in ,

சொல்லில் அடங்காத வாழ்க்கை (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஏழாம் மாதம் வளைகாப்பு முடித்து ‘முல்லை’யை அவளுடைய அம்மா  வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு போனவன் தான் ‘கேசவன்’. இன்னும் ஐந்து அல்லது ஆறு நாட்களில் குழந்தை பிறப்பதற்கான தேதியை மருத்துவர் கொடுத்து இருந்தார். ஆனாலும், கேசவன் இன்னும் வரவில்லை.

கேசவனின் அம்மா  ‘ராணி’ அழைத்து, “கேசவா …நாள் நெருங்கிட்டு இருக்கு …இன்னும் நீ ஊருக்கு வரல …எப்ப வரப் போற ?”

“நான் வந்து என்ன பண்ண போறேன்?” 

“என்னடா இப்படி பேசுற …உன் மனைவிக்கு தலப்பிரசவம் …உனக்கு குழந்தை பிறக்க போகுது …நம்ம வீட்டுக்கு வாரிசு வரப்போகுது …”

 “…….”

“என்னடா …நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் …நீ எதுவுமே பேசாம இருக்க …பணம் ஏதாவது பிரச்சனையா …? நாங்க கொஞ்சம் வச்சி இருக்கோம் …நீ ஒண்ணும் கவலப்படாத…எப்ப வர ?”

 “நான் வரல …?”

 “என்னடா பதில் இது …ஏன் ..? என்ன நடந்தது ?”

 “விடுமா …என்ன எதுவும் கேக்காத ?”

 “டேய்…எனக்கு தலயே வெடிச்சிடும் போல இருக்கு …என்ன பிரச்சினை சொல்லுடா …?”

 மறுமுனையில் பதிலேதும் இல்லாமல் விசும்பல் மட்டுமே கேட்டது 

ராணி பெரும் குழப்பத்துடன் …மீண்டும் கேசவனைக் கேட்க  கேசவன் … “அம்மா…வளைகாப்பு முடிஞ்சி முல்லையை அவுங்க வீட்டுல விடப்போகும் போது…   “செக்கப் எல்லாம் சென்னையிலே பார்த்தோம் … பிரசவம் எங்க பார்க்கிறது …? அதனால பிரசவ தேதிக்கு ஒரு வாரம் முன்னாடி வந்து நான் முல்லையை சென்னைக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொன்னேன் 

 “..ம் ..அதுக்கு அவுங்க என்ன சொன்னாங்க ?”

 “தலபிரசவம் அம்மா வீட்டுலதான் நடக்கணும்  …சென்னைக்கு கூட்டிட்டு போனா நாங்க வர முடியாதுன்னு சொன்னாங்க  …சரி நான் ஆள் வைத்துப்  பார்த்துக்கிறேன்’’ என்று சொன்னதற்கு 

 “உனக்கு அந்த திறமை இல்ல அப்படின்னு வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பிச்சிட்டாங்க …எனக்கு… ஏன் இப்படி நடந்துக்கிறாங்க என்று தெரியல… நம்மகிட்ட வசதியில்லையின்னு தெரிஞ்சி தானே பொண்ணு கொடுத்தாங்க? …வாக்குவாதம் முற்றிப் போய் ஒரு கட்டத்துல … குழந்தை பிறந்தாலும் நான் வர மாட்டேன் …நீங்களா… எனக்கு மனைவி குழந்தையை காப்பாத்தும் திறமை எப்ப இருக்குதுன்னு தெரியுதோ அன்னிக்கு கூட்டிட்டு வாங்க” என்று சத்தம் போட்டுட்டு வந்திட்டேன் 

“கேசவா …எவ்வளவு பக்குவமான பையன் நீ …அவுங்க என்ன காரணத்தால இப்படி சொன்னாங்க? அங்க என்ன நடந்தது? எங்களுக்கு தெரியாது …ஒரு சொல்லில்  முடங்கும் வாழ்க்கை இதுவல்ல …சொல்லில் அடங்கா வாழ்க்கை …வீணான ஈகோவால் அழகான வாழ்க்கையை தொலைத்திடாதே …நீ கிளம்பி வா…” என்றார் 

அதிர்ந்து பேசினாலே உதிர்ந்தது போய்விடும் மனம் கொண்ட கேசவன் தாயின் இதமான வார்த்தைகளால் மீண்டெழுந்து ….அலுவலகதிற்கு போன் செய்து 15 நாட்கள் விடுமுறை சொன்னான்.  

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கொஞ்சும் நிகழ்வு (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    கொடுத்து வைக்காத வரம் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்