எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“கேசவ் தரகர் காலைல போன் பண்ணினார். நீ நல்லா தூங்கிகிட்டு இருந்தே அதான் எழுப்பல, நாளைக்கு பொண்ணு வீட்டிலிருந்து வரர்தா தரகர்கிட்ட சொல்லியிருக்காங்க. ஏற்கனவே போன்ல அவங்க எதிர்பார்ப்பை சொல்லிட்டாங்க. இப்ப நம்ம வீட்டுக்கு வந்து பார்த்து மேற்கொண்டு பேசி முடிக்கணுமாம். அவங்க சைடுல மூணு பேர் போட்டி போடறாங்களாம் . பொண்ணுக்கு ரொம்ப டிமாண்ட் போல” என்று என் அம்மா கூறினாள்.
அம்மா நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நானும் ரம்யாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிஞ்சு கொண்டுதான் காதலித்தோம். உன்னைப்பத்தி, என்னைப்பத்தி எல்லா விஷயத்தையும் ரம்யாகிட்ட சொல்லியிருக்கேன். இடையில் இவங்க யார்? என்ன தான் அப்பா, அம்மாவா இருந்தாலும் ஒரு லிமிட் வேண்டாமா? இவங்க கண்டிஷனுக்கு எந்த மாப்பிள்ளையும் ஒத்துக்கவே மாட்டான். அப்படி ஒத்துக்கிற மாப்பிள்ளை கிடைச்சா எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. இவங்க நம்மல மிரட்டி பார்க்கிறாங்க. நான் ரம்யாகிட்ட இன்னிக்கே பேசறேன். அவங்க சொல்றபடியெல்லாம் என்னால போக முடியாது, அப்படி ரம்யாவும் என் வழிக்கு வரலன்னா, நான் நேரடியாவே அவகிட்ட சொல்லிடறேன் என்னை மறந்து விட சொல்லி” என்றேன்.
“டேய் அவசர படாதேடா.. ரம்யா நல்ல பொண்ணுடா, அவங்க ரம்யா மேல வச்சிருக்கிற பாசத்தால அப்படி கேட்கிறாங்க. இதே ஊர்ல தானே இருக்க போறே? இரண்டு பேரும் தினமும் வந்து என்னை பார்த்துவிட்டு போங்களேன்.. அதில் உனக்கு என்ன கஷ்டம்?
அம்மா, அதெல்லாம் உனக்கு புரியாது. உன்னை இங்கே தனியா விட்டுட்டு, அவங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்க எனக்கு விருப்பமில்லை. அவங்களுக்கு அவங்க பொண்ணு மேல பாசம்ன்னா, எனக்கு உன் மேல பாசம், உனக்கு என் மேல பாசம். பணத்தை காண்பிச்சி பாசத்தை விலை பேசற அவங்களுக்கு, நான் விலை போக மாட்டேன். தரகர்கிட்ட நானே நாளைக்கு அவங்க நம்ம வீட்டுக்கு வர வேண்டாம்ன்னு சொல்ல சொல்லிடறேன் என்று கூறி அம்மாவின் கண்களிலிருந்து வந்த நீரை துடைத்து விட்டு, ரம்யாவின் அம்மாவிற்கு போன் செய்தேன், ரம்யாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்க்க சொல்லி” .
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings