in ,

வாழ்வின் வண்ணங்கள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சுபத்ரா அவர்கள் இருவரையும் உட்காரச் சொன்னார். 

‘வெல்! எதுக்கு வந்திருக்கீங்க ? என்ன பிரச்சினை!.’

‘மேடம் ! முதலில் நான் யாருன்னு சொல்லிடறேன். என் பெயர் கார்த்திகேயன். இது என் மனைவி மாதங்கி! இரண்டு பேரும்  ஐ.டி துறையில் வேலை பார்க்கிறோம். எங்களுக்குள்ளே எந்த பிரச்சனையும் இல்லை மேடம். நாங்க வந்தது வேற ஒரு விஷயமா!’

சுபத்ராவின்  முகத்தில் வியப்பு தெரிந்தது. பொதுவாக அவளிடம் வருபவர்கள் மணவிலக்கு சம்பந்தமான மன வேறுபாடுகளை பேசத்தான் வருவார்கள். இவர்கள் வித்தியாசமாக தெரிந்தார்கள். அவள் அமைதி காத்தாள். மனோதத்துவமே  பேச விட்டு விஷயத்தை வெளியே கொண்டு வருவதுதான்.

கார்த்திகேயன் சொல்ல ஆரம்பித்தார்.

“எங்களுக்கு பிரச்சினை கொடுக்கிறது எங்க அம்மா தான் மேடம். பணமோ சொத்தோ இல்லை வேற எதுவும் இல்லை. ஆனா தினமும் பிரச்சினை தான். எதுக்காக ஆரம்பிக்கிறாங்க ஏன் சண்டை போடுறாங்க எதுவுமே புரியலை. முதியோர் இல்லத்தில் சேர்க்கறதுக்கு எங்க இரண்டு பேருக்குமே மனசு வரலை. எப்படி அவங்களை பழைய மாதிரி மாற்றுவதுன்னு தான் யோசிக்கிறோம்.

“உங்க மனைவி ஒண்ணும் சொல்லலையே!அவங்ககிட்ட தனியா பேசலாமா? “

‘ஷ்யூர் மேடம் ‘,என்று கார்த்திகேயன் விலகி செல்ல  மாதங்கி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

சாப்பாடு, பொழுது போக்கு, தூக்கம், ஓய்வு என்று எல்லா விஷயங்களையும் தெளிவு படுத்திக் கொண்ட பின் கார்த்திகேயனையும் உள்ளே வரவழைத்தார் அந்த மனோதத்துவ நிபுணர்.

“பொதுவாக இது ஒரு பாதுகாப்பில்லாத ஒரு பயம் (insecurity) என்றுதான் சொல்லணும் . நீங்க நினைக்கிற கோணத்தில் எந்த பெரியவங்களும் வரமாட்டாங்க. ஒரு வயசுக்கு மேல உடம்பில் எல்லா பிரச்னைகளும் வர ஆரம்பிக்கும் போது அதை நிறைய பேரால் எதிர்கொள்ள முடிவதில்லை.ஓய்ந்து போய்விடுகிறார்கள். பயம் பதட்டம் இன்னும் என்ன பிரச்னைகளை இந்த உடல் கொடுக்கப் போகிறதோ என்ற தடுமாற்றம் எல்லோரிடமும் இருக்கும்.”

“ஆனால் நாங்கள் தான் எல்லா இடத்திலும் கூடவே உறுதுணையா இருக்கோமே!”

“அது உங்க பார்வை.அவங்க என்ன நினைக்கிறாங்க அப்படின்னு  நமக்கு தெரியாது.(put your legs in somebody’s shoes) அப்படின்னு சொல்வதுண்டு A to Z எது வேணும்னாலும் இருக்கலாம்.

நிறைய முதியவர்கள் ஏதாவது ஒரு பொழுது போக்கில் மனசை மாத்திக்கிறாங்க. வரையறது கவிதை எழுதுறது, இல்லை யாரோடாவது  அரட்டை அடிப்பது இப்படி ஏதாவது. சில வீடுகளில் குழந்தைகள் விளையாடுவது பார்த்து தங்களை உற்சாகமாக்கிக் கொள்வார்கள்.அப்படி எந்த பொழுது போக்கும் இல்லாமல்  இருக்கும் போது மனம் சாத்தானின் உலைக்கூடம் ஆகிறது.”

“இப்போ ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு  கொஞ்சமாக உப்பு போட்டால் அது எதுவும் தெரியாது. அது சின்ன வயசு. உடம்பில் எங்கே அடிபட்டாலும் அதைப்பத்தி கவலையே படாமல் எப்போ மறுபடி விளையாட போகலாம்னு நினைக்கிற வயசு.

அடுத்து இன்னும் உப்பு போட்டு அதை சாசுரேடட் ஆக ஆக்கும் போது உடம்பில் அடிபட்டாலும் அதைப் பொறுத்துக் கொண்டு தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுகிற வயசு.

இதில உப்புன்னு சொல்றது உடல் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். பிள்ளைகள் படிப்பு கல்யாணம் என்று பல விதமான அலுவல்களில் எதையுமே பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த முடியாத ஒரு வயசு .

“நிறைய உப்பு போட்டு தண்ணீரை சூடு பண்ணி கரைய வைச்சு சூப்பர் சாசுரேஷனா மாற்றுவது  முதியோரோட வயசு.

சட்டுன்னு அதிகமாக இருக்கற உப்பு அடியில் படிஞ்சுடும். அது மாதிரிதான் அவங்களால பொறுத்துக்க முடியறதில்லை. ஒரு சின்ன மோதலுக்கும் மனசு உடம்பு இடம் கொடுக்கறதில்லை. ஆனா அதை அவங்க மாத்தி வெளிக்காட்டுறாங்க. இதுதான் நிஜம்.”

அவர்கள் இருவரும் எதுவுமே பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தார்கள்.

“வெல், கண்ணாடிப் பாத்திரம் மாதிரி தான் கையாளணும். மனசு விரிசல் விட்டுடும். தினம் ஒரு பத்து நிமிஷமாவது அவங்களோட இயல்பா பேசுங்க.அவங்களுக்கு பிடிச்ச விஷயங்கள்,  பழைய சினிமாவோ பாட்டோ கதையோ ஏதோ ஒண்ணுல ஈடுபடுத்துங்க.

அவங்களை பேச விடுங்க.  அவங்களோட வாழ்க்கையில எதெல்லாம் கடந்து வந்ததா அவங்க சொல்றதை பொறுமையா கேளுங்க. ஒரு பத்து நாள் கழிச்சு வந்து சொல்லுங்க. அதுக்கப்புறமும் அவங்க மாறலைன்னா அப்புறம் யோசிப்போம்.”

“இதெல்லாம் சாதாரணமாக முந்தி எல்லா வீடுகளிலும் நடக்கும். எல்லாத்துக்கும் பெரியவங்ககிட்டே கேட்டு செய்வதை ஒரு வழக்கமான வச்சிருந்தாங்க. ஆனா இப்போ அப்படி நடக்கிறது ரொம்ப கொஞ்ச வீடுகளில் தான். அவங்களை என்கேஜ்டா வச்சுப் பாருங்க.

கேட்டுக் கொண்டிருந்த இருவர் மனதிலும் ஒரு தெளிவு பிறந்தது.

“நாங்க முயற்சி பண்ணி பார்க்கிறோம் மேடம். சரியாயிடும் அப்படின்னு நினைக்கிறோம்.”

நிச்சயமாக, புன்னகையுடன் விடை கொடுத்தாள் அந்த மனோதத்துவ நிபுணர்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எங்கள் காங்கோ!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை