in ,

தலைமுறை தாண்டிய நேசம் (பேரிளம் பெண்) (சிறுகதை) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

(பேரிளம் பெண் – நாற்பது வயதிற்கு மேல்)

நகரின் மையத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற சென்ட்ரலைஸ்டு ஏசி திருமண மண்டபம். வாசலில் பெரிய மாக்கோலம். அதை தொடர்ந்து மண்டபத்தின் உள்வாயிலுக்கு வெளியே ஒரு டேபிளில்  மஞ்சள், குங்குமம், சுகர் ப்ரீ கற்கண்டு வைத்திருந்தனர்.

சுற்றிலும் மல்லிகை வாசம். எல்லா திருமண வீடுகளை போலவும் சிறுவர்கள் சம்பந்தமேயில்லாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். கல்யாணமான ஆண்கள் அவரவர்களது குழந்தைகளை கவனித்து கொண்டிருந்தனர்.

“என்னடி ராதிகா உன் பொண்ணு கல்யாணத்துக்கு என்ன கூப்பிடவேயில்லை?” என்று ஒரு பெண்மணி கேட்க, “அவ என்னையே கூப்பிடலடி”னு அந்த ராதிகா யாரிடமோ குறைபட்டுக் கொண்டிருந்தாள்.

காலை 9.00 – 10.30 முகூர்த்தம். அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும். முதலில் வந்த வேலையை முடித்து விடலாம் என கால்கள் நேராக டைனிங் ஹாலுக்கு சென்றது. காற்றில் கலந்து வந்த தோசை வாசம் பசியை மேலும் தூண்டியது.

தோசை மட்டும் 20 வகைகள். நான், ருமாலியன் ரொட்டி, சப்பாத்தி, பாதாம் அல்வா என ஏகப்பட்ட ஐட்டம்கள். ஆஹா! காலைலயே இவ்ளோ ஐட்டம்! மத்யானம் இன்னும் என்னென்ன இருக்குமோ என்று யோசித்துக் கொண்டே சாப்பிட்டேன். திருமண வீட்டார் ஏற்பாடுகளை நன்கு செய்திருந்தனர்.

நான்   ரமேஷ்.. ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் இந்த நகர கிளையின் உதவி தலைமை அதிகாரி. வங்கி வாடிக்கையாளரின் இல்ல திருமணம். இது என் தலைமை அதிகாரி வந்திருக்க வேண்டியது. அவர் உறவினர் வீட்டு கிரகபிரவேசமும் இதே நாள் என என்னை அனுப்பி விட்டார்.

சரி மணமக்களை வாழ்த்தலாம் என்றால் பெரிய க்யூ. அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நாதஸ்வரகாரர் அலைபாயுதே கண்ணா வாசித்து கொண்டிருந்தார். அப்படியே கண்கள் சொருக கேட்டுக் கொண்டிருந்தேன்.

மேடையில் என் வயதையொத்த இரு இளைஞர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் எங்கள்  இன்டர்னல் ஆடிட்டர் கிருஷ்ணா. ஆச்சர்யத்துடன்  “என்ன கிருஷ்ணா!  நீங்க எப்படி இங்க என்றேன்”?

“இது எங்க  வீட்டு விசேஷம் தான், அம்மா சைடு. அதனால கல்யாண ஏற்பாட்ல ஏதாவது சில பொறுப்புகளை நாம செய்யனும்னு அம்மா சொன்னாங்க. இவங்க தான் என் அம்மா” என அருகிலிருந்த முதிய பெண்மணியை காட்டினார்.

இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் நினைவுக்கு வரவில்லை. அந்த அம்மா கிருஷ்ணாவிடம், “நீ மேலேயே நின்னு என்ன வேணுமோ அத செய்” என்றார்.

எனக்கும் நேரமாகிவிட்டதால் மணமக்களை வாழ்த்தி விட்டு செல்லலாம் என மேடையேறினால் பலத்த அதிர்ச்சி. மணமக்களிடம் நான் ஆசி பெற்று விட்டு கீழிறங்கினேன். அட முட்டா பசங்களா!  கல்யாணம்னு தான சொன்னீங்க, முழுசா விவரமா சொல்ல மாட்டீங்களா என மைன்ட்வாய்ஸ் பேசியது

அப்போது கிருஷ்ணாவின் அம்மா, “தம்பி சாப்டீங்களா? தாம்பூலபை மறக்காம வாங்கிக்கங்க” என்றார். அவரிடம் விடை பெறும் போது, “தம்பி அப்படியே அந்த நாகஸ்வர காரங்ககிட்ட ஆனந்த பைரவி வாசிக்க சொல்லிட்டு போப்பா” என்றார்.

இப்போது நினைவு வந்துவிட்டது இவர் யாரென்று. தாம்பூல பையில் கெளசிக் – துளசி சஷ்டியப்த பூர்த்தி என்ற வாசகங்கள் மின்னின. அந்த பெண்மணி மணமேடையையும் மணமக்களையும் வாத்சல்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அங்கே வாத்யார்  சொல்லும் சடங்குகளை கெளசிக் செய்து கொண்டிருந்தார். அருகே கிருஷ்ணா ஏதோ உதவிக் கொண்டிருந்தான். அந்த அம்மணி  அடுத்த தலைமுறைக்கும் அன்பைக் கடத்தி விட்ட மகிழ்ச்சியில் மானசீகமாக கெளசிக்குடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவரை தொந்தரவு செய்யாமல் கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தேன்.

உண்மையான காதல் என்பது  எக்காலமும் எதன் பொருட்டும்  மாறாது. மனதின் ஒரு ஆழத்தில் எங்கேனும் ஏதாவது ஒரு அணுக்களிலே இருக்கத்தான் செய்யும். வைதேகியின் மனதில் விதையாகி விருட்சமாகிய அந்த அன்பு கெளசிக்கின் கிளைகளையும் சேர்த்தே நேசிக்கிறது.

அந்த அம்மணி யாரென்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து வாசிக்கலாம்👇 .

வைதேகி காத்திருக்கிறாள் (சிறுகதை) – வைஷ்ணவி

.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நினைவோ ஒரு பறவை! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    நினைக்கத் தெரிந்த மனமே! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்