2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“என்னப்பா.. இன்னைக்கு கவலையா இருக்கீங்க..?”
தேங்காய் மண்டியில் வேலை பார்த்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த தந்தையிடம் கேட்டான் பத்து வயது மகன் குமரன்.
“ஒன்னுமில்ல..ப்பா” என்றார் கணேசன்.
“என்னை பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு நீயே சொல்றியே..?”
“ஒன்னும் இல்லடா.. நான் வேலை பார்த்த இடத்தில பத்தாயிரம் ரூபாய் காணோமாம்.. நான் தான் திருடி இருப்பேன்னு முதலாளி என்னை சந்தேகப்பட்டு எல்லார் முன்னாடியும் வச்சு திட்டினார்..”
“நீங்க அப்படி எல்லாம் செய்ய மாட்டீங்கனு உங்க முதலாளிக்கு தெரியாதா..?”
கோபமாக கேட்டான் மகன்.
“பணம் தொலைஞ்ச நேரம் நான் மட்டும் தான் மண்டியில இருந்தேனாம்.. முதலாளி கல்லாவை பூட்டாம வெளியே போயிருந்தாராம்..” என்றார் கணேசன்.
“அதுக்கு நாம எப்படி பொறுப்பு..?”
“தெரியலப்பா.. நாளைக்குள்ள பணத்தை குடுக்கலைனா போலீசில சொல்லுவேன்னு பயம் காட்டினார்..”
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க..?”
“என்னத்த சொல்றது..? போலீஸ் கேட்டாலும் உண்மையைத் தான் சொல்லுவேன்னு சொல்லிட்டு வந்திட்டேன்..”
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே கணேசனின் அலைபேசி சிணுங்கியது.
அழைத்தது முதலாளி தான்.
எடுத்து காதில் வைத்தவர் சரி, சரி என்று மட்டும் சொல்லி ஃபோனை அணைத்தார்.
“என்னப்பா..?” என்று ஆர்வமாக கேட்டான் குமரன்.
“முதலாளி தான் பேசினார்.. வெளியே போகும்போது பணத்தை அவர் வண்டி பெட்ரோல் டேங்க் கவரில வைச்சி கொண்டு போனது அவருக்கு அப்போ ஞாபகம் வரலயாம்.. இப்போ தான் பார்த்தாராம்.. பணம் இருக்காம்..”
“அப்பாடா!.. பணம் இல்லைனா போலீஸுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமேனு தான் கவலையா இருந்தீங்களா..?”
“இல்ல குமரன்.. சரியா தேடிப் பார்க்க முன்னாடி என் மேல பழியை போட்ட முதலாளிக்கு சாமி என்ன தண்டனை வைச்சிருக்கோனு தான் கவலைப்பட்டேன்” என்றார் தந்தை.
***
தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
(நாலடியார்)
(நிரயம் = நரகம்)
பிறர் தம்மை பழித்துப் பேசியதை பொறுத்துக் கொள்வதல்லாமல், “இவர்கள் எம்மை இகழ்ந்ததால் நரகத்தில் வீழ்வார்களே” என்று அவர்களுக்காக மனம் இரங்குவதும் சான்றோர் செயலாகும்.
**&&**
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings