2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வழக்கம் போல கடையைத் திறந்து வேலை செய்ய ஆரம்பித்தான் “சேது”
அங்குள்ள தேவையற்ற பொருட்களை எடுத்து ஒரு இடத்தில் குவித்தான்….
டேய் பையா இதான் நீ வர நேரமா?
இல்லை அண்ணே கொஞ்சம் வீட்டு வேலைகளை இருந்துச்சு அதா பார்த்து விட்டு வந்தேன் அண்ணே….
இன்னைக்கு எதுவும் ஆர்டர் வந்த வாங்கி வை…..
நான் போய் நூல்,பட்டன், ஊசி எல்லாத்தையும் தெற்குவாசல் தெரு வீதியிலா இருக்கிறா? முத்தையா கடையிலா வாங்கிட்டு வரேன்…..
கண்களை அசைத்து வாய் வழியாக நீங்க போயிட்டு வாங்க பார்த்துகிறேன் சாரே…..
சரி பாத்துக்கோ? நான் போயிட்டு வரேன் கண்களிலே சாடை காட்டி புறப்பட்டான்….
டேய்…. முத்து….. அவர் எங்க சாப்பாட்டை மறந்து வைச்சுட்டு வந்துட்டாரு….
இப்ப தையலுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருக்காரும்மா….
சரிடா…. நீயும், அவரும் மறந்துடமா சாப்பிட்டுருங்க….
சரிம்மா…. சாப்பிட்டுறோம்…..
இன்னைக்காவது ஏதாவது ஆர்டர் கிடைக்குதான் பாருங்க…. அதான் அண்ணே காலையிலே கடையா திறந்திருப்பார் போல, ஆனா ஒரு ஆள் கூட வரவிலா அண்ணி….
இப்படியே போன கடையை இழுத்து மூட வேண்டியது தான் அண்ணி
தீபாவளி, பொங்கல் இப்படின்னு ஏதாச்சும் ஒரு பண்டிகை நாளும் கூட்டம் வரும்…. இப்ப எப்படி? வரும்டா
நீங்க சொல்லுறதும் உண்மை தான் அண்ணி….
சரி யார் வந்தாலும் சும்மா தொன …தொனன்னு பேசமா அவங்களுக்கு எந்த டிசைன், எப்படி வேணும் மட்டும் கேட்டு ஒரு நோட்டுலா குறிச்சு வைச்சுருடா..
சரிங்க…. அண்ணி
டேய் தம்பி கடையிலா கடைக்காரர் இல்லையா?
என்னையா பார்த்த கடைக்காரர் மாதிரி தெரியலயா?
பார்த்த அப்படி தெரியலா?
இந்த கடையிலா வேலை பார்க்குறா பையன் தான் உங்களுக்கு என்னை வேணும் பெரியவரே….
இல்லா எனக்கு ஒரு சட்டை தைக்கணும்… அதான் அளவு கொடுக்க வந்தேன்… ஆனா கடையில் ஆளில்லா போல நான் அப்புறமா வரேன்….
என்ன பெரியவரே இப்படி பேசுறீங்க நான் ஏதுக்கு இருக்கேன் …. நான் நல்ல அளவொடுப்பம் பெரியவரே…. உங்களுக்கு முழு கை சட்டையா? இல்லா அரை கை சட்டையா? பெரியவரே…..
உனக்கு கூட அளவெடுக்க தெரியுமா? தம்பி….
தெரியும் பெரியவரே…… அண்ணே கடையில் இல்லாத நேரத்திலா நான் தான் அளவொடுப்பம் பெரியவரே….
சரி வாப்பா வந்த சரியா அளவெடுப்பா நல்ல தைக்க வேண்டும் எனக்கு இன்னும் இரண்டு நாளில் கல்யாண நாள் வருகிறது ….. அதற்கு எடுத்த சட்டை தம்பி
அதான் பார்த்து பத்திரமா வைக்க வேண்டும் தம்பி….
அதெல்லாம் சரியா தைத்து விடுவோம் பெரியவரே…..
அவரை நிற்க வைத்து அளவுகளை எடுத்து ஒரு சீட்டையில் குறித்தான்… பிறகு அவர் உடம்பு கொஞ்சம் இறக்கம் வைத்து தைக்க சொன்னார்…. அதற்காக அளவுகளைக் குறித்து கொண்டான்….
சரி தம்பி ….. போயிட்டு இரண்டு நாள் கழித்து வருகிறேன்….
என்று சொல்லி புறப்பட்டார்….
சேது பொருட்களை வாங்கி கொண்டு கடைக்கு வந்தான்….
என்னடா ஏதாச்சும் துணி ஆர்டர் வந்துச்சா தம்பி…..
வந்துருக்கு அண்ணே…. ஒரு பெரியவர் ஒரு சட்டை தைக்க சொன்னாரு அண்ணே…. அளவுகளை எடுத்து வைச்சுருக்கேன்…..
சரி…..அந்த துணியை போய் எடுத்துட்டு வா தம்பி….. அதை விரித்து அளவுகளைக் குறித்து வைத்துக் கொண்டிருந்தான்….
அண்ணே…. அண்ணே….
என்னம்மா….. துணி ஏதும் தைக்க வேண்டுமா?
ஆமாம் அண்ணே…. என் மகனுக்கு ஸ்கூல் யூனிபார்ம் தைக்க வேண்டும்….. அதான் அளவு சட்டையெடுத்து வந்திருக்கேன் அண்ணே…. அந்த அளவுக்கு தைங்க போதும் அண்ணே…..
சரிம்மா அப்படியே தைக்கிறேன்….
என்னைக்கு துணி உங்களுக்கு தைச்சு வேண்ணும்மா….
அண்ணே எனக்கு ஒரு வாரத்திலே வேணும்… சரியான அளவுலா தைச்சு கொடுங்க அண்ணே….
குழந்தைகளோட ஸ்கூல் யூனிபார்ம் அண்ணே….
அதான் சூப்பரா தைச்சு கொடுக்குறேன் உனக்கு எந்த கவலையும் வேண்டாம்டா இன்னும் ஒரு வாரத்துலா வந்து வாங்கிக்கோம்மா…..
பரவாயில்லை இன்னைக்காச்சும் இரண்டு ஆர்டர் கிடைச்சுசே…. என் பெரு மூச்சு விட்டான் “சேது” எப்படியாச்சும் இந்த இரண்டு துணிகளையும் நல்ல படியாக தைச்சு கொடுத்துறனும்…..
வேலைகளைத் தொடங்க ஆரம்பித்தான்… துணி அளவுகளை ஒவ்வொன்றாக வெட்டி தனித்தனியாக எடுத்து வைத்தான்… பிறகு மெஷினில் உட்கார்ந்து தைக்க ஆரம்பித்தான்….
அதற்கு பின்னால் இரண்டு ஆர்டர் வந்தது…. அதையும் வாங்கி வைத்து தனது வேலைகளைப் பார்க்க துவங்கினான்….
அவன் துணிகளைத் தைக்கும் போதே வீட்டின் பிரச்சனைகள் அவன் கண் முன்னால் நிழலடியது…. மகளுக்கும், மகனுக்கும் ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும்…
வீட்டிற்கு மாளிகை பொருட்கள் வாங்க வேண்டும்….. காஜா தம்பிக்கு சம்பளப் பாக்கி கொடுக்க வேண்டும்….
நிறைய யோசனைகள் அவனின் கண் முன்னால் வந்து…. வந்து…. போயின….
இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தனது வேலைகளின் மீதே கண்ணாய் இருந்தான்….
வெகு நாட்கள் கழித்து இப்ப தான் ஒரு நான்கு துணி ஆர்டர் அவனுக்கு கிடைச்சுருக்கு அதனால் அவனுடைய கவனம் முழுவதும் துணியை நல்ல படியாக தைத்து கொடுக்க வேண்டும் அது மட்டுமே அவனுடைய எண்ணமா இருந்தது….
அன்றைக்கு இரவு வீட்டுக்கு சற்று தாமதமாகவே சென்றான்… அனைத்து பணிகளையும் முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்த உடனே மனைவி உணவை பரிமாறினாள்…சாப்பிட்டு விட்டு நன்கு உறங்கினான்…
இப்படியே மூன்று, நான்கு நாட்கள் கழித்தது… அவரவர் துணிகளை வந்து வாங்கி சென்று அதற்காக பணத்தையும் சேதுவிடம் கொடுத்தனர்….
பணத்தை பெற்ற சேது சற்று கலக்கத்துடன் இருந்தான்… மெஷின் வேற சற்று பழுது பார்க்க வேண்டியவது வேற இருக்கு…..
அண்ணே இரண்டு மாசமா சம்பளம் கொடுக்கலா கொடுங்கண்ணே எங்க வேற காசு கேட்டு கிட்டே இருக்காங்க…..
சரி….இந்த 1500 ரூபாய் நீ போய் உங்க அம்மா கிட்ட கொடு தம்பி….
அவனை அனுப்பி வைத்தான் சேது…. சற்று நேரம் கழித்து வீட்டு புறப்பட்டான்…. சைக்கிளை அழுத்தம் போதெல்லாம் மனத்தில அழுத்தமானது நீடித்துக் கொண்டே போனது…..
இருந்தும் பார்த்து கொள்ளலாம் என்றது ஒரு மனம்… மற்றொரு குழந்தைகளின் எதிர்காலமே கல்வி தான் அதை சரி வர கொடுக்க முடியவில்லையென்றால் நான் தகப்பனாக இருந்து என்ன பயன்?
கதவுகளைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தான் சேது…. அவனது மனைவி வழக்கம் போல் உணவை பரிமாறினாள் சாப்பிட மனமின்றி சேது சாதத்தை பிசைந்து கொண்டிருந்தான்….
என்னங்க சாப்பிடமா இருக்கீங்க?
அது ஒன்னுமில்லா குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும் அதை பத்தி யோசிச்சு கிட்டு இருக்கேம்மா….
அந்த ஆர்டர் காசு வந்துச்சுலா அதுலா கட்டுங்க…..
அதா வைச்சு காஜா பையனுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டேன்…. மிச்சம் 500 ரூபாய் தான் இருக்கு இரண்டு குழந்தைகளும் சேர்த்து 2500 கட்டணும்…. அதான் என்ன பண்றதுன்னு தெரியமா முழிச்சு இருக்கேன்….
கவலப்படாதீங்க…. இன்னைக்கு வீட்டுலா வேற ஐந்து ஆர்டர் வந்திருக்கு அட்வான்ஸ் காசா 2500 கொடுத்திருக்க அதை வைச்சு கட்டிக்கலாம் …
ஓ… அப்படியா! ரொம்ப சந்தோஷம் நான் கூட ரொம்ப பயந்துக்கிட்டே இருந்தேன்….ஏதோ அந்த கடவுள் புண்ணியத்துலா இந்த ஆர்டர் கிடைச்சுருக்கு என்றான் “சேது”…
அதெல்லாம் ஒன்னுமில்லிங்க…. நீ ஒரு வயதான பெரியவருக்கு சட்டை தைத்து கொடுத்தீங்க அவர் அந்த சட்டையை போட்ட நாளில் இறந்து போனாராம்…
அங்க பையன் இரண்டு பேரும் ரொம்ப நாளா அவர் சாக மாட்டிங்கீரே…. சொத்து அனைத்து அவர் பெயரில் இருக்கு போல, அவர் இறந்தால் இவர்களுக்கு கிடைக்கும் போல, அவரிடம் எத்தனையோ முறை கேட்டு பார்த்தார்கலாம் அவர் தர மறுத்து விட்டார்….
நீங்க தைத்த சட்டையை போட்டு கண்ணாடி முன்னாடி மிகவும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென “நெஞ்சுவலி” ஏற்பட்டு இறந்தார்…
அதான் அவங்க பையன்கள் இறப்புக்கு வந்த துணிகளை எல்லாம் நீங்க தான் தைத்து கொடுக்க வேண்டும் சொன்னங்க….
இது என்னாட சோதனை…. இதுவும் ஒரு காரணத்திற்காக தான் இருக்கும்… ஒரு வேளை இதான் “விதியின் விளையாட்டு” என சொல்வார்களே…..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
நல்ல கதை முடிவில் கொஞ்சம் நகைச்சுவை சகோ வாழ்த்துக்கள் சகோ
நன்றி அண்ணா 💐