in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 53) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“அமுதினி”

“கவி”

“உனக்கு என்ன தோணுதோ சொல்லு டி.. எதுனாலும் நான் பாத்துக்குறேன்”

“நான் வரலன்னு சொன்னேன்.. நீங்க தான கூட்டிட்டு போய் பேச வெச்சீங்க”

“அதனால என்ன பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு.. இல்லைனா வேணாம் விடு”

“நான் தான் கொஞ்சம் கூச்ச சுபாவம்.. என் ஹஸ்பண்ட் போல்டா பேசணும்னு நினைச்சேன்.. ஆனா அவரும் சைலன்ட் டைப் தான்”

“ரொம்ப பேசாம இருக்கிறதே பரவால்ல”

“ஒரு மாசத்துல கல்யாணம்னா எப்படி தயார் ஆகுறது?”

“அதெல்லாம் ஆளுக்கொரு வேலையா செஞ்சிக்கலாம் உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?”

“நான் எப்படி சென்னைல போய் தனியா இருப்பேன்”

“இப்போ நானும் மாமாவும் ஈரோட்டுல இருக்கோம் லீவுல வரோம்ல அப்படித்தான்”

“எனக்கு ரொம்ப யோசனையா இருக்கு.. எனக்கு அம்மாவோட உன்னோட உன் பாப்பாவோட இன்னும் கொஞ்ச நாள் இருக்கணும்”

“இப்படிலாம் பேசி என்னை சங்கடபடுத்தாத அமுதினி.. எல்லாருக்குமே அம்மா வீட்ட விட்டுட்டு போறது கஷ்டம் தான்.. ஆனா வேற வழி இல்லை போய் தான் ஆகணும்.. இந்த மாப்பிள்ளைய விட்டுட்டு பின்னாடி இதே மாதிரி நல்ல வாழ்க்கை கிடைக்குமா தெரில”

“என்னால இத முழுசா ஏத்துக்க முடில”

“சரி வேணாம் நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. அப்புறம் பேசிக்கலாம்” 

அவளை தனியாக விட்டுவிட்டு வெளியே வந்தேன். நான் வெளியே வரும்பொழுது என்ன சொல்ல போகிறேன் என்கிற ஆவலோடு என்னையே பார்த்தார்கள் அம்மாவும் அப்பாவும்.

“கொஞ்சம் தண்ணீ குடு மா” என்று மட்டும் கூறினேன். அதற்கு மேல் அவர்களும் எதுவும் கேட்கவில்லை.

பின் அப்பாவும் வேலையாக வெளியில் சென்றார். அம்மாவும் வீட்டு வேலையில் ஈடுபட்டார். ஆதியும் சில நிமிடங்கள் என்னிடம் பேசிவிட்டு அலுவலக வேலை இருப்பதால் வீட்டிற்கு சென்று விட்டார்.

நான் புத்தகம் படிக்க அமர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து அமுதினி என்னருகே வந்தாள்.

“உனக்கும் மாமாக்கும் பிடிச்சிருக்கா?”

“என்ன பிடிச்சிருக்கா?”

“சொல்லு டி பிடிச்சிருக்கா?”

“உனக்கு என்ன தோணுதோ சொல்லு அமுதினி”

“எனக்கு அவர பிடிச்சிருக்கு கவி”

சந்தோசம் தாங்க முடியாமல் மீண்டும் அவளிடம் கேட்டேன்.

“கிளம்பும் போது அவர் என்ன சொன்னாரு தெரியுமா கவி உண்மையாவே உங்களுக்கு என்னை பிடிச்சா மட்டும் கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க… அப்பா அம்மா கட்டாயப் படுத்துனா ஒத்துக்காதீங்க.. உங்க இஷ்டம் தான் அப்படின்னு சொன்னாரு”

“பாரு டா..”

“அவரு வெகுளியா நல்ல குணமா தான் எனக்கு தெரிறாரு.. எனக்கு பிடிச்சிருக்கு கவி”

“அமுதினி உண்மையாவா” 

“ஆனா கல்யாணத்தை நினைச்சா பயமா இருக்கு.. அத்தை நல்லா பேசுனாங்களா.. என்னை நல்லா பாத்துப்பாங்களா.. உனக்கும் மாமாக்கும் பிடிச்சிருக்கு”

எல்லா பெண்களுக்கும் இப்படி கலவையான உணர்வு வரும் அல்லவா தன் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொழுது.

“நல்லா பாத்துப்பாங்கடி என்னை நம்பு.. எனக்கும் மாமாக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு” இதை நான் அவளிடம் கூறும் பொழுது வெளியில் உறுதியாக கூறினாலும் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருந்தது.

‘கடவுளே நான் நம்புவது போலவே அவளுக்கு இந்த வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும்’

“அம்மாகிட்ட சொல்லிடு எனக்கு ஓகே”

அம்மாவிடம் ஓடிச் சென்று கூறினேன். அம்மாவிற்கும் மகிழ்ச்சி.

“அமுதினிக்கு கல்யாணமா.. என்னை விட்டுட்டு போய் அவ எப்படி அங்க சமாளிப்பா.. சமைக்கக் கூடத் தெரியாதே”

“உனக்கு உன் கவலையா.. நான் மட்டும் எல்லாம் தெரிஞ்சா போனேன்.. தனியா ஈரோட்டுக்கு போய் ஒன்னொன்னா பழகிக்கிட்டேன்.. அவளுக்கும் ஒன்னுமே தெரியாம இல்லை.. நானும் அவளும் இருக்கும் போது அவளும் நெட்ல பாத்து எதாவது சமைப்பா.. சமாளிச்சுக்குவா மா”

அம்மாவின் மனதிலும் பல குழப்பங்களும் தயக்கங்களும் இருக்கத் தான் செய்தது.

வாழ்க்கையில் திருமணம் என்பது எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்க போகும் விஷயம். பல கேள்விகள் எழத் தானே செய்யும். அந்நேரத்தில் அப்பாவும் வந்தார். அப்பாவிடமும் கூறினேன். அவருக்கு அத்தனை மகிழ்ச்சி.

ஆதியையும் வீட்டிற்கு அழைத்தேன். எல்லோருக்கும் சம்மதமா என்று மீண்டும் பல கோணங்களில் யோசித்தோம். 

“அப்போ நான் போன் பண்ணி சொல்லிடட்டுமா?” அப்பா மீண்டும் உறுதி செய்தார்.

“அமுதினி சொல்லு.. உனக்கு முழு சம்மதம் தான” ஆதி அமுதினியை மீண்டும் கேட்டார்.

“எனக்கு ஓகே மாமா”

“எல்லாத்துக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க மாமா.. வேறென்ன சொல்றாங்கன்னு கேளுங்க.. மாப்பிள்ளைக்கு பிடிச்சிருக்கான்னு இன்னொரு முறை கேக்க சொல்லுங்க”

அப்பாவும் அவர்களிடம் அலைபேசியில் பேசினார்.

“நாளைக்கு காலைல அவங்க வீட்டுக்கு வராங்க.. மதியானம் நம்மை அங்க போறோம்.. நாளைக்கே உறுதி பணிக்கலாம் மீதியெல்லாம் பேசிக்கலாம்னு சொல்றாங்க கவி”

“அமுதினி நாளைக்கு என்ன ட்ரஸ் போடப் போறன்னு போய் எடுத்து வை”

“நாளைக்கேவா..”

“ஆமா.. என்கிட்ட கூட கட்டாத சீலை நிறைய இருக்கு.. போய் பாரு எது வேணுமோ எடுத்துக்கோ.. கடைக்கு போற வேலை இருந்தா சொல்லு.. அப்பாவும் மாமாவும் போய்ட்டு வருவாங்க”

“பாக்கறேன் இருடி”

அவள் எடுத்து வைக்கச் சென்றாள்.

“நாளைக்கு பதினொரு பேர் வராங்கலாம்.. நம்மை எத்தனை பேர் போலாம்”

“நம்மளும் பதினொரு பேர் போலாம்.. உங்க தம்பிங்ககிட்ட சொல்லுங்க”

“சொல்லிட்றேன்.. டிபன் என்ன வாங்கலாம்?” 

“கடைல வாங்கிற மாதிரினா சொல்லுங்க மாமா.. நான் அதெல்லாம் பாத்துக்குறேன்” ஆதியும் கல்யாண வேலையில் ஈடுபட்டார்.

ஒரே நாளில் எங்கள் வீடு கல்யாண வீடு ஆனது.

அது சரி நாளைக்கு எனக்கு பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு வர சொல்லி இருக்கிறார்கள். அலுவலகத்தில் வேறு இன்னும் விடுப்பு கேட்கவில்லை. விடுப்பு கேட்டால் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

கல்யாண வேலைகளோடு எப்படி இதையெல்லாம் சமாளிக்கப் போகிறேனோ!

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 52) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 54) – ரேவதி பாலாஜி