in ,

உயிர் உள்ள வரை உஷா (அத்தியாயம் 1) – பாலாஜி ராம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பச்சை நிற சுடிதார்.

அது ஒரு கோடை காலம். கோடை காலம் என்றாலே விடுமுறை தான் நினைவுக்கு வரும். 2020 மே மாதம், 10 ஆம் தேதி, அதிகாலை 07:30 மணிக்கு, மதுராந்தகத்திலிருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் ரயில் வண்டி  மதுராந்தகம் ரயில்வே ஜங்ஷனிலிருந்து கிளம்பியது.

அந்த ரயில் ஏறக்குறைய 30 நிமிடங்களில் செங்கல்பட்டு ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தடைந்தது.

அந்த ரயிலில் இருந்து பச்சை நிற சட்டையும்,  வெள்ளை நிற பேண்ட்டும் அணிந்திருந்த,  ஆறடி உயரமுள்ள ஒரு வாலிபன் இறங்கினான்.

இவன் வேகமாக நடக்க ஆரம்பிக்கிறான். கையில் மொபைல் ஃபோனை பார்த்துக் கொண்டும், காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டும், முன்னாடி யார் வருவது போவது என்று கூட பார்க்காமல் மொபைலை அவ்வளவு மும்முரமாக பார்த்துக்கொண்டு நடக்கிறான்.

இவனுக்கு எதிரே  வந்த பச்சை நிற சுடிதாரும், வெள்ளை நிற துப்பட்டாவும் அணிந்த ஒரு பெண் இவனை போலவே காதில் ஹெட்செட் மாட்டி கொண்டும், கையில் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டும் முன்னாடி யார் வருவது போவது என்று கூட பார்க்காமல் வேகமாக நடக்கிறாள்.

இந்த நடைபாதையின் நடுவே சின்ன பள்ளம் ஒன்று உள்ளது. அந்த பள்ளத்தின் அருகே பெரிய  கல் ஒன்றும் இருந்தது. இதை பார்க்காமல் வேகமாக நடந்து வந்த அந்த வாலிபனுடைய கால் அந்த கல்லில் மோதி  கீழே விழுந்தான். இவன் கீழே விழுவதற்க்கும், அந்த பச்சை கலர் சுடிதார் போட்டு வந்த பெண் எதிரே வருவதற்க்கும் சரியாக இருக்க, இவனுடைய கைகள் இரண்டும் அந்த பெண்ணுடைய காலை தொடுகிறது.

பாவம்…

பெருத்த அவமானமாக போய்விட்டது. அந்த பெண்ணுக்கும் இவன் வயது தான் இருக்கும்.

அந்த பெண்ணை பார்க்கும் போது இலட்சணமாகவும் மங்களகரமாகவும் தெரிகிறாள்.

அந்த பெண்ணுக்கு இயல்பாகவே இரக்கம் குணம் இருக்கும் போல, அந்த வாலிபனை தூக்கி விட்டு, தன் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து,  “குடிங்க சார்” என்று சொல்லி கொடுத்தாள்.

“பாத்து வாங்க சார் ஃபோனை பாத்து கிட்டே வந்தா இந்த நிலைம தான். பாத்து பத்திரமா போங்க வேற எங்கேயாவது விழபோறிங்க” என்று சொல்லி,  குடிக்க கொடுத்த தன் தண்ணீர் பாட்டிலை வாங்கி கொண்டு,  தனக்கும் இதே நிலைமை நேரலாம் என்று நினைத்து  ஃபோன், ஹெட் செட், இரண்டையும் தன் பையில் போட்டு கொண்டு, அவ்விடம் விட்டு நகர்ந்து போனாள்.

இந்த வாலிபன் அந்த பெண்ணை பார்த்த மயக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அவள் அழகில் வாயடைத்துப் போனான்.

அவள் சென்ற திசையை பார்த்து கொண்டு, அவள் நினைவிலே வந்த வேலையை மறந்தான்.

அவன் பெயர் நிர்மல். இவனுக்கு 23 வயது. கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான்.

ஆறாவது(இறுதி) செமஸ்டர் தேர்வினை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறான்.

தேர்வுகள் அனைத்தும் எழுதி முடித்த பிறகு, விடுமுறை விடப்படுகிறது. இந்த கோடை விடுமுறையில், மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு சென்று, சிற்பங்களை  பார்த்து ரசிக்கலாம் என்ற எண்ணத்தில்  தான் அவன் செங்கல்பட்டிற்கு வந்தான்.

செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு செல்லும்போது தான்,  மாமல்லபுரத்து சிற்பமே எதிரே வந்ததால், அதன் அழகில் மயங்கி கிடக்கின்றான் நிர்மல்.

அந்தப் பெண்ணின் நினைவிலே, அதே இடத்தில் பல மணி நேரம் நின்று கொண்டிருந்தான். இனி இவளை எப்பொழுது பார்ப்போம்? இவள் யார்? இவள் பெயர் என்ன? ஏதும் தெரியாமல் பார்த்த மாத்திரத்திலே காதல் வயப்பட்டான் நிர்மல்.

மனம் முழுதும் அவள் இருக்க இனி என்ன செய்வது என்று தெரியாமல்,  மாமல்லபுர பயணத்தை இடைநிறுத்தி பச்சை  நிற சுடிதாரை நினைத்து பச்சை நிற அரசு பேருந்தில் ஏறி, தன் வீட்டிற்கு திரும்பி போனான்.

வீட்டுக்கு சென்ற நிர்மலுக்கு,  உறக்கமும் வரவில்லை!  பசியும் வரவில்லை!  கண்களை மூடினாலும் அவள்!  கண்களை திறந்தாலும் அவள்! பார்க்கும் இடம் முழுவதும் அவள்!

இவனது மனதை  திருடி சென்ற அந்த பச்சை நிற சுடிதார், இவனுக்கு தெரியாமலேயே இவன் மனம் முழுவதும் நிரம்பி விட்டாள்.

அவளை பார்ப்பதற்காகவே மறுநாளும் செங்கல்பட்டு ஜங்ஷனுக்கு சென்று காத்திருந்தான். ஆனால், அன்று மதியம் வரை அந்தப் பெண் வரவே இல்லை. அன்று மட்டும் அல்ல மறுநாள், அதற்கும் மறுநாள் என்று தொடர்ந்து ஒரு வாரங்களுக்கு மேல் அவன் செங்கல்பட்டு ஜங்ஷனுக்கு வந்து காவல் இருந்தான்.

ஆனால்,  இவன் ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை. அவளை நினைத்து! உடல் இளைத்து! மனம் களைத்து! தன் சிந்தனையெல்லாம், அந்தப் பெண்ணின் மீது வைத்திருந்தான்.

தன் நண்பர்களுடன் சரியாக பேசாமல்,  தன் உறவினர்களிடமும், தன் வீட்டாரிடமும் கூட சரியாக பேசாமல் இருந்தான்.  முறையான உணவு உண்ணாமல், தூக்கம் வராமல்  காதல் என்னும் நோயில் அவதிப்பட்டு கொண்டிருந்தான். அவனை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது.

பச்சை நிற சுடிதாரை நினைத்து, தன்னுடைய பையையும் பச்சை நிறமாக மாற்றினான். தன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் கை குட்டை, வாட்டர் கேன் என சின்ன சின்ன பொருள்களையும் பச்சை நிறமாக பயன்படுத்தினான்.

இதுமட்டும் அல்ல தினமும் அவன் அணியும் உடையும் பச்சை நிறம் தான்.

அடிக்கடி அந்தப் பெண்ணின் நினைவு இவனை தொந்தரவு செய்ய, மீண்டும் செங்கல்பட்டு ஜங்ஷனுக்கு கிளம்பினான். காலை 8 மணிக்கு சென்ற அவன், மதியம் 12 மணி வரை காத்திருந்தான். இன்றய தினமும் அவளை பார்க்க முடியாது என்று, சோகத்தில் இருந்த அவனுக்கு, பாலைவனத்தில் மழை பொழிந்தது போல்! ஒரு அதிசயம் நடந்தது.

பச்சை நிற உடை அணிந்து ஒரு பெண் நடந்து வந்தாள். அவள் வேறு யாருமில்லை, இவன் அன்றைய தினம் பார்த்தானே அதே பெண்தான். இந்த முறை அவள் சுடிதார் அணிந்து கொண்டு வரவில்லை , அதற்கு பதில் புடவை அணிந்து கொண்டு வந்தாள்.

முன்பு பார்த்ததை விட இந்த முறை அவள், மிகவும்  அழகான இருக்கிறாள். அவன் மனதில் வாடி இருந்த மலர்களெல்லாம், மலர ஆரம்பித்து விட்டது. சந்தோஷத்தில் என்ன செய்வது என்றே அவனுக்கு தெரியவில்லை. ஏனெனில்,  தன் பல நாள் கனவு இன்று நிறைவேறியது என்று, அவ்வளவு சந்தோஷப்பட்டான் நிர்மல்.

அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டும் தான் நீடித்திருந்தது. அவள் கிட்ட வர வர அவனுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில், அவளின் கழுத்தில் திருமாங்கல்யம் இருக்கின்றது. கால்விரலில் மெட்டி அணிந்திருக்கிறாள், நெற்றியின் உச்சி வகுட்டில் குங்குமம் சூடி இருக்கிறாள்.

தன் ஆசை கனவாகவே போனதே என்று வருத்தப்பட்டான்.

அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் அந்த   இடத்திலேயே மயங்கி விழுந்தான்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 12) – கவிஞர் இரஜகை நிலவன்

    விழு, எழு, ஓடு… வெற்றி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை