2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
போலீஸ் கமிஷனர் ஜான் சக்திவேல் படு டென்ஷனில் தன் அறையில் காத்திருந்தார்.
முதலமைச்சர் நேரடியா கூப்பிட்டு, விட்ட டோஸ் , இதுவரை யாரிடமும் இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டதில்லை .
தன் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளையும் காலை 10 மணிக்கே கூப்பிட்டிருந்தார். திறமையும், நேர்மையும், கை சுத்தமும் மிக்க ஆபிசர் ஜான் சக்திவேல்.
9.50 க்கே அவருடைய பிரத்யேக அறையில் ஒவ்வொரு சரக அதிகாரிகள், அழைப்பு விடுக்கப் பட்ட தனி துப்பறிவாளர் தினேஷ் சக்ரபர்த்தி, அனைவரும் கூடத் தொடங்கினர்.
இந்த இடத்தில் தினேஷ் சக்ரபர்த்தி பற்றி சின்ன அறிமுகம்.35 வயது ஸ்காட்லான்ட் பயிற்சி பெற்றவர்,சொந்தமாக சென்னையில் டிடெக்டிவ் சர்வீஸ் நடத்துபவர், சென்னை காவல் துறைக்கு பல வழக்குகளில் துணை நின்றவர், அசாத்ய கிரிமினல் அறிவு. அவரை பற்றி நிறைய தெரிந்து கொள்ளப் போகிறோமே இப்ப கமிஷனர் அறைக்கு போவோம்.
கமிஷனரை இவ்வளவு டென்ஷனில் இதுவரை பார்த்தில்லை. எல்லோரையும் நோக்கி பொதுவாக கேட்டார் 3 நாளைக்கு முன்னால் மைலாப்பூரில் கொடூரமாக கொலை செய்யப் பட்ட 16 வயது பள்ளி மாணவி சுசீலா பற்றி எல்லோருக்கும் தெரியுமா?
அனைவரும் மெளனமாய் தலை அசைத்தனர்.இந்த மாணவி முதலமைச்சரின் பிரத்யேக ஜோதிடர், ஜோதிட ரத்னம் சுந்தரேசய்யரின் ஏக புத்திரி. முதலமைச்சரே நேரில் கூப்பிட்டு மிரட்டாத குறையா கேட்கிறார் இந்த கேஸ்ல 3 நாளா என்ன செய்றீங்கனு.நான் இப்ப கேக்கறேன் 3 நாளா என்ன நடக்குது, மயிலாப்பூர் சரகம், திருமலைதானே? திருமலை விரைப்பாய் நின்றார்.எஸ் ஸார் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு லேடி எஸ்.ஐ ,3 கான்ஸ்டபிள் ஒதுக்கி இருக்கு சார் இந்த கேஸ்ல.ஒரு க்ளூ இல்லை சார் இது வரை.
கமிஷனர் வேற யார் உதவி உங்களுக்கு வேணும் சொல்லுங்க இத்தனை பேர் இருக்கோம். திருமலை மெளனம் காத்தார்.
ஓகே தினேஷ், நீங்க திருமலைக்கு துணையா நிக்க முடியுமா, தமிழ்நாடு போலிஸ் உங்களுக்கு மிக்க நன்றி உள்ளதாக இருக்கும்.
தினேஷ் எழுந்து நின்றார், கமிஷனர் சார், டி.சி.பி திருமலை சாருக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நானும் என் டீமும் உதவத் தயார்.திருமலைக்கு ஆட்சேபனை என்ன இருக்கப் போகிறது, சந்தோஷமாய் ஒப்புக்கொண்டார்.சின்ன டீ பிரேக்குடன் கூட்டம் முடிந்தது.
சென்னை உயர் நீதி மன்றம் பக்கம், நைனியப்ப நாயக்கன் தெரு, குறுகலான இந்த தெருவில் எங்கே பாத்தாலும், மெடிகல், சர்ஜிகல் உபகரணங்கள் மொத்த சில்லரைக் கடைகள்தான்.இதில் ஒரு 1954ல் கட்டப் பட்ட ஒரு 3 மாடிக் கட்டிடம். தரை தளம் பூரா எதேதோ உபகரணம், வீல் சேர், டென்டல் சேர், டாய்லட் சேர் போல பலதும் மொத்தமாவோ சில்லறையாவோ கிடைக்கும். சைட்ல குறுகலான மாடிப்படி தெரியுதா ஏறி வாங்க பயப்பட வேண்டாம் விழாது.2 வது மாடியின் தளம் வந்ததா, சின்ன அம்புக்குறியோட பெயர்ப் பலகை பாருங்க, சக்ரபர்த்தி டிடெக்டிவ் சர்வீஸ். ஃபிளஷ் டோர் தள்ளி உள்ளே நுழைஞ்சா முன் அறை அதில்ஒரு டேபிள்,2 ஃபோன், ஒரு கம்பயூட்டர், இது லதாவோட ஆபிஸ்.
லதா தினேஷோட மெயின் அசிஸ்டன்ட், இன்னும் ரெண்டு பசங்க உண்டு வெளில சுத்தற வேலை அவன்களுக்கு.
லதாவுக்கு பின்னால பார்டீஷன் ஏ.சி ரூம், தினேஷுக்கு, சற்றே வசதியான எக்சிக்யூடிவ் சேர் பெரிய மேசை. முன்னால, பின்னால, மேசை மேல புத்தகங்கள், புத்தகங்கள், மேலும் கட்டம் கட்டமாய் குறிக்கப் பட்ட செய்தித் தாள்கள்.
ஒரு சனிக்கிழமை மாலை 6 மணி, தினேஷ் கிளம்பியாச்சு ரெண்டு பசங்க வெளியே போயாச்சு. லதா கடைசி பேப்பரை ஃபைலில் போட்டு விட்டு புறப்படற நேரம் வெள்ளை ஃபோன் அலறியது.
எடுத்த லதா” எஸ் சக்ரபர்த்தி டிடக்டிவ் சர்வீஸ், வாட் கேன் வி டூ ஃபார் யூ” ,
“மேடம் சார் கிட்ட ஃபோன் கொடுங்க என்னை கொல்லப் போறாங்க, சீக்கிரம். “
லதா,“பயப் படாம சொல்லும்மா, எங்கே இருந்து பேசறே உன் பேர் என்ன?”
மேடம் எனக்கு நேரம் இல்லை பேர் சுசீலா, ஐய்யோ விடுடா, அப்ப்ப்பா குலை நடுங்கும் குரல் ஃபோன் கிர்ரர்ரரருனு சத்தத்தோட மெதுவா இறந்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings