2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சுந்தரி….எந்த ஜாதக நோட்டா எடுத்து வா?
இந்த முறையாவது நல்ல வரன்னா அமைச்சு கொடுப்பா “சின்ன கருப்பா” என்று கைகளைத் தூக்கி கூப்பிட்டார் முருகன்…..
அதெல்லாம் நல்ல படியா அமையும் கிளம்புங்க…..
நீயும் ஒவ்வொரு முறையும் என்னை இப்படி தான் வாழ்த்துக் கூறி அனுப்புறா…. எங்க? வரன் அமைச்சா பாடவே இல்லை…..
ரொம்ப சலித்து கொள்ளாமல் போங்க?….
சரி….. வேற வழியேது நான் கிளம்புறேன்…. தொலைக்காட்சி இன்றைய இராசிப்பலன்கள் என்ற நிகழ்வை பார்த்ததும் “முருகன்”,இதை மட்டும் கேட்டு போறேன் சுந்தரி….
எதை கேட்டாலும் நடக்குற நடக்கும்? நீங்க முதலா கிளம்புங்க…..
நீ சொல்லுறதும் உண்மை தான்…. இருந்தாலும் இன்னைக்கு பொழுது எப்படி இருக்குன்னு தெரிஞ்சுட்டு போறாது நல்லது தானே!….
நான் சொன்ன கேட்கவா போறீங்க? நீங்க கேட்டுட்டே போங்க…..
வணக்கம்….. மேஷ ராசி அன்பர்களே என்று இன்றைய பொழுதின் நிறைகளையும், குறைகளையும் கூற ஆரம்பித்தார்….
இப்படியே ஒவ்வொரு ராசியாக வந்தது மகர ராசி அன்பர்களே…..
என் ஆரம்பித்து இன்றைக்கு உங்களுக்கு நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறிடும் அதற்காக நீங்கள் மஞ்சள் கலர்களில் ஆடை அணிந்து செல்வது நல்லது…..
தெருவோரத்தில் வசிக்கும் நான்கு ஏழைகளுக்கு உணவு தானாக வழங்கினால் மேலும் இந்த நாள் சிறப்படையும்….
வேலன் வேக வேகமாக சென்று அறையில் உடையை மாற்றி விட்டு ஸ்கூட்ரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்…..
பிறகு வெகு நேரம் கழித்து சதீஷ் அறையிலிருந்து வெளியே வந்தான்… சுந்தரி டீ… யை அவனிடம் கொடுத்தாள்…..
பதில் பேசாது டீ….யை எடுத்து குடித்தான்…. செய்தித்தாளினை மெதுவாக புரட்ட ஆரம்பித்தான் சதீஷ்….
“சுந்தரி” வழக்கம் போல வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்…..
திருமண சேவை மையத்தின் நுழைவாயில் தனது ஸ்கூட்ரை நிறுத்தி விட்டு உள்ளே சென்று அதன் முதன்மை பகுதியில் ஒரு இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தான்….
சிறிது நேரம் கழித்து அங்கு வேலை செய்யும் பெண் வந்தது….
வணக்கம் சார்…..
உங்களுடைய முழுமுகவரி மற்றும் நீங்கள் வரம் பார்க்கும் நபரின் மற்ற தகவல்கள் அனைத்தையும் கொடுத்தால் நான் ரிஜிஸ்டர் பண்ணிருவேன் சார் பிறகு உள்ளே சென்று உங்களுக்கு தேவையான, பொருத்தமான வரன்களின் தகவல்களைப் பெற்று கொள்ளலாம் சார்….
இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும் அதான் எல்லா தகவல்களும் இந்த ஃபைலில் இருக்கு இதை வைத்து பதிந்து கொள்ளும்மா….
வேற எதுவும் வேண்ணும் சென்னாலும் அதையும் நான் சொல்றேன்…..
சரிங்க….. சார் நான் பதிவு பண்ணிட்டு சொல்றேன் சார்….
அப்ப நான் எங்க உட்கார்ந்து இருக்கிறேன்…. முடிஞ்சதும் சொல்லும்மா….
கணிப்பொறி அனைத்து தகவல்களையும் பதிவு செய்தால் பிறகு முருகனை அழைத்து பதிந்தது அனைத்து சரியாக உள்ளதா? என கேட்டால் கணிப்பொறியின் திரையில் அனைத்தையும் பார்த்தான்….
மிகவும் சரியாக உள்ளது என்றான்….
சார்…. இன்னும் கொஞ்ச நேரத்திலே எங்க மேனேஜர் வருவார்…. அவர் உங்களிடம் நல்ல…. நல்ல வரன்களை எடுத்து காட்டுவார் சார்...
அப்படியா? சரிம்மா…..
உங்களுக்கு எப்படிப்பட்ட வரம் வேண்ணும் சார்….
நல்ல குடும்ப பெண்ணா இருந்தா சரிம்மா…. ஒரு டிகிரி படித்திருந்தால் கூட போதும்மா….
என்று இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே மேனேஜர் வந்துட்டார்….
சரிங்க சார்…… சார் வந்துட்டாரு அவர் கிட்ட சொல்லுங்க நல்ல வரன்னா? காட்டுவாரு சார்….
வாங்க…. வாங்க சார்…..
வணக்கம் சார்…..
பதிலுக்கு கைகளை கூப்பி கூம்பிட்டான் முருகன்….. திருமண தகவல் மையத்தில் பதிவுச் செய்து விட்டீர்களா?
பதிவு செய்து விட்டேன் சார்….. ஓ அப்படியா? இந்த வரன்களை எல்லாம் பாருங்க சார்…. உங்களுக்கு பிடித்த மாதிரி ஏதும் இருந்தா சொல்லுங்க சார்….
ஒவ்வொரு பதிவுகளாக வரிசையாக பார்த்துக் கொண்டிருந்தான் முருகன்…. அதில் இரண்டு பெண்களின் போட்டோவை காட்டி இந்த வரன்களைப் பற்றிய தகவல்களை கொடுங்க சார் ….
அய்யோ? நீங்க முதலில் காட்டிய பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்தது…. இன்னொரு பெண் இன்ஜினியரிங் படிச்சுருங்க அவங்களுக்கு இன்ஜினியரிங் படிச்சா மாப்பிள்ளை தான் வேண்ணும் சொன்னங்க சார்….
சரி….. இரண்டு இல்லையா? வேற ஏதாச்சும் காட்டுங்க சார்….
அடுத்த இரண்டு பெண்களைக் காட்டினார்…. இந்த பெண்ணுங்களாச்சும் இருக்க இல்லை இதுக்கும் கல்யாணமாச்சா சார்
என்ன சார் இப்படி பேசுறீங்க? அதெல்லாம் இருக்கங்கா சார் நீங்க பார்த்து பிடித்திருந்தால் சொல்லுங்க சார்…..
முருகன் அந்த இரண்டு பெண்களின் போட்டோவை பார்த்தான்…..
சற்று புன்னகைத்து படியே எதிரில் இருந்த அவரை பார்த்தார்..
என்ன சார் ஓகேவா?
இல்லா இல்லா இலவசமா உங்க ஆபிஸ்லா வேலை செய்கிற பெண்ணுகளுக்கும் வரன் பார்த்து கொடுக்குறீங்க போல, இது தெரியமா நாங்களும் உங்கிட்ட வந்துருக்கேன்…..
அப்படியெல்லாம் இல்லை சார்….. அந்த பெண்ணுக்கு வரன் பார்க்க சொல்லி அவங்க அப்பா சொன்னதுனலா ….. அந்த பெண்ணோடு தகவல்களை பதிவு செய்து வைத்தோம்….
சரி…. நீங்கள் கேட்டா மாதிரி இருந்ததுனலா காட்டினேன் சார்….. இந்த இரண்டு பெண்களோடு முழு விவரத்தை கொடுங்க வீட்டுலா காட்டிட்டு பதில் பேசுறேன் சார்…..
எந்த பெண்களோடு தகவல்களை எடுத்துக் கொடுத்தார்… அதை வாங்கி முருகன் வீடு திரும்பினான்…..
பிறகு வீட்டில் சுந்தரி, சதீஷிடம் காட்டினான்….. இருவரும் கலந்து பேசிட்டு சொல்லுங்க நாளைக்கு ஜோசியர் பார்க்க போகணும் என்றான் முருகன்….
சுந்தரி ஒரு பெண்ணின் போட்டாவை பார்த்து இந்த பெண்ணு ஓகோ தானா சதீஷ் என்றாள்…. அதற்கு சதீஷ் புன்னகைத்து படியே இடத்தை விட்டு நகர்ந்தான்….
மறுநாள் காலையில் முருகன் ஜோசியரிடம் சென்று இரண்டு பெண்களின் ஜாதகத்தை கொடுத்தார்…. அதில் தன் மகன் ஜாகதத்திற்கு எது பொருந்தும் என கேட்டான்….
ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பிறகு ஒரு பெண்ணின் ஜாகத்தை கொடுத்தார்…. இந்த பெண் தான் உங்க பையனுக்கு பொருந்தும் ஜாதகம்…. அப்பனா எப்ப கல்யாண வைச்சுக்கலாம் …..
எல்லாவற்றையும் ஒரு காகிதத்தில் குறித்து கொடுத்தார்…. வீட்டிற்கு வந்த முருகன் அனைவரிடமும் இந்த பெண்ணின் ஜாதகம் தான் பொருந்துகிறது என்றார்…..
சரி வாங்க பெண்ணைப் பார்த்து விட்டு கல்யாண தேதியைக் குறித்து விட்டு வந்துருவோம் என்றாள் “சுந்தரி”
மறுநாள் காலையில் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணைப் பார்த்து விட்டு திருமணத்தை தேதியைக் குறித்து விட்டு வந்தனர் …..
இரண்டு மாதங்கள் கழித்து திருமணமும் நடைப்பெற்று முடிந்தது….. ஒரு நாள் காலையில் வேலைக்கு எழுந்து கிளம்பிக் கொண்டிருந்த சதீஷ், ரம்யா நீயும் கிளம்பு நேரமாச்சு என்றான்….
அப்போது அங்கு திருமண சேவை மையத்தில் இருந்து வந்த மேனேஜர் என்ன முருகன் சார் ….. எப்படி இருக்கீங்க?
நல்ல இருக்கேன் சார்….. என்ன இந்த பக்கம் வந்திருக்கீங்க?
இல்லா அன்னைக்கு வரன் பார்த்தற்கு பணம் தரவில்லை அதான் கேட்க வந்தேன் சார்…..
உங்க சேவை மையத்தில் வேலை பார்க்குறா பெண்ணு தானா சார்….. இந்த வரனும் உங்களது இலவச சேவையில் வைத்து கொள்ளுங்கள் சார்…..
ஓகோ சார்….. இவ்வளவு தூரம் வந்ததற்கு டீ யாவது கிடைத்ததே என்று மனதில் நினைத்து கொண்டு புறப்பட்டார்…..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings