எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நடுநிசி நேரத்திலும் நடுக்கமின்றிச் சுடுகாட்டு வழியேகூடச் சுற்றிவருபவள்தான் ‘ரேகக்கா’. “பயமா? அப்படின்னா ?” என்பாள்.
ஆனால் இன்று…
படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தவளுக்கு ஜன்னல் வழியே ஊடுருவிய வந்த நிலவொளி சுவரில் கரிய உருவமாய் நிழல் விழுந்தது. நிலவொளிக்கு குறுக்கே எதுவும் இல்லை… ஜன்னலுக்கு அருகே மரமோ செடியோ இல்ல…அப்புறம் எப்படி இந்த நிழல் ?”
அதிர்ச்சியடைந்து…லைட் சுட்சு போட எதுவும் கண்ணனுக்குத் தெரியல…நெஞ்சம் படபடக்க எழுந்து சமையலறை சென்று லைட்டைப் போட்டாள் …பிரிட்ஜ்யைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அண்ணாந்த பொழுது சீலிங் சுவரில் ஒரு நிழல் …கண்களைக் கசக்கி மீண்டும் பார்க்க …எதுவமில்ல.
பயம் கூடவே…இதயத்துடிப்பு இன்னும் அதிகமானது… அடிவயிறு கணக்க ..சிறுநீர் முட்டிக்கொண்டு வர… கழிவறை சென்றால் தேவலை என்று போனாள் …அவள் பின்னாலே யாரோ தொடர்வது போல் தெரிந்தது …சட்டென்று திரும்பியவளுக்கு அதிர்ச்சி ..எதுவுமே இல்லை.
கழிவறைக்கு வெளியே இருந்த லைட் சுட்ச்சை அழுத்தினாள் …பட்டென்று பிரகாசித்து டப்பென்று பியூஸ் போனது பல்பு… “இதென்ன சோதனை?” என்று எண்ணி செல்போன் டார்ச் ஆன் செய்து உள்ளே செல்ல …தொப்பென்று காலில் விழுந்தது பல்லி.
அது அவ்வளவு பயத்தைக் கொடுக்கவில்லை …இயற்கை உபாதை இன்று செயற்கையாய் உண்டாகி …ஒரு பீதியைத் தந்துவிட்டது …ஒரு வழியாக வெளியே வந்தவள் … “இப்போ பெட்ரூம் போகலாமா?” என்று யோசிக்க …பூனை ஒன்று சத்தமில்லாமல் எலியைப் பிடிக்கப் பதுங்கி கொண்டிருந்தது.
ரேகா பூனையைத் தாண்டி பக்கவாட்டில் பார்க்க …சுவரில் புலி போன்ற நிழல் தெரிந்தது… அப்பொழுது பார்த்து எலி நகர பூனை பாய்ந்து எலியின் கழுத்தைக் கவ்வியது ….எலி கீச்ச் கீச்ச் என்று கத்த…
ரேக்கா கழுத்தை ஒரு நிழல் உருவம் நெரித்தது … “அய்யோ! அம்மா காப்பாத்து.. என் கழுத்த யாரோ நெறிக்கிறாங்க …ஏஸி ரூம்லே இப்படி வேர்க்குதே…?!”
“அடியே…அது வேர்வ இல்ல நான் ஊத்துனா தண்ணி …எந்திரிடி மணி 8 ஆகப்போது”
“அய்யோ ..8 ஆச்சா ?!”
“ஒதவாங்க போற …விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன்னு சேர்த்துவிட்டா …ஷார்ட் பிலிம் எடுக்குறேன் …திகில் கதை சொல்றேன்னு தெனமும் உசர வாங்கிட்டு”
“அம்மா … இன்னிக்கு பைனல் வைவா இருக்கு 5 மணிக்கு எழுப்ப சொன்னேன் தானே”
“அடியே ..உன்ன கொன்னே புடுவேன் …5 மணிக்கு முன்னாலே இருந்து கழுதையா கத்துறேன்”
“அம்மா…என் பெட்மேல இருந்த ப்ராஜெக்ட் ரிப்போர்ட் எங்க ?”
“என்ன கேட்டா …நீ கொஞ்சுற அந்த ‘ரோஸி’ தான் நைட் இருந்துச்சு ..போய்த் தேடு”
வாயில் பிரஸ்வுடன் வீட்டின் கார்டன் பக்கம் போன ரேக்கா
“அம்….மா…”
“இவள…” என்று சமையலறையில் இருந்து ஆத்திரத்துடன் வெளியே வந்த அவளது அம்மா அங்கே கண்ட காட்சியப் பார்த்துக் கலகலவெனச் சிரித்தார்.
ரேக்காவின் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை துண்டுதுண்டாய் கிழித்து விளையாடிவிட்டு ..இவர்களைப் பார்த்ததும் வாலை ஆட்டிக் கொண்டிருந்தது ‘ரோஸி’
“ரோஸி…இன்னிக்கு தான் உருப்படியா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க… தப்பிச்சது தமிழ் சினிமா … உனக்கு ரெண்டு பாக்கெட் பிஸ்கெட் எக்ஸ்ட்ரா ?” என்றார் ரேக்காவின் அம்மா
“ரொம்பதான்…இப்படி ஏதவது நடக்குன்னு தெரிஞ்சி வேறு ஒரு காப்பிக் காலேஜ்லேயே எடுத்து வச்சியிருக்கேன்” என்றாள் ரேக்கா .
“கொலைகாரி …”
“வெவ்வெவ்வெ…. என்று ஓடினாள் ரேக்கா
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings