இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த பிராந்தியத்தில் இருந்த மற்ற மரங்களிலும் செடி கொடிகளிலும் தஞ்சமடைய தொடங்கின. இதில் பெரும்பாலும் பிழைத்துக் கொண்டன. சில செத்து மடிந்தன. அதநாதன் விதிக்கேற்ப எல்லாம் நடந்தது. இதில் சிறிய ஜந்துக்கள் பெரிய ஜந்துக்கள் என்ற பேதம் இல்லை. புத்திசாலியான சிறு புழுக்கள் கூட அதே மண்ணில் ஆழமாக துளையிட்டு சென்று ஒளிந்து கொண்டு தப்பி பிழைத்தன.
ஒரு வாராக அந்த இடம் ஒரு புல் பூண்டு கூட இல்லாமல் அந்த புல்டோசரால் சுத்தமாக்கப்பட்டு விட்டது. ரவியின் தகப்பனார் பலராமன் வந்து இடத்தை சுற்றி நோட்டமிட்டார். ஒரு சிவில் இன்ஜினியரை அழைத்து வந்தார். ஒரு மேஸ்திரி வந்தார். இவர்களோடு ஏதேதோ பேசி திட்டம் போட்டார்.
ஒரு நாள் அந்தப் பெரிய நிலப்பரப்பில் பறந்து விரிந்த தோட்டம் வந்துவிட்டது. நாலா பக்கமும் கனமான உயரமான சுவர்கள், சுவரின் உச்சியில் முள்கம்பிகள். முன்னர் அங்கிருந்து தப்பி பிழைத்த உயிரினங்கள் தூரத்திலிருந்து என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தன.
ஒருநாள் ஒவ்வொன்றாக அவைகளும் உள்ளே நுழைய ஆரம்பித்து விட்டன. முன்பிருந்த மாதிரி காடு மாதிரி இல்லை அந்த இடம் இப்போது. பெரிய பெரிய தென்னை மரங்கள் மா மரங்கள் வேப்ப மரங்கள் என்று பலவகை மரங்களும் காய்கறி செடிகளும் பூஞ்செடிகளும் கொடிகளும் தாறுமாறாக இல்லாமல் வரிசை கிரமமாககிரம்கமம அழகாக வளர்ந்திருந்தன. உள்ளே மனிதர்களின் நடமாட்டம் எளிதாக இருந்தது.
தோட்டத்திற்குள் சின்ன குடில் கூட இருந்தது, அதன் எஜமானர் தங்க. இப்பொழுது இருந்த இந்த காட்டிற்கு அவர் தான் ராஜா. எலிகளாலும் அணிகளாலும் முன்பு போல் சுதந்திரமாக திரிய முடியவில்லை. அந்த எஜமானரை கண்டாலே ஓடி ஒளிந்து விடும்.
பூச்சிக்கொல்லி மருந்துகளையும் எலி மருந்துகளையும் பயன்படுத்தி அவற்றின் தொகையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தாவரங்கள் வளர்வதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதீதமாக வளர்ந்த தாவரங்களை வெட்டினார்.
அங்குள்ள ஜந்துக்கள் அந்த எஜமானரையும் அங்குள்ள மற்ற மனிதர்களையும் வியப்போடு பார்க்கும். எவ்வளவு பலம் மிகுந்த மனிதன் இவன்!
ஆமாம் அவன் எவ்வளவு பலம் மிகுந்த மனிதன் என்று அவனுக்கு தானே தெரியும்? ஒரு பெரிய தோட்டம் போட எவ்வளவு செலவாகும்? பேங்க் லோனுக்கு நாயாய் அலைந்தது, கூலி ஆட்களை திரட்டுவதில் சிரமப்பட்டது, இதற்குள் உறவினர் ஒருவர் காலமாக அதற்கு ஒரு செலவு, மனைவி பக்கத்து உறவின பெண் ஒருத்தி திருமணம் ஆக அதற்கு ஒரு செலவு என்று செலவுகளும் சிரமங்களும் பட்டது அந்த மனிதன் பலராமனுக்கு தானே தெரியும்
பல வருடங்கள் கடந்தன பறந்து விரிந்த தோட்டம் அக்கடா என்று ஈசி சேரில் அமர்ந்திருந்தார் பலராமன்.மேலே நீல வண்ண வானம் வெண் பஞ்சு மேகத் தேவதைகளும் பறவைகளும் பட்டங்களும் சலசலப்போடு இருந்தது வானம். ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வானத்தை மட்டும் கூர்ந்து கவனித்தால் அதன் நிச்சலமான ஆழம் புரிந்தது பலராமனுக்கு. ஒரு பெரிய நிம்மதி பெறுமூச்சு ஒன்று வந்தது அவரிடம் இருந்து.
சில நிமிடங்கள் சற்று அயர்ந்து தூங்கி இருப்பார் போலும், சில்லென்று ஒரு மழைத்துளி முகத்தில் விழுந்தது. அடுத்து கையில் ஒன்று விழுந்து கையை பார்த்தார். மிகச் சிறிய மழை துளி தான் பார்க்கலாம் என்று மறுபடியும் கண்ணை மூடினார். ஆனால் அந்த மழைத்துளிகள் அவரை தூங்க விடவில்லை. முகத்திலும் தோளிலும் கைகளிலும் பட்டு உடல் எங்கும் பட ஆரம்பித்தது
இனி எழ வேண்டியதுதான் ஈஸிசேரை தூக்கிக்கொண்டு குடிலுக்குள் போனார். செல்போனை எடுத்து ரவியோடு பேசியபடியே ஜன்னலோரம் வானத்தை பார்த்தார். தெற்கு பக்கம் கருத்த கூட்டங்கள் திரண்டு இருந்தன. அந்த பிராந்தியம் முழுவதுமே வெளிச்சம் குறைந்து இருள ஆரம்பித்தது. மழை கொட்ட ஆரம்பித்தது.
“ஆமாம்பா, நியூஸ்ல கூட சொன்னாங்க. வங்கக்கடலில் டிப்ரஷன் ஃபார்ம் ஆகி இருக்கு என்று அது சைக்லோனா மாறினா எங்க கிராஸ் ஆகுமோ தெரியல. அடுத்த 24 மணி நேரத்தில் தான் தெரியும்பா” ரவி மறுமுனையில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தான். “தேவையானதை எடுத்துக்கொண்டு சீக்கிரம் வாடா இங்கு” பலராமன் கட்டளையிட்டார்
நான்கைந்து நாட்களுக்குத் தேவையான அரிசி, உப்பு, பருப்பு, புளி, எண்ணெய் என்று மளிகை பொருட்களை சேகரித்துக் கொண்டு காரில் பறந்தான் ரவி தங்கள் தோட்டத்திற்கு. அப்பாவும் மகனும் குடிலுக்குள் தஞ்சம் அடைந்தனர்.
அங்கே எல்லா வசதிகளும் இருந்தன. டிவி, பிரிட்ஜ் கரண்ட் போனால் ஜெனரேட்டர் என்று. 24 மணி நேரம் சென்றது புயல் உருவாகி அவர்கள் ஊர் பக்கம் தான் கரையை கடக்குமாம் செய்தியும் வந்தாயிற்று மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்குமாம் அப்பாவும் மகனும் மெழுகுவர்த்திகளும் டார்ச் லைட்களும் கூட ரெடியாக வைத்திருந்தார்கள். எல்லாம் தயாராக வைத்திருந்தும் என்ன பயன் அந்த நாளும் வந்தது. புயல் அடித்த்த ஒரு வேகத்தில்! பலராமன் உட்கார்த்திருந்த கட்டில் கூட லேசாக அதிர்ந்தது.
ஒவ்வொரு தடவையும் புயலுக்கு அங்கிருந்து அத்தனை மர சாமான்களும் லேசாக அதிர்ந்தன.உள்ளேயே இப்படி இருந்தால் வெளியே எப்படி இருக்கும்? சில தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு பெரிய மாமரத்தின் பழைய கிளைகள் முறிந்து விழுந்தன.
வேப்பமரம் அப்படியே பெயர்ந்து விழுந்தது. அதே மாதிரி சின்ன செடிகள் கொடிகள் தாறுமாறாக சாய்ந்தன. மின்கம்பம் ஒன்று சாய்ந்து தோட்டத்தின் சுவர் மேல் இருந்தது. இன்னொன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது. தோட்டத்தில் குடிலின் முன்பக்கம் சொருகப்பட்ட தகரம் ஒன்று காற்றில் பறந்து வந்து ரவி நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடியை பதம் பார்த்தது. அந்தப் பிராந்தியமே அல்லோல கல்லோல பட்டது.!
அந்தத் தோட்டத்தின் பெரும்பாலான ஜந்துக்கள் சிவப்பதமடைந்தன ரவி குடிலுக்குள் நுழையும் போது அவனோடு நுழைந்துவிட்ட அணிலும் எலியும் அங்கு காப்பாற்றப்பட்டது. அணிலும் எலியும் பழைய சாமான்கள் பரப்பப்பட்ட இடத்தில் தஞ்சம் அடைந்தன. அவை இரண்டும் முகத்தை நீட்டு வெளியே பார்க்கின்றன.
பாவம் அந்த எஜமான் சோர்ந்து போய் நாற்காலி உட்கார்ந்து இருக்கிறார். பையன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறான். புயலால் தொண்ணூறு சதவீதம் தோட்டம் நாசமடைந்திருந்தது. இதை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வர இன்னும் சில ஆண்டுகளாகும்.
எலியும் அணிலும் ஒன்றுக்கொன்று பார்க்கின்றன பலம் மிகுந்த மனிதன்என்று நினைத்தோமே இப்படி சோர்ந்து போய்விட்டானே இவனுக்கும் மேல் பலம் உள்ளவன் யாராவது இருக்கிறான் என்று நினைக்கின்றனவா? அப்படியும் இருக்கலாம்!
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings