எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இந்தக் கண்ணாடி இங்கே எப்படி வந்துச்சு?” யோசனையோடு கண்ணாடியை எடுத்துப் பார்த்தார் ஜானகி.
மூக்குக் கண்ணாடியின் ஒரு பக்கம் ஸ்க்ரூ லூஸாகிவிட்டதால் போட முடியவில்லை. நான்கு நாட்களாக, கண்ணாடி இல்லாமல் அப்படியே சமாளித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஜானகி.
மகன் வேலையில் பிஸியாக இருப்பதால் அவனிடம் இதைச் சொல்லவில்லை. வார இறுதியில் அவனிடம் சொல்லி, சரிசெய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவனைத் தொந்தரவு செய்யாமல் அப்படியே குத்துமதிப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இப்போது கண்ணாடி சரி செய்யப்பட்டு மேசை மேல் இருக்கிறது. எப்படி? குழப்பத்துடன் கண்ணாடியை எடுத்து போட்டுக்கொண்டார்.
“அப்பாடா, இப்பதான் தெளிவா பார்க்க முடியுது.”
மனநிறைவோடு நிமிர்ந்து பார்த்தால் சற்று தள்ளி ஜானகியின் கணவர் ராமமூர்த்தி அவரையே பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தார்.
“உன் மனசையும் கஷ்டங்களையும் நீ சொல்லாமலே தெரிஞ்சுக்கறது நான் மட்டும்தானே ஜானகி,” என்று பார்வையாலேயே சொன்ன தன் கணவரை நினைத்து நெகிழ்ந்தார் ஜானகி.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings