எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ட்ரிப் இறங்கிக்கொண்டிருந்ததால் வெளியே வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தாள் கவிதா… அப்போது தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது. ‘ஆமாமாம்… நாம் மூன்று மாத்திரைகளை போட்டுக் கொண்டோமே… நாம் என் சாகவில்லை… ‘
அதே நேரம் அங்கே ஷிவானி நினைத்துக் கொண்டாள். ‘இவள் பாட்டுக்கு இறந்து போனால் பிறகு எப்படியாவது மோப்பம் பிடித்து போலீஸ் நம்மை மடக்க வந்து விடுவார்கள். அப்புறம் நாம் கம்பி என்ன வேண்டியதுதான் என்று யோசித்து ஒரு தூக்க மாத்திரையும் இரண்டு பி-காம்ப்ளக்ஸ் மாத்திரையும் சேர்த்து கொடுத்துவிட்டாள். நாளைக்கு எனக்கு எதுவும் ஆகவில்லையே என்று கவிதா வந்து கேட்டால் உனக்கு அந்த பவர் போதவில்லை போலிருக்கு என்று சொல்லி அப்போதைக்கு தப்பித்துக் கொள்ளலாம்… ’ என்று யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ஷிவானி.
பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள் கவிதா. அப்போது எதிரே சுவற்றில் இருந்த டி.வி.யில் ஒரு ஹெட்லைன் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது.
‘ஐந்து கல்யாணம் செய்து கொண்டு ஐந்து கணவர்களையும் ஏமாற்றிய சரண்யா என்ற பெண்மணி கைது… ‘
டி.வி.யில் காட்டிய அந்தப் பெண்மணியை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. திடீரென்று யோசனை வர, உடனே தனது மொபைலை திறந்தாள். அன்று ராஜனின் பர்ஸில் பார்த்த பெண்ணை போட்டோ எடுத்திருந்தாளே, இப்போது போனில் பார்த்ததும் புரிந்து போனது அவளேதான் என்று.
‘மவனே… இவ வலையிலையா நீ மாட்ட இருந்தே… அவளும் அவ முகறைக்கட்டையும்… நல்லவேளை மவனே நீ தப்பிச்சே… ‘ தனக்குள் முனகிக்கொண்டாள் கவிதா.
ராஜன் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிவிட்டான். அவனுக்கும் அந்த நியூஸ் தெரிய வந்த போது திருடனுக்கு தேள் கொட்டிய கணக்காக மவுனமாகிப் போனான்.
ராஜன் பாம்பைக் கொண்டு வந்து உள்ளே விட்டது எப்படி கவிதாவுக்குத் தெரியாதோ அதேபோல அது அட்டாச்டு பாத்ரூம் குழாய் வழியாக அது வெளியேறியதும் ராஜனுக்குத் தெரியாது.
இப்போதெல்லாம் இருவரும் ஒரே மெத்தையில்தான் படுத்துக் கொள்கிறார்கள்… சந்தோஷமாய்… !
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings