in ,

துண்டு.. துண்டாய்.. குப்பை (சிறுகதை) – அர்ஜுனன்.S

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மஞ்சள் வெயில் அடிக்கும் மாலை நேரம். ஏரிக்கரையில் இணையோடும், தனியாகவும் மக்கள் நடைப் பயிற்சியில் இருந்தனர்.

சுண்டல் கடைகள் தான் இன்னும் முளைக்கவில்லை. ஆனால் ஏரிக்கு பக்கத்தில் இருந்த பேக்கரியில் இளைஞர்கள் கேக் வாங்கி, இங்கு வந்து பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, காலி அட்டைப் பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள் என ஏரிக்கரையில் வீசிவிட்டு செல்வது இயல்பாக இருக்கிறது. கோவிந்தன் அதை வருத்தமாக பார்த்தவாறே தன் நடைப் பயிற்சியில் இருந்தார்.

அவர் வருவதை பார்த்த கோபி..

“டே.. சிவா.. நாம ஒரு பந்தயம் வைச்சு விளையாடலாமா..?”

என்று தன் நண்பனை பார்த்து கேட்டான்.

சிவா, கோபி இருவரும் இளைஞர்கள். கல்லூரி படிப்பு முடிந்து தற்போது வேலை எதுவும் கிடைக்காததால், காலையில் பேப்பர் போடுவது, பால் பாக்கெட் போடுவது என சில்லறை வேலைகள் பார்க்கின்றனர். பொது இடங்களுக்கு வருவோரிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது அப்படி ஒரு சில்லறை வேலை.

“பந்தயமா..? என்ன சொல்லு கோபி..?”

“இங்கே வர்றவங்க கிட்ட எல்லாம் துண்டு பிரசுரம் குடுக்கிறயில.. அதோ ஒருத்தர் டார்க் ப்ளூ ஷர்ட் போட்டுட்டு தனியா வர்றார்ல.. அவர்கிட்ட ஒண்ணே ஒண்ணு குடுத்திடு.. நான் உனக்கு நூறு ரூபா தர்றேன்..”

“நூ..று ரூபாய்..யா? மொத்தம் ஆயிரம் சீட்டு விநியோகம் பண்ணினா தான் நூறு ரூபாய் கிடைக்குது..?”

“நீ ஒண்ணே ஒண்ணு மட்டும் குடுடா.. பார்க்கலாம்..”

“ஒருவேளை.. அடிச்சு கிடிச்சு போடுவாரா கோபி..?”

“ச்சே.. ச்சே..  அப்படி எல்லாம் செய்ய மாட்டார்.. அவர் வாங்க மாட்டார்.. ஆனா ஏன்னு தெரியல.. நீ வேன்னா ட்ரை பண்ணி பாரு.. பக்கத்தில வந்துட்டாரு.. குயிக்..”

கோபி சொன்ன டார்க் ப்ளூ ஷர்ட் கோவிந்தன் அருகில் வந்ததும், எல்லோரிடமும் நீட்டுவது போல ஒரு துண்டு பிரசுரத்தை நீட்டினான் சிவா.

கோவிந்தனுக்கு முன்னாடி சென்றவர்கள் எல்லாம் வாங்கி செல்ல, கோவிந்தன் வேண்டாம் என முக குறிப்பால் மறுத்து விட்டு கடந்து செல்ல ஆரம்பித்தார்.

“ஸார்.. எக்ஸ்கியூஸ் மீ..”

என அவரை அழைத்தான் சிவா.

கோவிந்தன் அவனை திரும்பிப் பார்த்து..

“நான் தான் வேண்டாம்னு சொன்னேனே..?” என்றார்.

“அது தான் ஏன்னு தெரிஞ்சிக்கலாமா..?”

தொடர்ந்து கேட்டான் சிவா.

“தம்பி.. இப்ப இங்கே எத்தனை பேருகிட்ட குடுத்திருக்கீங்க.. அதில எத்தனை பேரு அதை உண்மையிலேயே படிக்கிறாங்க? படிச்சாலும் நிறைய பேர் அதை அப்படியே கீழே போட்டுட்டு போறாங்க பாருங்க.. பொது இடத்தை இப்படி குப்பையாக்கிறது உங்களுக்கு சம்மதமா?”

“இல்ல ஸார்.. அவங்க கீழே போடுறதால இப்படி ஒரு விளம்பர உத்தியே தவறுனு சொல்றீங்களா ஸார்..?”

“நான் எப்ப அப்படி சொன்னேன்? நியூஸ் பேப்பர் உள்ள வைச்சு போடுங்க.. வீட்டு கேட்டில சொருகி வைச்சிட்டு போங்க.. குப்பை அவங்கவங்க வீட்டில தங்கிடும்.. இந்த மாதிரி பார்க், இரயில்வே ஸ்டேஷன், ஏரி, புத்தக கண்காட்சினு பொது இடத்தில குடுக்கிறதால உங்களுக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிரும்னு நீங்க செய்றீங்க.. ஆனா பொது இடத்தை குப்பையாக்கிறதில எனக்கு உடன்பாடு இல்ல.. அதனால நான் வாங்கிறதில்ல..”

என்று சொல்லிவிட்டு தன் நடைப் பயிற்சியை தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தார் கோவிந்தன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புன்னகை பூக்கள் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி.

    நடுத் தெருவில் (சிறுகதை – முற்பகுதி) – நாமக்கல் வேலு