தேங்காய் ஓடு மற்றும் வாட்டர் பாட்டில் போன்ற பொருட்கள் வைத்து, கலைநயமாக நான் செய்த பொம்மைகள் இது. வாசகர்களே உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
இதை எப்படி செய்வது என்பதை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன், நீங்களும் இது போல் செய்யலாம்
- முதலில் தேங்காய் ஓடுகளை தண்ணீரில் சற்று நேரம் ஊற வைக்க வேண்டும்
- அது ஊறியதும், ஓட்டில் உள்ள தேங்காய் நார்களை நீக்கவும்
- பின், உப்பு காகிதம் கொண்டு, நன்கு வழவழப்பாக ஆகும் வரை நன்றாக தேங்காய் ஓடுகளை தேய்க்கவும்
- பேப்ரிக் பெயிண்ட் கொண்டு முகம் கலர் செய்யவும்
- பின், மூக்கு வாய் எல்லாம் வரையவும்
- கண்களுக்கு பேன்சி ஸ்டோரில் கிடைக்கும் பொம்மைக் கண்களை வாங்கிக் ஒட்டிக் கொள்ளலாம், அல்லது உங்கள் விருப்பம் போல் வரையவும் செய்யலாம்
- பொட்டு, கம்மல் என உங்கள் விருப்பம் போல் அலங்கரியுங்கள்
- கருப்பு நிற உல்லன் நூல் பயன்படுத்தி, தலைமுடியை உருவாக்கி ஒட்டவும். இப்போது தலை மற்றும் முகம் தயார். இனி உடல் பகுதி எப்படி செய்வது என பார்க்கலாம்
- பொம்மையின் கழுத்துப் பகுதிக்கு, Bottle மூடி & கழுத்து பகுதியை வெட்டி ஒட்டி கலர் செய்யவும். சிவப்பு கலர் கழுத்து உள்ள பொம்மையில் அப்படி செய்திருக்கிறேன்
- கழுத்துப் பகுதியில் உங்கள் கற்பனைக்கேற்ப ஆபரணங்கள் சேர்க்கலாம்.
- அதே போல் மற்றொரு பொம்மைக்கு (நீல சட்டை பொம்மை), தண்ணீர் Bottleன் நடுப்பகுதியை, முகத்தின் கீழ் பாகத்தோடு ஒட்டி, அதன் கீழ் Bottle மூடியை ஒட்டி கலர் செய்யவும்
இப்போது பொம்மை தயார். இதை அலங்காரமாக உங்கள் வீட்டில் வைக்கலாம், அல்லது கொலுவில் வைக்கக் கூட இது போல் செய்யலாம்
Click here to buy Kids and Adults Craft Making Kits from Amazon
நன்றி
தேங்காய் ஓடு மற்றும் தண்ணீர் பாட்டில் என எளிய பொருட்களைக் கொண்டு, அழகான பொம்மை செய்முறையை, சஹானா இணைய இதழ் வாசகர்களிடம் பகிர்ந்துள்ளார் திருமதி ராணி பாலகிருஷ்ணன் அவர்கள்
அதற்கு அவருக்கு, உங்கள் எல்லோரின் சார்பாகவும், எனது மனமார்ந்த நன்றிகள்
வாசகர்களுக்கும் இது பிடித்திருக்கும் என நினைக்கிறேன். நீங்களும் இது போல் செய்து உங்கள் வீட்டை அலங்கரித்து மகிழலாம், நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
editor@sahanamag.com
அழகான பொம்மை செய்முறை.. வாய்ப்பு கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.