in ,

உதிரத்தை உழைப்பாக்கி (கவிதை) – இரஜகை நிலவன்

 

கரங்கள் இணைந்திட

கடும் உழைப்பால்

வாழ்வின் வெற்றிக்கு

ஆதாரத்தின் பிரம்மாவே…

வேர்வையை சிந்தியே

உடலின்

உதிரத்தை உழைப்பாக்கி

 உலகத்தை உயர்விக்கும்

உழைப்பாளியே….

அதிகாலை ஆதவனும்

அதிரும் வண்ணம்

அதிக மகசூலிற்கான

அடித்தளமான விவசாயியே….

எத்தனை இடர்வரினும்

என்கடன் பணியே

என்றெண்ணியே வேலையில்

என்றும் கருத்தானவரே….

அல்லி மலருக்கும்

அயர்ந்திட கணங்களுண்டே…

அயராதேபணி செய்யும்

அன்பருக்கோ அயர்ச்சியுண்டோ?

உழைப்பின் உன்னதத்தை

உலகிற்கே எடுத்தியம்பும்

உயர்வான மன்னவனே

உணர்வுகளின் ஒளிவிளக்கே…

கலங்கரை விளக்கமோ

கடலில் பயணிப்போருக்கே…

கலங்கா பணியாளனே

உலகிற்கே வழிகாட்டியன்றோ?

பயணங்களை ஆச்சரியமாய்

பாதைகளை பத்திரமாய்

பல்வேறு உழைப்பால்

பாங்காய் நின்றவனே…

உம் பாதம்

தொட்டே பணிகின்றோம்

நின்பணி தொடர

சிறக்கட்டும் நல்லுலகே…

வீரவணக்கம் சொல்கின்றோம்

வீரமான உழைப்பாளிகளுக்கே…

வீணாகாதே தங்களின்

விண்ணகத் தொடல்களே….

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேசா விழிகள் (கவிதை) – ராஜேஸ்வரி

    நானும் என்றேன் நாணம் என்றாள்!? (காதல் கவிதை) – இரஜகை நிலவன்