in ,

 விபரீத விளையாட்டு (சிறுகதை) – ✍ ஜெ.ரோஹின்

விபரீத விளையாட்டு (சிறுகதை)

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ன்று அழகிய காலை சூரிய வெளிச்சத்திலும், காலை உணவு சமைத்துக் கொண்டிருந்த அம்மாவின் சத்தம் கேட்டதிலும், தூக்கத்தில் இருந்து எழுந்தனர் ராஜூவும் சோமுவும்.

சோமு, தன் தம்பி ராஜூவிடம் “டேய் ராஜுவ், இன்னைக்கு அம்மாவும் அப்பாவும் ஆபீஸ் போன பிறகு ஆன்லைன் க்ளாஸ் கட் பண்ணி கேம் விளையாடுவோம்” எனவும்

உடனே ராஜுவ், “சரி அண்ணா, உன்னோட மொபைலையும் என்னோட மொபைலையும் நல்லா சார்ஜர் ஏத்தி வச்சிக்கோ, நம்ம ரெண்டு பேரும் விளையாடுவோம்” என்று கூறினான். 

அம்மா படுக்கை அறைக்கு வந்து, “சோமு ராஜுவ்… என்னடா இப்பதானடா எழுந்தீங்க, அதுக்குள்ள திரும்பவும் தூங்குகிறீங்க. சீக்கிரம் எழுந்து fresh up பண்ணுங்கடா”

“சரிம்மா” என்று கூறிவிட்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். 

சோமு ராஜுவின் அம்மா ராணி, தன் கணவரிடம், “என்னங்க சாப்பிட்டு போங்க” என்று சொல்ல

“இல்லம்மா, நான் ஆபீஸ் போய் சாப்பிடுகிறேன். நீ சாப்பாட்ட பாக்ஸில் வைத்து தந்து விடு”

சில நிமிடங்கள் கழித்து ராணி தன் பிள்ளைகளை எழுப்ப படுக்கையறைக்கு வர, ராஜுவும் சோமுவும் தூங்குவது போல் நடித்தன

உடனே ராணி ‘சரி பசங்க தூங்குறாங்க, நாம சாப்பிட்டு ஆபீஸ்  போவோம்’ என்று கிளம்பினாள். 

ஆபீஸ் கிளம்பிய பிறகு, “டேய் சோமு ராஜுவ், அம்மா சாப்பாடு டேபிளில் வச்சிருக்கேன், எழுந்திருச்சு சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு ஆபீஸ் சென்று விட்டார்கள். 

“டேய் ராஜு அம்மா போயிட்டாங்கடா, வேகமாய் எழுந்திருடா, சாப்பிட்டு விளையாடுவோம்” என்று கூறினான். 

அண்ணன் சோமுவும் தம்பியும் சாப்பிட்டு கேம் விளையாட மொபைலை எடுத்தனர். 

ராஜீவ் சோமுவிடம் “என்ன கேம் விளையாட போறோம்?” என்று கேட்க

அவன் “டேய் Highfire கேம் விளையாட போறோம்”

“Highfireஆ? அப்படினா என்ன?” என்று யோசித்தான் தம்பி ராஜுவ். 

“என்னடா ராஜூ, இந்த காலத்துல போய் Highfire கேம் தெரியாமல் இருக்க” அப்படின்னு சொல்லிட்டு அந்த கேம் பத்தி சொல்ல ஆரம்பிச்சான் சோமு. 

“Highfire ஒரு ஆன்லைன் கேம்டா, இது விளையாடுவதற்கு ரொம்ப சூப்பரா இருக்கும். டீம் போட்டும் விளையாடலாம், தனியாகவும் விளையாடலாம். இது நம்மளும் துப்பாக்கி வைத்து திருடர்களை சுடலாம். இந்த மாதிரி நிறைய ஆப்சன் இந்த கேம்ல இருக்குடா”

“நீ சொல்லும் போதே நம்மள மாதிரி சின்ன பசங்களுக்கு இந்த கேம் விளையாட எவ்வளவு பிடிக்கும்னு தெரியுது. உடனே என்னோட மொபைல்ல இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் பண்ணி ரெண்டு பேரும் விளையாடுவோம்” 

“டேய் ராஜு, அம்மாகிட்ட நாம ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணலனு சொல்லாதடா, அம்மா திட்டுவாங்க”

“சரி அண்ணா, நான் சொல்ல மாட்டேன்” என்றான் ராஜு

ராஜுவும் சோமுவும் சரியாக காலை பத்து மணிக்கு கேம் விளையாட ஆரம்பிச்சாங்க.  ரொம்ப விருப்பமா விளையாடின அவங்க, 1:30க்கு தான் முடிச்சாங்க 

ராஜு தன் அண்ணனிடம், “அண்ணா… இந்த கேம் விளையாட இவ்வளவு சூப்பரா இருக்கு. நீ என்கிட்ட சொல்லவே இல்ல, இந்த கேம்ல ஐடி எல்லாம் விலைக்கு போகுமாம் அப்படியா?” 

“ஆமா ராஜூ, இந்த கேம்ல நம்ம நிறைய ஆப்ஷனில் வெற்றி பெற்றோம்னா நம்ம ஐடி நிறைய விலைக்குப் போகும் டா. இப்ப அண்ணனோட ஐடி பத்தாயிரத்துக்கு போகும்” என்று கூறி, தம்பிக்கு இந்த கேம் விளையாட அதிக ஆர்வத்தை தூண்டினான்

நேரம் போய்க் கொண்டே இருந்தது, சரியாக இருவரும் மதியம் இரண்டு மணிக்கு உணவு சாப்பிட்டு  கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் விளையாடத் தொடங்கினார்கள்

“டேய் ராஜு ஒழுங்கா சுடுடா, உனக்கு சரியா தெரியல, அவன சுடுடா” என்று சொல்ல 

உடனே ராஜு “அண்ணா… எல்லாம் போச்சு” என்றான்

“என்னாச்சுடா, சொல்லுடா ராஜுவ்” என்று சோமு கேட்க 

“சார்ஜ் தீந்து போச்சு”

“சரிடா, மொபைலை ஆப் பண்ணி வெச்சுடு, அம்மாவும் அப்பாவும் வந்துடுவாங்க” என தம்பிக்கு நினைவூட்டினான்  சோமு

அம்மாவும் அப்பாவும் வேலை முடிந்து களைப்பாக வந்து, ஓய்வெடுக்க சென்று விட்டார்கள்  

எட்டு மணி வாக்கில், இரவு உணவினை அம்மா எடுத்து வைத்தார்

“டேய்… ரெண்டு பேரும் இன்னைக்கு நல்லா சாப்பிட்டீங்களாடா? ரொம்ப டயர்டா இருக்கிற மாதிரி தெரியுது” என அப்பா கேட்க

உடனே ராஜீவ், “இல்லப்பா, அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது” என்று சமாளித்தான்

“ஆன்லைன் கிளாஸ் கரெக்ட்டா அட்டென்ட் பண்ணினீங்களா ரெண்டு பேரும்” என அம்மா கேட்க     

“ஆமாம்மா, ரெண்டு பேரும் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணினோம்” என்றான் சோமு

எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்கள்

மீண்டும் அடுத்த நாள் இதே போல் அம்மாவும் அப்பாவும் ஆபீஸ் சென்று விட, பிள்ளைகள் இருவரும் கேம் விளையாடி பொழுதைக் கழித்தனர்

சோமு தன் தம்பியிடம், “ராஜு… நீ இன்னைக்கு நல்லா கில் பண்ணுடா” உடனே ராஜு, “சரி அண்ணா. அது இருக்கட்டும், இன்னைக்கும் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண வேண்டாமா?”

“வேண்டாம்டா, அதெல்லாம் பாத்துக்கலாம்” 

இப்படியே நாட்கள் செல்ல, ஒரு வாரம் கழித்து, பள்ளியில் இருந்து அம்மாவுக்கு அழைப்பு சென்றது

“உங்க பசங்க ஒரு வாரமா ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணவே இல்ல மேடம், நீங்க இதெல்லாம் உங்க பசங்க கிட்ட கேக்க மாட்டீங்களா?” எனக் கேட்க, அம்மா உடனே சோமுவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 

“டேய் என்னடா, ரெண்டு பேரும் ஒரு வாரம் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணலயா? உங்க டீச்சர்  கம்ப்ளைன்ட் சொல்றாங்க. வீட்ல உக்காந்து என்ன பண்றீங்க? ஒழுங்கா கிளாஸ் அட்டென்ட் பண்ணுங்கடா” என கோபமாய் பேசினார்

சோமு தன் தம்பியிடம், “டேய் ஸ்கூல்ல இருந்து நம்மை டீச்சர் அம்மாவுக்கு போன் பண்ணி, உங்க பசங்க ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணலைன்னு சொல்லிட்டாங்களான்டா. வாடா ரெண்டு பேரும் கிளாஸ் அட்டென்ட் பண்ணுவோம்” எனவும்

“போண்ணா, நான் இப்ப தான் இந்த கேம் நல்லா விளையாடிட்டு வரேன், அதுக்குள்ள கூப்பிடுற. நீ போய் கிளாஸ் அட்டென்ட் பண்ணு” என சலித்துக் கொண்டான் சிறியவன்      

இப்படியாக நேரம் கடந்து  மாலையாக, அப்பாவின் அழைப்பு வந்தது

“சொல்லுங்க ப்பா, என்ன ஆச்சு போன் பண்ணி இருக்கீங்க”

“டேய்… என்னடா பண்றீங்க வீட்ல, அப்பாவோட அக்கவுண்டில் இருந்து 25 ஆயிரம் எடுத்த மாதிரி எஸ்எம்எஸ் வந்துருக்கு”

“நான் எடுக்கல ப்பா, தம்பிகிட்ட கேட்டு சொல்றேன்” என சோமு சொல்ல

“சரி விடு, நான் வீட்ல வந்து என்னனு பார்த்துக்கிறேன்” என அழைப்பை துண்டித்தார் அப்பா

ஆனால் அலுவலகம் விட்டு வந்ததும், களைப்பில் எல்லாம் மறந்து விட்டனர் பெற்றோர் இருவரும். பிள்ளைகளை கண்டிக்கவும் இல்லை, என்ன ஏதென விசாரிக்கவும் இல்லை

இப்படியாக மேலும் இரண்டு வாரங்கள் செல்ல, சோமுவின் அப்பாவிற்கு ஒரு அழைப்பு வந்தது

“சொல்லு சோமு”

“அப்பா,  ராஜு  கண் வலிக்குதுனு சொல்றாம்பா, உடனே வாங்கப்பா” என பதற

அதை எப்போதும் போலான விளையாட்டு என எடுத்து கொண்ட அவனின் தந்தை, “டேய் சோமு, அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு, கொஞ்ச நேரத்துல நானும் அம்மாவும் வந்தர்றோம்” என அழைப்பை முடித்தார்

அன்று மாலை அலுவல் விட்டு வந்ததும், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர் பெற்றோர்

“கண் வலிக்குது கண் வலிக்குதுனு சொல்றான் டாக்டர், கொஞ்சம் பார்த்து என்னன்னு சொல்லுங்க டாக்டர்” எனவும், அவர்களை வெளியே இருக்க சொல்லி விட்டு ராஜூவை பரிசோதனை செய்தார் டாக்டர்

பரிசோதனை முடித்ததும், டாக்டரின் முகம் மாறியது. ராஜுவிடம் சில கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டவர், பெற்றோரை உள்ளே அழைத்தார்

“நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்களா?” எனக் கேட்க

“ஆமா டாக்டர், ராஜுவுக்கு என்னாச்சு” என பதறினார் பெற்றோர்

“நீங்க பிள்ளையை விட்டுட்டு வேலைக்கு போய்ட்டிங்க, அவன் எந்நேரமும் ஆன்லைன் கேம் விளையாடிகிட்டு இருந்துருக்கான்.

தொடர்ந்து அப்படி விளையாடினதால, அவனோட கருவிழி பாதிக்கப்பட்டிருக்கு, பார்வை குறைபாடு வந்திருக்கு. பார்வையே மொத்தமா போகக் கூட வாய்ப்பிருக்கு” என டாக்டர் கூற, பெற்றோர் இருவரும் அதிர்ந்து போயினர் 

பெற்றோரும் சோமுவும் கண்ணீர் விட்டு அழ, “இனி அழுது என்ன பண்ண, இனிமே அவனை  கவனமா பார்த்துகோங்க. ஒரு கண் தான் ரொம்ப பாதிச்சுருக்கு, அடுத்த கண்ணையாச்சும் காப்பாத்துங்க. நான் சில டிராப்ஸ் எழுதித் தரேன், தொடர்ந்து போடுங்க” என்றார்

ராஜுவின் அம்மா ராணி தன் கணவரிடம், “இனிமே நான் வீட்ல இருந்து பிள்ளைகளை நல்லா பாத்துக்கணும்” என அழுதுக்  கொண்டே கூற

“நானும் அதான் நினைச்சேன். நம்ம பிள்ளைகளுக்காக தான் நம்ம உழைக்கிறோம், அதுக்காக அடிப்படையே ஆட்டம் காண விடக் கூடாது”என்றார்

பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு பிள்ளைகள் இருவரும் அழ, சமாதானம் செய்தனர்

அன்பு சிறுவர்களே, பாசமிகு பெற்றோர்களே, வாசகர்களே,

இது ஒரு கற்பனை கதை. யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல. இந்த கதையில் உள்ள நிகழ்வுகள், இன்று சிறுவர்களுக்கு நடந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. 

அலைபேசியில் சிக்கித் தவிக்கும் சிறுவர்களே, ஆண்ட்ராய்டு போனுக்கு அடிமைப்பட்டு கிடைக்காமல், எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை பற்றி சிந்தியுங்கள்

நன்றி,  

ஜெ.ரோஹின் 

“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#Ads – Kids Story Books – Deals from Amazon 👇

 

#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. சிறுவர்கள் இன்று மொபைல் தான் கதி என இருக்கின்றனர். இது மாற்றமாக நினைகுகிறார்கள். என்ன செய்வது.விதி வரைந்த கோலம்.நல்ல படிப்பினை கதை கதை ஆசிரியருக்கு பாராட்டுக்கள்..விபரீத விளையாட்டு.

கயல்விழியும் சீதாப்பழமும் (சிறுகதை) – ✍ லக்ஷ்மி விஜய்

குட்டி யானை (சிறுகதை) – ✍ கார்த்திக் கிருபாகரன்