2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“நிர்மல்.. இது என்னோட ஃபோன் நம்பர், (பேப்ரில் எழுதி கொடுத்தாள்) ஏதாவது சந்தேகம் இருந்தா கால் பன்னுங்க “
“இவள் விட மாட்டா போல” மனசுக்குள் நினைத்தான், ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“ஓகே காயத்ரி, நான் கால் பண்றேன். எனக்கு இப்போ நேரம் ஆச்சு, நான் போறேன் பாய்…” அங்கிருந்து கிளம்பினான்.
இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம் என்று நினைத்திருந்த காயத்ரிக்கு, இவன் உடனே போனதால் கொஞ்சம் சங்கடம்தான்.
நிர்மல் தன் வீட்டுக்கு சென்றான். உஷாவின் நினைப்பிலேயே அவன் இருக்க, மறுபக்கம் காயத்ரி நிர்மலோட நினைப்பிலேயே இருக்கிறாள். அவள் அறியாமலேயே, அவளுடைய மனதில் நிர்மல் வந்து விட்டான்.
அடுத்த சனிக்கிழமை நிர்மல் வருவானா? அவன் எந்த கலர் சட்டை போட்டு வருவான்? அவனுக்கு ஏதாவது நம்ம வாங்கிட்டு போலாமா? என்று காயத்ரி நினைக்கிறாள். ஆனால் நிர்மல் சனிக்கிழமை உஷா வருவாளா? என்ன கலர் துணி போட்டுட்டு வருவாள்? அவளுக்கு என்ன வாங்கி கொண்டு போகலாம்? என்று இவன் நினைக்கிறான்.
ச்சே.. மறந்துட்டேனே! நான் என் நம்பர் கொடுத்ததுக்கு பதில், அவன் நம்பரை வாங்கிட்டு வந்திருந்தா, நம்ம போன் பண்ணி பேசி இருக்கலாம், இல்லனா வாட்ஸ் அப்ல மெசேஜ் அனுப்பி இருக்கலாமே ! என்று காயத்ரி நினைக்கிறாள். இந்த பக்கம் அன்னிக்கு அவ பேரு மட்டும் தான் கேட்டோம். அவள் நம்பர் கேட்டிருந்தோம்னா அவளுக்கு மெசேஜ் பண்ணி இருக்கலாம், இல்லனா போன் பண்ணி பேசி இருக்கலாம், என்று நிர்மல் வருத்தப்பட்டான்.
இப்படி, இவர்கள் இருவரும் தங்கள் காதலர்களை நினைத்து வருத்தப்பட்டனர். ஆனால், இதை பற்றி ஏதும் அறியாத உஷா, பெருமாள் கோவிலுக்கு சென்று தற்போது தான் வீட்டிற்கு வந்தாள். உஷா காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று திரும்பி வருவதற்கு நேரம் ஆகிவிட்டது. ஆகையினால், இன்று டைப்ரைட்டிங் கிளாசுக்கு அவள் செல்லவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக நாட்கள் நகர்கிறது. சனிக்கிழமையும் வந்தது. அன்றைய நாள், சீக்கிரமாகவே, நிர்மல் கிளாசுக்கு வந்தான். அவனுக்குப் பிறகு காயத்ரி கிளாசுக்குள் வந்தாள்.
“ஹாய் நிர்மல் ஒரு கால் பண்ணல ஒரு மெசேஜ் பண்ணல, நான் உங்களிடம் நம்பர் கொடுத்துட்டு தானே போன மிஸ் பண்ணிட்டீங்களா”
“இல்லங்க பத்திரமா வச்சிருக்கேன்”
“அதை வச்சு பூஜை போடுங்க”
“நீங்க ஏதாவது சந்தேகம் இருந்தால்தானே கேட்க சொன்னீங்க. எனக்கு எந்த சந்தேகமும் இல்ல, அதனால தான் உங்களுக்கு நான் கால் பண்ணல”
“சந்தேகம் இருந்தால் தான் கால் பண்ணுவீங்களா”
இவ்வாறு நிர்மலும், காயத்ரியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வகுப்புக்குள் நுழைந்தாள் உஷா.
“ஹாய்.. நீங்களா இங்க என்ன செய்றீங்க” என்று குழப்பத்துடன் நிர்மலை பார்த்து உஷா கேட்டாள்.
“நானும் கிளாஸ்ல ஜாயின் பண்ணிட்டேன்” என்றான் நிர்மல்
“எப்போதிலிருந்து கிளாசுக்கு வரீங்க?”
போன வாரத்திற்கு முன் வாரம் அட்மிஷன் போடுவதற்காக வந்தேன். அப்பதான் மயக்கம் போட்டு விழுந்து, நீங்க கூட வந்து காப்பாத்துனீங்களே! அப்படின்னு சொன்னதும், ‘என்ன ஆச்சு நிர்மல்? எப்ப மயக்கம் போட்டு நீ விழுந்த எனக்கு தெரியாம?’ என்று காயத்ரி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டாள்.
“எனக்கு ஒன்னும் ஆகல காயத்ரி” என்று காயத்ரியிடம் கூறிவிட்டு, உஷாவை பார்த்து ‘போன வாரம் எதற்காக நீங்க வரல’. ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல” நான் பெருமாள் கோவிலுக்கு போனேன், வரதுக்கு நேரம் ஆயிடுச்சு, அதனால தான் வர முடியல என்று உஷா கூறினாள்.
உஷா, அவனைப் பார்த்து, “உங்க பேர் என்ன? சொல்லவே இல்லையே நீங்க. என் பேரு நிர்மல்” என்றான்.
உஷா வந்ததிலிருந்து காயத்ரியை கண்டுக்கவே இல்ல நிர்மல். பாவம் காயத்ரி அவளது முகம் மாறியது.
காயத்ரி கேட்கும் கேள்விக்கெல்லாம் அரைகுறையாக பதில் சொல்லிவிட்டு, உஷா கேட்கும் கேள்விக்கு மட்டும் சிரிச்சு சிரிச்சு பதில் சொல்வதை பார்த்த காயத்ரியின் மனம் வருத்தப்பட்டது. ஆனால், இது பற்றி நிர்மலுக்கு கவலையே இல்லை. அவனுக்கு உஷா பேசினால் போதும்.
ஒருவருக்காக நாம் மற்றொருவரை வெறுப்பது தவறு தானே. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆசிரியர் வந்து விட்டார். அனைவரும் அவர்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அமர்ந்து, ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை முறையாக பயின்றார்கள். வகுப்புகள் முடிந்து விட்டது. அனைவரும் களைந்து சென்றனர்.
அப்போது, “உஷா.. எனக்கு இன்னிக்கு நடத்திய பாடத்துல சந்தேகம் இருக்கு எனக்கு சொல்லித் தரீங்களா ?” என்று நிர்மல் கேட்டான்.
“இப்ப எனக்கு பஸ்ஸுக்கு நேரம் ஆயிடுச்சே”
“பரவால்லங்க நீங்க இப்ப போங்க. இன்னிக்கு நடத்தின பாடத்தை மட்டும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பி விடுறீங்களா? நான் நோட்ஸ் எழுதல”
“ஓகே நான் அனுப்பி வைக்கிறேன். உன் நம்பர் கொடுங்க, என்று உஷா கேட்டாள். நிர்மல் தன்னுடைய மொபைல் எண்ணை கூறினான். சரிங்க நான் உங்களுக்கு, போட்டோ எடுத்து அனுப்பி விடுறேன்” என்று கூறி உஷா அங்கிருந்து சென்றார்.
உஷா சென்ற அடுத்த கனமே காயத்ரி வந்து “நிர்மல் உங்க மொபைல் நம்பர் என்கிட்ட கொடுங்க, நான் உங்களுக்கு நோட்ஸ் எல்லாம் எடுத்து அனுப்புறேன்” என்று சொன்னாள்.
“காயத்ரி..நீங்கதான் போன வாரமே, உங்க நம்பரை என்கிட்ட கொடுத்துட்டீங்களே!”
“நீங்க நம்பர் வச்சிக்கிட்டே மெசேஜ் பண்ண மாட்ரிங்க, பரவால உங்க போன் நம்பர் கொடுங்க நான் நோட்ஸ் எடுத்து அனுப்புறேன்”
காயத்ரி கட்டாயப்படுத்தி கேட்டதால் வேறு வழி இல்லாமல் நிர்மல் தன் மொபைல் நம்பரை கொடுத்தான்.
உஷா கேட்கும் பொழுது சிரிச்சுக்கிட்டே சொன்னான். இப்போ காயத்ரி கேட்கும் பொழுது, முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொல்கிறான்.
“நிர்மல் உனக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால், இப்ப கேளு உனக்கு நான் சொல்லி தரேன்” என்று காயத்திரி கேட்டாள்.
“எனக்கு பஸ்ஸுக்கு லேட் ஆயிடுச்சு. அடுத்த வாரம் பார்க்கலாம்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.
பாவம் காயத்ரி. காயத்ரியின் எண்ணம் நிறைவேறுமா அல்ல நிர்மல் ஆசை நிறைவேறுமா என்று, அடுத்தடுத்து வரும் அத்யாயங்களில் காணலாம்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings