட்டீங்களா? எப்ப எங்களுக்கு கல்யாண சாப்பாடு?

லதா, பாஸ் பாஸ்கர் ஃபோன்னு உள்ளே நுழைஞ்சா.

பாண்டி, இதுவா பாஸ், பஞ்சவர்ணக் கிளியா தெரியலையே, கொஞ்ச சுமார் குருவி , மாதிரி இருக்கே.

தினேஷ், “Beauty lies in the eye of the beholder”

கங்ராசுலேஷன்ஸ் பாஸ் அப்ப கன்பர்மா? லதாவை பாத்து கங்கிராசுலேஷன்ஸ் பாஸிணி (பாஸ்க்கு பெமினைன் ஜெண்டர் சரியா?)

லதா இவர்கள் பேச்சு புரியாமல் விழித்தாள்.

என்ன புரியலையா அண்ணி, அண்ணன் உங்க மேல லவ்ஸ் ஆயிட்டார்.

பாண்டி வர வர உன் விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சு, பாஸ் இவனை விரட்டி விட்டுடுங்க, என் பெரியம்மா பையன் நல்ல ஸ்மார்ட், வேலை தேடறான், கூட்டிட்டு வரேன்.

நிஜமாதான் லதா மேடம், பாஸ் கண்ணுல அந்த காதல் விளக்கு ஒளி விடறது தெரியலையா?

தினேஷ் சிரித்தவாறு, டே அது இந்த கேஸ் முடிஞ்சவுடனே பாக்கலாம், இப்ப நீ சென்னை ஏர்போர்ட்டுக்கு போ அங்கே ஏதோ டெலிகேட்ஸ் கோவைல ஏதோ பிராஜக்ட் பாக்க வராங்களாம். என்னனு பாத்துட்டு வா.கூட பாஸ்கரையும் கூட்டிட்டு போ.

என்ன பாஸ் தடம் மாறரீங்க இந்த கேஸ் முடியறதுக்குள்ள வேற கேசா?

ஏய், போடா கண்ல விளக்கெண்ணை போட்டு எல்லாத்தையும் பாருங்க, உடனே ஏதாவதுன்னா எனக்கு ஃபோன் பண்ணு.

புரியலையே பாஸ், ஆனா போறேன் நீங்க சொன்னா ஏதாவது விஷயம் இருக்கும்.லதா மேடம் வரட்டா, ஜாக்ரதையா இருங்க. ஒரு குதியோட வெளியேறினான்.

தினேஷ் சிரித்துக் கொண்டே, ஸ்மார்ட் பாய் நல்லா வருவான்.

லதா ,அவன் என்ன பாஸ் உளறரான், ஏதாவது உருண்டை போட்டுட்டானா?

இல்லை லதா எத்தனை நாள் நானும் தனியா இருக்கறது , யாரையாவது லைப் பார்ட்னரா சேத்துக்கலாமானு நினைச்சேன். இந்த பாண்டிப் பய என் மனசை படிச்சிட்டான்.ஆனா என் மனசுல உள்ள அந்த பெண்ணை எப்படி கண்டு பிடிச்சான், அதுதான் ஆச்சரியம்.

இதயம் படபடக்க யார் பாஸ் அந்த அதிர்ஷ்டசாலி எனக்கு தெரிஞ்சவங்களா?

ம், ம், தெரியாம என்ன, சரி, லதா நீ ‘வசூல்ராஜா’ கமல் படம் பாத்திருக்கயோ?அதுல ஒரு பாட்டு காலைல கேட்டேன், “பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு”நல்லா இருந்தது நீயும் டயம் இருக்கறப்ப கேளு.

லதா பாஸ் ஏன் சம்பந்தமில்லாம பேசறார்னு தயங்கி நின்னா.

சரி, சரி மசமசனு நிக்காம வேலையை பாரு நான் ஒரு வேலையா வெளியே போறேன்.புன்னகையோட லதாவை பாத்துக் கொண்டே ஆபீசை விட்டு வெளியேறினான்.

லதாவுக்கு கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் ஆர்வம். தன் மொபைலை எடுத்து யூட்யூபில், தேடினாள், இதோ கிடைச்சது பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு, என் நெஞ்சுக்குள்ளே யாரென்று சொல்வேன் , ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்…அவள் வேறு யாரு, கண்ணாடி பாரு.

குபுக்கென தொண்டையில் ஒரு பந்து,களுக்னு கண்ணில் நீர்.ஓடிப் போய் ரெஸ்ட் ரூமில் கண்ணாடியை பாத்தாள் ரெண்டு கையாலும் கண்ணை மூடி.மெதுவாய் விரல்கள் பிரித்த போது தெரிந்த முகம், ரத்தச் சிவப்பாய் லதாவின் இளம் வயது பிரதிபலித்தது.நானா இது வியந்த லதா, போடா தினேஷா நீ ரொம்ப படுத்தறே, நேரா சொன்னா என்னவாம். வெட்கம் என்ன உணர்ந்த நேரம் அது.

தினேஷ் நேரா மூர் மார்க்கெட் போனான். வழக்கமான பழைய புஸ்தகக் கடை.ஒரு குட்டி ஸ்டூலை எடுத்துப் போட்ட இப்ரகிம் பாய், வா சாரே ரொம்ப நாளாச்சு. நிறைய புக் உனக்காக வச்சிருக்கேன் பாரு.எல்லாம் ஒரிஜினல் பிரின்ட், டாப் கண்டிஷன், புச்சு கணக்கா.

இதெல்லாம் சரி பாய், ஏதாவது ஜோசியம், மாந்ரீகம், பரிகாரம் இந்த சப்ஜெக்ட்ல எதாவது இருக்கா?

நம்ம கிட்ட மருத்துவம், என்ஜினியர் புத்தகம் இங்லீஷ் நாவல் தமிழ் நாவல் இதானே ஜாஸ்தி ஓடுது.இரு இரு சாரே இந்த மூணாவது கடை ஆள் ரெண்டு நாள் முன்னால ஒரு நஞ்சு போன புத்தகம் கொணாந்தான், இதுக்கு ஏதாவது வால்யூ கீதானு, அதும் ஏதோ மந்திரப் புத்தகம்தான். இத்துப் போனது பாதி எழுத்து தெரியலை , வைடா இதுக்கும் ஏதாவது லூசு ஆப்டும்னேன்.சாரி சாரி உன்னை சொல்லலே பொதுவானு இழுத்தார் இப்ரகீம் பாய்

தினேஷ் எந்த கடை சொல்லு பாய் நானே போய் வேலைக்காகுமா பாக்கறேன்.

நீ உக்காரு சாரே நான் வரவழைக்கிறேன் இன்னும் அவனாண்டை இருந்தா. மொபைலை எடுத்து எண்களை ஒத்தினார் இப்ரகீம். டே நூரு, மக்கா நா ஒரு செல்லரிச்ச நஞ்ச புஸ்தகம் கொண்டாந்தே இல்லை அதை பையனாண்டை கொடுத்தனுப்பு. தள்ள முடியுதா பாப்போம்.

அடுத்த ஐந்து நிமிஷத்தில் தினேஷின் கையில் அந்த குப்பை புத்தகம்.கையெழுத்து பிரதி. ஜிலேபி ஜிலேபியா எழுதப் பட்ட மலையாளத் தமிழ். “நவகன்னிக உச்சஸ்தான யாக சூத்திரம்” ன்னு தலைப்பு தாமரைப் பூ மேல சிவப்பு வண்ணத்தில் தெளிவாய் இருந்தது.கீழே , பஞ்சநாத கிறுக்கு சித்தர் 1921.எழுதினவர் பேர் போல இருக்கு 15 பக்கம் கூட இருக்காது, பழையகால சினிமா பாட்டுப் புஸ்தகம் போல. பக்கத்தை புரட்டவே பயமா இருந்தது பொடிச்சு போகுமோனு.

கையில் கிடைத்த பணத்தை எண்ணாமல் இப்ரகீம் பாய் கைல அப்படியே கொடுத்தான் தினேஷ்.

இப்ரகிம் பாய் வாயெல்லாம் பல், எதிர் பாத்ததை விட பல மடங்கு அதிகம் கிடைச்சதில்.

தினேஷ் கிளம்பிப் போன சுருக்கில், நூர் பாய் ஓடி வந்தான்,

அதை கொடுத்துட்டயா பாய்? திடீர்னு அதுக்கு கிராக்கி வந்துடுச்சே, யாரோ ஒரு சோசியர் ஊர் பூரா தேடறாராமில்லை இந்த புஸ்தகத்தை என்ன விலைன்னாலும் கொடுக்கறேன்னு.

ஏய் போடா பேராசை பெரு நஷ்டம், 500 ரூபா போதுமா உன் பீத்த புஸ்தகத்துக்கு, பிடி இதை .நூர் சந்தோஷமாய் ஐந்நூரு ரூபாயை வாங்கிட்டு போனான்.

தன் அறைக்கு வந்து சாவகாசமாய் அந்த புஸ்தகத்தை பிரித்து கஷ்டப் பட்டு ஜிலேபித் தமிழை படிக்க ஆரம்பித்த தினேஷ் அதிர்ந்து போனான். மீண்டும் அவசரமாய் பேன்டை மாட்டிக் கொண்டு கமிஷனர் ஜான் சக்திவேலின் வீட்டுக்கு விரைந்தான்.

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தொடரும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இறைவன் என்னும் இயக்குனர் (சிறுகதை) – முகில் தினகரன்

    உனக்கு ஒண்ணும் தெரியாது (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி