in ,

விருது (சிறுகதை) – மலர் மைந்தன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசாக 3000/- கிடைத்ததற்காக நண்பர்களுடன் மதுவிருந்து கொண்டாடிவிட்டு நள்ளிரவில் வண்டி ஓட்டிவந்த ‘சத்தியசீலன்’ காந்தி பூங்கா அருகே வந்தபொது நிலைதடுமாறி நடைபாதையில் உறங்கி கொண்டிருந்த வயதான முதியவர் கால் மீது ஏற்றிவிட்டான்.

நல்ல வேலையாக பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை…வலியில் துடித்தவரை மனிதநேயம் இல்லாமல், “யோ பெருசு….உனக்கு படுக்க வேறு இடம் கிடைக்கலையா…?…சாவுகிராக்கி ….இங்க வந்துதான் தூங்குவியா…?” என்று தன் வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் உளறினார்.

‘ரபீந்தரநாத் தாகூர்’ போல தாடி வைத்திருந்த அப்பெரியவரோ…பதிலேதும் சொல்லாமல்…தன் வலிக்கும் கால்களைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

போதை தலைகேறியவன்…உளறிக்கொண்டே வீடு வந்துச் சேர்ந்தான்…மறுநாள் காலை விழிக்கையில்…முன்நாள் இரவு நடந்த நிகழ்வுகள் சற்று நினைவுக்கு வந்தன.

“அய்யோ…மது மண்டைக்குள் போனதும்…புத்தி பேதலித்து….நேற்று எப்படியெல்லாம் நடந்து இருக்கிறேன் ….ச்சீ….நானும் ஒரு மனுசனா…ஒரு  எழுத்தாளன் என்று சொன்னால் வெட்கக்கேடு…திறமை அறிவு இருந்து என்ன பயன்…நிதானம் இல்லையே…!” என்று தன்னைத்தானே நொந்துக் கொண்டான் .

குளித்து முடித்து வரும்பொழுது …. “ஒரு பெரியவர் மீது வண்டியை விட்டுட்டேனே ….அவருக்கு என்ன ஆனதோ …? அவருக்கு எதுவும் நடந்திருக்க கூடாது…முதலில் அவரைப் போய் பார்க்க வேண்டும்” என்று எண்ணிக்கொண்டான்.

 காலை உணவை முடித்துக்கொண்டு காந்தி பூங்கா நோக்கி விரைந்தான் …..வழியில் சில பழங்களையும் ,மதிய உணவு ஒரு பொட்டலத்தையும் வாங்கிக்கொண்டான் …..அவன் பூங்காவை அடைந்த நேரம்…..அங்கே ஒரே கூட்டமாக இருந்தது…..கூட்டத்தை விலக்கி பார்த்தவனுக்கு தூக்கிவாரிப் போட்டது…அந்த பெரியவர் ஈக்கள் மொய்க்கக் கிடந்தார்……மாநகராட்சி ஊழியர்கள் அவரை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துக்கொண்டிருந்தனர்.

எதனால் இறந்தார் என்று தெரியவில்லை …ஆனாலும் சத்தியசீலன் குற்ற உணர்வுடன் கண்ணீர்த் துளிகளைச் சிந்தினான் …. “ஒரு வேளை …என்னால் தான் அவர் இறந்து இருப்பாரோ …?” என்று எண்ணினான்.

மாநகராட்சி ஊழியர்கள் அந்த இடத்தை அப்புறப்படுத்தவே மும்முரமாக இருந்தனர் ….அந்த பெரியவரை ஆம்புலன்சில் ஏற்றியதும்….அவருடன் இந்த சாக்குபை ஒன்றை குப்பை வண்டியில் தூக்கி வீசினர்….அப்பொழுது அதில் இருந்து ஒரு கட்டு காதித்தாள்கள் விழுந்தன……அதைப் பார்த்த….அங்கு தினமும் நடைப்பயிற்சி செய்யும் சிலர்….

“பாவம் …பெரியவர்…..யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார்….. யாராவது சாப்பிடக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்….. எப்பப் பார்த்தாலும் எதையாவது எழுதிகொண்டு… அதை அந்த சாக்குப்பையில் போட்டு வைப்பார்” என்று பேசுவது சத்தியசீலன் காதில் விழுந்தது.

கீழே விழுந்துகிடந்த அந்த கட்டுத்தாளை எடுத்துப் பார்த்தான் ….மணிமணியாக கையெழுத்து இருந்தது….. படித்துப் பார்த்தான்….. கற்பனைக்கும் எட்டாத கதைகள் இருந்தன… அந்த சாக்குப்பையை கீழே இறக்கச்சொல்லி …வாங்கி …வீட்டிற்கு எடுத்துப்போனான்.

 சாக்கு பையில் இருந்த தாள்களை எல்லாம்   ஒவ்ஒன்றாக படிக்க மலைத்துப் போனான் …அத்தனையும் உலகம் முழுமுதும் கொண்டாப்பட வேண்டியே படைப்புகள்.

மாநகராட்சியில் உயர் அதிகாரியாக தனது நண்பனிடம் நடந்த நிகழ்வுகளை சொல்லி …அந்த பெரியவரை பற்றி விசாரித்ததில்…..அவர் அனாதை பிணம் என அடக்கம் செய்யப்பட்டதாக செய்தி கிடைத்தது ……மனம் நொந்துப்போனான்…சத்தியசீலன் .

சாக்குப்பையில் அடியில் ஒரு டைரி கிடந்தது …அதைத் திறத்துப் பார்தால்…ஒரே ஒரு வரி மட்டுமே எழுதி இருந்தது….. “இல்லாமை எனக்கு இப்பிறவியில் கிடைத்தமைக்கு நன்றி” இப்படிக்கு ஏழை எழுத்தாளன்.

சத்யசீலனுக்கு மனம் வெகுவாக பாதிக்கப்பட்டது …தன்னுடைய நண்பர்களைத் தொடர்பு கொண்டான் ….அனைவரும் ஒன்றிணைந்து ஒரு புதிய அமைப்பை தொடங்க முடிவு செய்தனர்.அந்த அமைப்பின் மூலமாக …தமிழ்நாட்டில் நலிவுற்று இருக்கும் படைப்பாளிகளுக்கு மாதந்தோறும் பண உதவியும் ,அவர்களின் படைப்புகளை  நூலாக்கவும் முடிவு செய்தனர்….அத்தனையும் எவ்வித விளம்பரமுமின்றியே .

ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து எளிய படைப்பாளிகளுக்கும் உலகிற்கு அறிமுகப்படுத்த விருது ஒன்றியும் முடிவு செய்தனர்…..

 அந்த விருதின் பெயர்…. “முகவரியில்லா முகங்கள்”

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 1) – கற்பக அருணா

    அது அவள்தான் (சிறுகதை) – செந்தில் செழியன்