எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சாய் ராம் நிதிநிறுவனம்
1 லட்சம் முதலீடு செய்தால
ஒரு வருடம் பிறகு ரூ .15,000
போன் 044-2267 5678
போஸ்டர் நீல நிறத்தில் கொட்டை எழுதுக்களில் இருந்தது .இந்த போஸ்டெரை பார்பவர்கள் 2 விஷ்யங்களை கவனித்தனர்.
1. பெயர் சாய் ராம் …!
2. மாதம் ரூ. 15,000
நிறுவனர் சாய் பாபா பக்தர் போல . ஒரு யோகியின் பெயரை வைத்து உள்ளார் . பெயரை பார்க்கும் போதே மக்களுக்கு அது பிடித்து போய்விட்டது .நம்பிக்கையும் வந்தது .ஆம்…! ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.15,000
என்றால் சும்மாவா …?தங்கம்மாள் இந்த போஸ்ட்ர் பார்த்து பெரு மூச்சு விட்டாள் . அவள் ஒரு விதவை . கணவனின் இன்சூரன்ஸ் கணக்கில் ரூ. 75,000 இருந்தது . அவள் வயது 51. அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள் .அவள் கல்லுரியில் படித்து கொண்டு இருக்கிறாள் . அவளுக்கு கல்யாணம் செய்ய பணம் வேண்டும் . இப்போது அவள் ஒரு ஆரம்ப பள்ளியில் காலை டிபன் சமைக்க வேலை கிடைத்தது . குறைந்த சம்பளம் தான் . தனது தாலி செயின் இருந்தது . அதை அடகு வைத்தாள். ரூ. 19,000 கிடைத்தது .
தங்கம்மாள் பல வீடுகளில் பத்து பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வருகிறாள் . 10 வருடதிற்கு மேலாக வேலை செய்து வந்த வீட்டில் ரூ. 6,000 கடனாக வாங்கினாள் .
பணம் எடுத்து கொண்டு “சாய் ராம் நிதிநிறுவனம் “சென்றாள் . மாதம் ரூ. 15,000 கனவில் இருந்தாள் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் விண்ணப்பத்தை தானே பூர்த்தி செய்தார் . தங்கமாள் எழுத படிக்க தெரியாதவர். எழுத்து கூட்டி கூட்டி படிப்பார். அவள் தனது விண்ணபத்தில் கை ரேகை பதிவு செய்தார். ரசீது பெற்று கொண்டாள் .அடுத்த வருடம் வந்து ரூ. 15,000 மாதமாதம் பெற்று கொள்ளுங்கள் என அனுப்பி வைத்தனர் .
சாய் ராம் நிதி நிறுவன மோசடி …!
கோடி கணக்கில் பண சுருட்டல் …!!
நிறுவனர் தலைமறைவு …!!!
செய்தியை பார்த்து மயங்கி விட்டாள் . மறு நாள் கையில் மண் எண்ணையை எடுத்து கொண்டு நிறுவனம் சென்றாள் . அங்கு 100-க்கு மேற்பட்ட மக்கள் ஆவேசமாக கூடி இருந்தனர் .போலீஸ் குவிந்து இருந்தது .அவள் அங்கு உள்ள மற்றவரிடம் விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். ஒப்பாரி வைத்து அழுதாள் .அருகில் இருந்த காவலரிடம் சொல்லி சொல்லி பார்த்தாள் . யாரும் அவளை கண்டு கொள்ளவில்லை
துக்கம் தாங்காமல் தன் உடலில்மண்எண்ணையை ஊற்றினாள் . தீ பெட்டி எடுக்கும் போது ஒரு காவலர் அதை பார்த்து
“சடக் ” என பிடுங்கினார் . தங்கம்மாள் புரண்டு புரண்டு அழுதாள் .சாலையில் இருந்து எழுந்த நிற்க மறுத்த அவள் ….” ஐயோ ..என் பணம் எல்லாம் போச்சே …!” என துடித்தாள் .
ம்ம் ….அம்மா ……! என கத்தினாள் . அவள் இதயம் “லப் -டப் ” ஐ அதிகரித்து ….சில நிமிடங்கள் தான் …..நெஞ்சை பிடித்து கொண்டு “அம்மா” என சொல்லி கொண்டே கீழே விழுந்தாள் .
திடீர் மாரடைப்பு …!
தங்கம்மாள் செத்து போய் விட்டாள் …!!
பி. கு . 1. சாய் ராம் நிறுவனர் நாடு விட்டு நாடு விமானத்தில் பறந்து கொண்டு இருந்தான் .
2. தங்கம்மாளின் மகள் என்ன செய்வாள் …?
எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings