நூலின் பெயர் : சிந்தையை அள்ளும் சிலம்பு
நூலின் ஆசிரியர்: டாக்டர் பூவண்ணன்.
இந்நூலின் ஆசிரியர் டாக்டர் பூவண்ணன் சிந்தையை அள்ளும் சிலம்பு என்று ஏன் தலைப்பு கொடுத்தார் என்று சிறிது சிந்தித்துப் பார்க்கின்றேன்
இன்றைய பெண்களில் சிலர் பென்சிலை சீவும் பெண் சிலைபோல இருக்கிறார்கள் அதாவது பயத்தை சுமந்து பலவீனத்தை சீருடையாக அணிந்து சுய கௌரவத்தை தொலைத்து எந்த பிரச்சினைக்கும் தற்கொலையை தீர்வு என வாழும் இன்றைய சில பெண்களின் மத்தியில் சிந்தையை அள்ளும் சிலம்பு கதாநாயகி கண்ணகியின் மனதில் தன்மானம், மலையாக வழக்குரைக்கும் விதத்தில் எரி குழம்பக நேர்மையும் வீரமும் உடல் கவசமாக *அநீதி* இதில் யார் இழைத்தாலும் அரசனே ஆனாலும் பயமின்றி நீதிகேட்டு போராடியவர் இன்றைய நிறைய பெண்களை சிந்திக்க வைக்கிறார்.
பூ கம்பம் போல் மென்மையாக இருந்த கண்ணகி நீதிக்காக *பூகம்பமாக’ மாறினாள்..
கையிலே சிலம்போடு கற்சிலையாய் கண்ணகியை காணும்போதெல்லாம் முடியாத உன் பிரச்சனையை முடித்தபின் முடிந்திடு உன் கூந்தலை என்கிறாரோ…..
கோ(அ)வலன்( குற்றமுடையவன்). வியாபாரி தானே பொருள்களில் கலப்படத்தை பார்த்து ருசி கண்டவன் தானே எனவேதான் கண்ணகியைப் பார்த்து மாசறு பொன்னே (தூய்மையானவள் ) என உறுதி செய்து கொள்கிறான்.எவ்வளவு சுயநலம் பாருங்கள்.
கோ(அ )வலன் விவசாயிஆக இருந்தால் விதைத்து அறுவடை செய்து பாதுகாத்து இருப்பான் ஆனால் கோவலன் வியாபாரி ஆயிற்றே எனவே மாதவியிடம் விதைத்ததோடு ஓடிவிட்டான்.
இரு பெண்களின் சாபத்தைப் பெற்ற கோ(அ)வலன் செய்யாத களவு குற்றத்திற்காக இல்லை இல்லை ஆபரணத்தை திருடுவது மட்டும் களவல்ல பெண்களின் மனதை திருடுவதும் களவுதான் எனவே கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா தான் வருது. மனதை துண்டித்த அவனுக்கு தலை துண்டிக்கப்பட்டது.
பூக்களில் பல உண்டு. அதில் பூச்சியுண்ணும் பூவாக மாதவி. அம் மாவாகி தவி என்பதே மாதவி. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் தண்டனையோ…..
இனி கண்ணகியின் சிலம்பொலி கேட்போம்…
கோவலன் வயது 16 கண்ணகி வயது 12 இரண்டாம் நூற்றாண்டில் திருமணம் இனிதே முடிந்தது.
கோவலன் கண்ணகியை வர்ணிக்கின்றார் மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே
இன்றைய பெண்கள் இதை தான் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் வர்ணனைக்கு குறியவர்கள் அல்ல இன்றைக்கு டவல் விளம்பரத்திலிருந்து ஹேர் டை விளம்பரம் வரை பெண்களை வைத்துதான் வியாபாரம் நடக்கிறது.
மாதவியின் வரவால் கோவலன் நிலை மாறி மாதவியின் வசம் வயப்படுகிறான். கண்ணகி கோவலனை அள்ளி கொடுத்தவள் செல்வத்தை அள்ளிக் கொடுக்க மறுப்பாளா
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி ஆக இருந்த கோவலன் மாதவியிடம் தப்பி வருகிறான் மீண்டும் கண்ணகியிடம்.
பணத்தை இழந்தோம் பலத்தை இழக்கவில்லை எனக்கூறி மதுரை நகரை நோக்கி பயணம் செய்தனர் இருவரும்.
ஜோடியாக இருப்பதைப் பிரிப்பதனால் வந்த பயன் கண்ணகியே சாரும். இரட்டை சிலம்பில் ஒன்றை தருகிறாள் கோவலனிடம்.
பொற்கொல்லன் இடம் விற்கச் சென்ற கோவலன் கள்வன் என குற்றம் சாட்டி கொல்லப்படுகின்றான்.
பூம்புகார் என்ற ஊரில் இருந்து வந்தவள் அல்லவா கண்ணகி எனவே புகார் கொடுக்க மன்னனை நாடுகிறாள். ஒற்றை சிலம்போடு புயலென வந்தவளை கண்டு நடுங்கினான் மன்னன்.
அரசனே ஆனாலும் அநீதிக்கு துணை போனால் மரணம் நிச்சயம்.
நீதிக்காக ஒற்றை பெண்ணாக மதுரையை எரித்தாள் கண்ணகி.
இன்றைய பெண்களே போராட்டம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு பாடத்தைக் கற்றுத் தரும் பயமின்றி நீதிக்காக போராட வேண்டும். இதையே கண்ணகியின் கற்சிலை நமக்கு கற்றுத் தருகிறது.
நன்றி வணக்கம்
வாசிப்பை நேசிக்கும்….
ச.பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings