2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
விசு, உங்க காதலுக்கு நடுவில் நான் தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன், உங்க வீட்டில சொல்லி கல்யாணத்தை பண்ணிக்குங்கடா சீக்கிரம் என தன்னுடைய நண்பனிடம் சொன்னான் நவீன்.
கொஞ்ச நாள் தானடா, அப்புறம் நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம் என்றான் விசு.
நீங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு போறதுக்கு நான் துணைக்கு வர முடியுமாடா,.. உங்க கூட நான் வந்துட்டு தெரிஞ்சவங்க வந்து என்னை பார்த்துட்டு அன்னைக்கு எங்க வீட்ல சொல்லிட்டாங்க, யார் கூட சினிமாவுக்குப் போனே, உன் கூட யாரோ ஒரு பொண்ணு வேற பார்த்த மாதிரி சொல்லிட்டாங்க. அப்பா என்கிட்ட சரமாதிரியா கேள்வி கேட்டாங்க. எப்படியோ நான் சமாளித்து விட்டேன்.
இனிமேல் என்னை எங்கேயும் கூப்பிடாதே என்று சொன்னான் நவீன்.
டேய் ப்ளீஸ் டா, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே விசுவின் காதலி ரூபா வந்தாள்.
என்ன நவீன் அண்ணா கிளம்பிட்டீங்களா, என்று ரூபா கேட்க அவன் வரமாட்டேன் என்று சொல்கிறான் என்றான் விசு.
ஏங்க அண்ணே வர மாட்டேங்கிறீங்க, உங்கள நம்பித்தான் மூன்று டிக்கெட் போட்டது. நீங்கள் வந்து தான் ஆக வேண்டும், நாளைக்கு உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நாங்கள் இரண்டு பேரும் உதவி செய்து உங்களுக்கு திருமணத்தையே ஜாம் ஜாம் என்று நடத்தி விடுவோம் என்றாள் ரூபா.
நான் வரவில்லை ரூபா, நீங்க வேற யாரையாவது கூட்டிட்டு போங்க எங்க வீட்டில் என்னை எங்கே போகிறேன் வருகிறேன் என்று கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். நம்முடைய நண்பர்களே சில நேரங்களில் எங்க வீட்டில் என்னை போட்டு கொடுத்து விடுவார்கள் என்று சொன்னான் நவீன்.
உனக்கு உன் தங்கச்சி மேல பாசம் இருக்கா இல்லையா என ரூபா கேட்க, அதெல்லாம் விசுவை விட நிறைய இருக்கு என்றான் நவீன்.
உங்க மாமனுக்காக வராவிட்டாலும் உன் தங்கச்சிக்காக இந்த ஒரு முறை மட்டும் வாடா என்று ரூபா கேட்க, இப்படியே தான் ஒவ்வொரு முறையும் என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி அழைத்துக் கொண்டு போகிறீர்கள் என்றான் நவீன்.
சரி என சம்மதம் சொல்லிவிட்டு தன்னுடைய கைபேசியில் அம்மாவிற்கு அழைத்து இன்று வருவதற்கு தாமதமாகும். நண்பனுக்கு பிறந்தநாள் அதனால நான் போயிட்டு பத்து பத்தரை மணிக்குள் வந்து விடுவேன் என்றான் நவீன்.
எதிர் முனையில் இருந்து நவீனுடைய அம்மா, உங்க அப்பா ஏற்கனவே உன்னை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் ஏண்டா சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிறாய். சரி போயிட்டு சீக்கிரம் வந்துவிடு. அப்பா கைப்பேசியில் அழைத்தால் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல் என சொல்லிவிட்டு வைத்து விட்டார்கள் நவீன் அம்மா.
சரி சரி நான் அம்மாவிடம் சொல்லி விட்டேன். இதுதான் கடைசி முறை இனிமேல் உங்களுடன் வரமாட்டேன் என்று கிளம்புங்கள் போகலாம் என்றான் நவீன்.
நவீனிடம் உன்னுடைய செல்போனை கொடுடா, என்னுடைய போன் நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லை அம்மாவுக்கு ஒரு போன் போட்டு பேசிட்டு தரேன் என்று வாங்கினாள்.
மூன்று பேரும் சினிமா தியேட்டருக்கு சென்றார்கள். விசு கவுண்டரில் இருந்து சினிமா டிக்கெட் வாங்கிக் கொண்டு வரவும் மூன்று பேரும் தியேட்டரில் உள்ளே போய் அமர்ந்தார்கள்.
படம் ஆரம்பமாகவும் ரொம்ப ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தபோது நவீன் உடைய செல்போன் அடிக்கவும் ரூபா எடுத்து மறந்து போய் நாங்கள் தியேட்டர் இருக்கிறோம் அப்புறமாக பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.
படம் முடியவும் பிறகு தன்னுடைய செல்போனை ரூபாவிடம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் நவீன்.
வீட்டிற்குள் நுழைந்தால் அப்பா ஒருபுறம் அம்மா ஒருபுறம் கோபமாக இருந்தார்கள். அம்மா எனக்கு பசிக்கிறது தோசை ஊற்றுங்கள் என்று சொல்ல உடனே நவீன் அப்பா, ஏன்டா? ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு சாப்பிடவில்லையா என்று கேட்க நவீன் ஒன்றும் தெரியாமல் திரு திருவென முழித்தான்.
யாரடா அந்த பொண்ணு என்று கேட்க, நான் நண்பன் வீட்டில் தான் இருந்தேன் என்று பொய் சொல்ல, நான் கைபேசியில் அழைத்த போது ஒரு பொண்ணு தானடா பேசினா, தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்புறமா பேசறேன் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.
ரூபா செல்போனில் பேசியது எதுவும் சொல்லவில்லையே மறந்துவிட்டாளோ என நினைத்தவாறு நன்றாக மாட்டிக் கொண்டோம். உண்மையை சொல்லிட வேண்டியது தான் என்று நடந்தவற்றை சொல்ல இனிமேல் இந்த மாதிரி நடந்து கொண்டால் கல்லூரிக்கு அனுப்ப மாட்டேன் என்றார் நவீன் அப்பா.
சாரி அப்பா, இனிமேல் ஒழுங்காக இருக்கிறேன் என்று அப்பாவிடம் சொல்ல, சரி சரி போய் தோசையை சாப்பிடு என்று சொல்ல வேறு எதுவும் கேள்வி கேட்பதற்குள் சாப்பிட சென்றான் நவீன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings