2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
இதுவரை:
ஆதிக்கு சென்னையில் வேலை இருப்பதால் அம்மா அப்பாவுடன் தங்கி வேலைக்குச் சென்று வந்தாள் கவியினியாள். ஒரு நாள் மாலை பயங்கர காத்துடன் மழை பெய்ய ஆட்டோவில் வீட்டிற்கு வரும் கவியினியாள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கோமோ என்று பயப்படுகிறாள். அந்த பயம் தெளிந்ததா.. அதற்கு பின் என்னவாயிற்று என்பதை பார்ப்போம்.
இனி:
எனக்குள் இருக்கும் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற்று எடுப்பதற்குள் என்னென்ன சோதனைகள் வருகின்றது.
பதட்டத்தோடு கழிவறைக்குள் நுழைந்து உதிரம் கசிந்திருக்கிறதா என்பதை சரிபார்த்தேன். அந்த மாதிரி எதுவும் இல்லை. அடிவயிற்று வலியும் இல்லை. உடல் இயல்பானது. மனம் தான் அவ்வப்போது பயந்து விடுகிறது.
உருவான மகிழ்ச்சி மட்டும் போதுமா.. அதற்கு மெல்ல உடல் கொடுத்து உதிரம் கொடுத்து என்னுடைய என் கணவனுடைய ஜாடையையும் எங்கள் நல்லவைகளையும் கொடுத்து ஆரோக்கியமாக பெற்று எடுத்தால் தானே முழு இன்பம்.
இனிதான் மேலும் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும்.
எனக்கு ஆதியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
நாளை ஒரு நாள் அலுவலகத்திற்குச் சென்று வந்தால் வாரவிடுமுறைக்கு சேலம் செல்லத் திட்ட மிட்டிருந்தோம். ஆதியும் சென்னையில் இருந்து வருகிறார்.
அடுத்த நாள் மழை நின்றிருந்தது. மழை பெய்து ஓய்ந்த சுவடு மட்டும் சாலையில் தெரிந்தது.
அலுவலகதிற்குச் சென்றேன். வேலை முடிந்து அங்கிருந்து அப்படியே ஊருக்கு கிளம்பினோம். அம்மா அப்பா மற்றும் தங்கை மூவரும் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அங்கிருந்து சேலத்திற்கு வந்தோம்.
“ஏண்டி ஊருக்கு வந்ததும் வராததுமா உங்க வீட்டுக்கு போறேன்கிற..” வீட்டிலிருந்து ஆதியை பார்க்க கிளம்பும்பொழுது அம்மா இருக்கச் சொன்னார்.
“ஆதி சென்னைல இருந்து வந்துட்டாருமா..”
“சரி சாப்டுட்டு போ”
“இல்லை அத்தை சப்பாத்தி செஞ்சிருக்காங்க.. நான் அங்கேயே போய் சாப்பிட்டுக்கிறேன்”
“முன்னாடியே எல்லாம் ப்ளான் பண்ணிட்டியோ.. இப்போ நீ மாமாவ பாக்க போறியா.. சப்பாத்தி சாப்பிட போறியா..” கிண்டலடித்தாள் அமுதினி.
“ரெண்டும் தான்”
“பாரு மா.. பதினஞ்சி நாளா இவளுக்காக நம்ம அங்க போய் இவ கூட இருந்தா வந்ததும் அங்க கிளம்புறா”
“வரேன்டி.. நாளைக்கு மாமாவையும் கூட்டிட்டு வரேன்”
“அப்பா கொண்டு போய் விடுவாரு.. ரெடியாகு”
“நான் ரெடி தான்மா.. போய்ட்டு நாளைக்கு வரேன்”
உள்ளூரிலேயே அம்மா வீடும் புகுந்த வீடும் இருப்பதில் இது ஒரு வசதி. நினைத்த நேரத்தில் வரலாம். நினைத்த நேரத்தில் கிளம்பலாம். ஏற்கனவே எங்கள் வேலைக்காக ஒவ்வொரு ஊரில் பிரிந்து இருக்கிறோம். இதில் இதுவும் வேறாக இருந்தால் அவ்வளவு தான். நல்லவேளை அப்படி இல்லாமல் ஒரே ஊரில் இருக்கிறோம்.
ஆதியைக் காண வாசலில் இறங்கி உள்ளே வேகமாக நடந்தேன். மெல்ல போ என்று கூறிக்கொண்டே அப்பா பின்னால் வந்தார்.
அப்பாவிற்கு தண்ணீர் கொடுத்துவிட்டு அறைக்குள் வந்தேன் ஆதி உறங்கிக் கொண்டிருந்தான். உறங்கிக் கொண்டிருந்தால் அவ்வளவு சீக்கிரம் எழுப்ப மாட்டேன் ஆனால் அன்று வேண்டுமென்றே சத்தமிட்டு எழுப்பினேன் ஆதியை.
“ஹே கவி.. எப்போ வந்த” என்று கேட்டுவிட்டு மீண்டும் உறங்கினான் ஆதி.
“ஊருல இருந்து வந்ததும் உன்ன பாக்க வந்தா இப்படி தூங்குற.. போடா” அறையில் இருந்து வெளியேறி ஹாலில் இருந்த அப்பாவிடம் வந்தேன்.
மாமனாரும் மாமியாரும் என் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
என் பின்னாலேயே ஆதியும் வந்தார்.
மழை வெயிலின் தாக்கம் வெங்காயம் தக்காளி விலை இதையெல்லாம் பகிர்ந்து கொண்டு இருந்தனர்.
“ரெண்டு சப்பாத்தி தான் சாப்பிட்டு போலாம்லப்பா”
“வேணாம் மா.. அம்மா செஞ்சிட்டு இருக்கும்.. இன்னொரு நாள் வரேன்.. நீ சீக்கிரம் சாப்பிடு” என்று கூறிவிட்டு அப்பா கிளம்பினார்.
நான்கு சப்பாத்திகள் வேகமாக சாப்பிட்டேன். அடுத்த சப்பாத்தி எடுக்கலாமா என என்னும் போது வயிறு வேண்டாம் என்றது அதோடு நிறுத்திக் கொண்டேன். இரவு உணவு சாப்பிடும் பொழுது கொமட்டல் இருப்பதில்லை. காலையில் தான் உண்ணவே முடிவதில்லை.
உணவிற்குப் பின் சிறிது நேரம் அத்தையிடம் பேசிவிட்டு அறைக்குச் சென்றேன்.
ஆட்டோ வேகமாக குலுங்கியதில் பயந்து விட்டேன் என்பதை மட்டும் ஒரு வரியில் கூறினேன். இருவரும் சோர்வாக இருக்க சீக்கிரமே உறங்கிவிட்டோம்.
காலையில் ஆறு மணிக்கு தூக்கம் தெளிந்து எழுந்தேன். ஆதி உறங்கிக் கொண்டிருந்தான். தூக்கம் தெளிந்தும் ஏதோ ஒரு சோர்வு இருந்து கொண்டே இருந்ததால் படுக்கையில் விழித்துக் கொண்டே படுத்திருந்தேன். சிறிது நேரத்தில் ஆதியும் விழித்தார்.
“என்னங்க.. இளநீர் குடிக்க போலாமா”
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடி”
“இல்லை எனக்கு தூக்கம் வரல ஆதி போலாம் வா”
இருவரும் வெளியில் கிளம்பினோம்.
“நீயும் ஏன் வண்டிய இவ்ளோ வேகமா ஓட்ற”
“மெதுவா தான் ஓட்டுறேன். உனக்கு லைட்டா குலுங்குனாலும் அதிகமா தெரியுதோ”
“குழிலலாம் மெதுவா போ”
“நீ ரொம்ப பயந்துக்குறன்னு நினைக்கிறேன். தைரியமா இரு ஒன்னும் ஆகாது”
“என்னவோ ஆதி.. பாதுகாப்பா இருக்கிறது பரவால்ல தான”
“கவி அப்புறம் பிளட் டெஸ்ட் எடுத்துட்டு வர சொன்னாங்களே.. பதினஞ்சு நாள் மேல ஆச்சு.. திரும்ப செக் அப் போணும்.. திங்ககிழமை லீவு போட்ரியா”
“பாத்துக்கலாம்.. பிளட் டெஸ்ட் எடுக்கணும்ல”
இளநீர் கடை வந்தது.
“தண்ணியா இரண்டு இளநீர்”
“ஸ்ட்ரா வேணுமா கவி”
“வேணாம்.. நான் அப்படியே குடிப்பேன்.. அப்பா கத்துக் குடுத்தது”
தாகம் இருந்ததில் மடமடவென குடித்தேன். இளநீர் நல்ல இனிப்பாகவும் இருந்தது.
குடித்துவிட்டு தேங்காய் வெட்டித்தர கொடுத்தேன். தண்ணீராக கேட்டே அந்த இளநீரில் முற்றிய தேங்காய் இருந்தது. அவர்களுக்குத் தெரிந்து கொடுத்தார்களா தெரியாமல் கொடுத்தார்களா தெரியவில்லை. வாங்கி சாப்பிட்டேன்.
சாப்பிட்டு முடித்ததும் உடல் என்னவோ செய்தது. தலை சுற்றியது. நெஞ்சில் பாரம் கனத்தது. வயிறு பிரட்டியது. கட்டுப்படுத்த இயலாத உணர்வு.
நின்ற இடத்திலேயே பட்டென்று வாந்தி எடுத்து விட்டேன்.
ஆதியும் இளநீர் கடை அக்காவும் என்னை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings