எழுத்தாளர் சியாமளா வெங்கட்ராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுஜாதாவும் ரகுராமும் அவசர அவசரமாக சென்ட்ரலில் இருந்து பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் தங்கள் இருக்கை உள்ள பெட்டியை தேடி அதில் உட்கார்ந்தவுடன் நீண்ட பெருமூச்சு விட்டார்கள்.
என்னதான் மனதளவில் ஆசை இருந்தாலும் உடல் தன் வயதை அவ்வப்பொழுது உணர்த்திக் கொண்டே உள்ளது தங்கள் சீட்டில் உட்கார்ந்ததும் தங்கள் பெட்டியை சீராக வைத்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்
ரகுராம் சுஜாதாவை பார்த்து, “உம்.,.. மகாராணிக்கு இனி உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு!!! நீ கொடுத்து வைத்தவள்“ என்று நமட்டு சிரிப்பு சிரித்தார். ஆனால் சுஜாதாவின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
அதை பார்த்த ரகுராம் தன் மனைவியைப் பார்த்து, “ஏன் சுஜா உனக்கு அந்த கால நினைவு வந்து விட்டதா, என் அம்மாவை நீ படுத்திய பாடு திரையில் ஓடுகிறதா” என கூறி நமட்டுசிரிப்பு சிரித்தார்.
அவர் கூறியதைக் கேட்டதும் சுஜாதாவின் முகம் மாறியது. ஒன்றும் சொல்லாமல் ஜன்னல் பக்கம் திரும்பி வெளியே பார்த்தாள் அவர் சொல்வது நிஜமே!!! நாளை முதல் தனக்கும் தன் மாமியார் நிலைமை தானோ என்று கவலைப்பட தொடங்கினாள்
ரகுராமன் சுஜாதா தம்பதிகளுக்கு முரளி ஒரே பையன். அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார்கள். முரளிக்கு பெங்களூரில் வேலை எனவே அவனுக்கு பிரிகேட் மில்லினியம் கன்ஸ்ட்ரக்ஷனில் இரண்டு பெட் ரூம் உள்ள பிளாட்டை சொந்தமாக வாங்கி கொடுத்தார்
அவருடைய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை மூடிவிட்டு அண்ணா நகரில்தான் இருந்த இரண்டு கிரவுண்ட் வீட்டை விற்று தனக்கு என்று ஒரு பிளாட் வாங்கினார். சுஜாதாவும் அவரும் அந்த பிளாட்டில் குடியிருந்தார்கள்.
தன் அப்பாவை பார்க்க வந்த முரளி அவர்கள் இருவரும் வேலை செய்ய முடியாமல் கஷ்டப்படுவதை பார்த்து தன்னுடன் பெங்களூருக்கு வந்து தங்குமாறு கூறிச் சென்றார், அதனால் ரகுராமன் சுஜாதாவும் தற்போது பெங்களூர் செல்கிறார்கள், அங்கு செல்வதில் சுஜாதாவுக்கு விருப்பமில்லை ஏனென்றால் தன்னை மோசமாக நடத்துவார்களோ என்று பயந்தாள்
ரகுராமிற்கும் சுஜாதாவின் குணம் நன்றாக தெரியும் ஏனென்றால் தன் அம்மாவை படுத்திய பாட்டிற்கு ஈடு இணையே கிடையாது.
ஒரு சமயம் அவருடைய அம்மாவை பார்க்க சொந்தக்கார அம்மா ஒருவர் இவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அவள் ரகுராமின் அம்மாவை பார்த்து உனக்கு எப்படி பொழுது போகிறது என்று கேட்டார்கள்.
வேலை நேரம் போக மீதி நேரம்மோட்டுவளையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன் என்று கூறினாள். அவர்கள் போனதும் சுஜாதா தன் மாமியார் இடம் எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று பயங்கர சண்டை போட்டாள். ரகுராம் யாருக்கு பரிந்து பேசுவது என்று புரியாமல் தவித்தார்.
மற்றொரு நாள் ரகுராமன் சொந்தக்காரி ஒருவர் பஸ் கிடைக்காததால் ஊருக்கு போக முடியாமல் இவர்கள் வீட்டில் தங்குவதாக கூற, அதற்கு ரகுராமன் அம்மா சரி என்று கூறி விட்டார்கள். அவர்கள் ஊருக்கு போனதும் யாரைக் கேட்டுக் கொண்டு வீட்டில் தங்க வைத்தீர்கள் என்னை கேட்காமல் என்று தகாத வார்த்தைகளால் தன் மாமியாரை திட்டிட்டார்.
அதுவும் இவர்கள் இருப்பது அவருடைய மாமனார் கட்டிய வீடு!!! இப்படிப்பட்ட தன் மனைவியை வேலைக்கு போகும் மருமகளிடம் எப்படி நடந்து கொள்வாளோ என்று ரகுராம் பயந்தார்
அவர் நினைத்ததையே சுஜாதா நினைத்து பயந்தாள். பெங்களூர் ஸ்டேஷனில் இவர்களை வரவேற்க முரளி மருமகள் குழந்தை ஆகாஷ் மூவரும் வந்திருந்தார்கள், குழந்தையை பார்த்ததும் இவர்கள் இருவர் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்பு போல் முகம் பிரகாசித்தது
அன்று ஞாயிற்றுக்கிழமை. வ்ந்ததும் மருமகள் சபிதா மாமனார் மாமியாருக்கு காபி சுட சுடக்கு போட்டுக் கொடுத்தாள்.
சபிதா சுஜாதாவை பார்த்து, “நீங்கள் போய் குளித்துவிட்டு வாருங்கள் டிபன் சாப்பிடலாம் என்று கூற, இதைக் கேட்ட சுஜாதா இதே உபசரிப்பு தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி மனதில் ஓடிக்கொண்டே இருந்தது
டிபன் சாப்பிட்டு முடித்ததும், “ஏதாவது காய்கறி நறுக்கி தரட்டுமா“ என்று கேட்டாள்
அதற்கு சபிதா, “நீங்கள் ரயிலில் வந்த களைப்பு தீர தூங்குங்கள்“ என்று கூற சுஜாதாவின் மனதில் நெருடல் ஓடிக்கொண்டே இருந்தது. அன்று முழுவதும் குழந்தையுடன் விளையாடி பொழுதை போக்கினாள்
இரவு முழுவதும் சுஜாதாவுக்கு தூக்கமே வரவில்லை. நாளை முதல் சபிதா தன்னை என்ன பாடுபடுத்தபாடுபடுத்த போகிறாளோ என்று கவலைப்பட்டாள்
அன்று ஞாயிற்றுக்கிழமை. மதியம் சாப்பிட்ட பின் தன் அறையில் ரகுராமும் சுஜாதாவும் ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது காலிங் பெல் அடித்தது. சபிதா போய் கதவை திறந்தாள்.
“அடே பவித்ரா வா ஏது இந்த பக்கம்?“ என்று கூறியவளை வரவேற்றால் இருவரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேசி சிரித்தார்கள்
“அது சரி உன் மாமியார் உடல்நிலை சரியில்லை என்று கூறினேன் ஆஸ்பத்திரியில் வைத்தார்களே இப்போது எப்படி இருக்கிறார்கள்”? என்று சபிதா கேட்க
“ஓ அதுவா நான் உடம சரியானதும் என் மாமியாரை சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பி விட்டேன்” என்று சிரித்துக் கொண்டே கூற, அதை பார்த்த சபிதாவிற்கு கோபம் அடக்க முடியவில்லை.
அந்த சமயம் சுஜாதா கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். பவித்ரா “விருந்தாளியா?” என்று கேட்க, “இல்லை அது என் மாமியார், சென்னையில் இருந்து வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்
“எவ்வளவு நாள் தங்குவார்கள்?” என்று பவித்ரா கேட்க
“இனி இங்கு தான் இருக்க போகிறார்கள்” என்று கூறினார்
இதை கேட்டதும் பவித்ரா, “என்ன இங்கேயே தங்க போகிறார்கள்? உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது இவர்களை தங்க வைக்க?” என்று கேட்க
“ஏன் அப்படி சொல்கிறாய்?” என்று சபிதா கேட்டாள்
“என் மாமியார் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்ததற்கே எனக்கு மூன்று லட்ச ரூபாய் செலவாயிற்று, வயதானவர்களை வைத்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபம் இல்லை, அதனால் அவர்களை அனுப்பி விட்டேன். யாரும் இல்லாததால் எனக்கு பொழுது போகவில்லை அதனால் தான் வந்தேன் உன் வீட்டிற்கு” என்று கூறி சிரித்தாள்
எதுவும் கேட்காதது போல் சுஜாதா சமையலறைக்கு சென்று தண்ணீர் குடித்துக் கொண்டே சபிதா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று காதை தீட்டிக்கொண்டு காத்திருந்தாள். படித்தவள் வேலைக்கு செல்கிறாள் இன்று நன்றாக மாற்றிக் கொண்டோம் என்று பயந்தால் சுஜாதா
“என்ன சபித்த ஒன்றும் பேசாமல் பிரம்மை பிடிச்சது போல் நிற்கிறாய்” என்ற பவித்ரா கேட்க
“பவித்ரா நீ ஒரு பெண் தானே? உனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆனதும் உன்னை வைத்துக்கொள்ள மறுத்தால் என்ன செய்வாய். நீ சொல்வது உனக்கே நியாயமாக இருக்கிறதா. நம் கணவரைப் பெற்று வளர்த்து ஆளாக்கி திருமணம் நமக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள், அவர்களை வைத்துக் கொள்வது ஒரு பாரமாக எண்ணினால், இதைப் பார்த்து வளரும் நம் மானசீகமாக குழந்தைகளும் நம்மை பாரமாக நினைக்கும். உன் குணத்தை மாற்றிக் கொள், இதுபோன்று போகும் இடத்தில் குடும்பத்தை கலைக்காதே
உன்னைப் போன்று பெண்கள் இருப்பதால் தான் நாளுக்கு நாள் கூட்டுக் குடும்பம் சேர்ந்து தனி குடும்பமாகி கொண்டு வருகிறது. அதே போன்று முதியோர் இல்லங்களும் பெருகி வருகிறது. பெரியோர்களின் ஆட்சி இருந்தால் தான் நம் குழந்தை நன்றாக வளரும்” என்று கூறினார்
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுஜாதா சமையலில் இருந்து வெளியே வந்து தன் மருமகள் சபிதாவை கட்டி முத்தமிட்டாள். சுஜாதா இறந்து போனதன் மாமியாரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டாள்
உலகில் நிமிஷத்துக்கு நிமிடம் டெக்னாலஜி மாற்றங்கள் நிகழ்வது போல் மனிதர்கள் மனதிலும் இயற்கை மாற்றங்கள் ஏற்படும் என்பது நிச்சயம். பெண்கள் படிப்பதால் அனைத்தையும் சீர்தூக்கி பார்க்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.
அடுத்த தலைமுறை தாய் தந்தையரோடு குடும்பம் நடத்துவார்கள் என்பது சுஜாதாவின் மனதில் ஓடியது. இதைதான் காலச்சக்கரம் சுழன்று ஓர் இடத்தில் வந்து நிற்கும் என்று கூறுகிறார்களோ? அதன் அடையாளம் தான் சபிதாவின் அன்பு என்பதை உணர்ந்தாள் சுஜாதா.
எழுத்தாளர் சியாமளா வெங்கட்ராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings