in ,

உலகம் உன் வசம் (புதுக்கவிதை) – இரஜகை நிலவன்

 

வா….

வந்து விட்டோம்…

வாழ்ந்தோம் என்றே

பேர் வாங்கிச் சென்றிட ….

வாழ்ந்து காட்டுவோம்

உலகமே உன்னை நோக்கி

மூக்கில் விரல் வைத்து வியந்து நோக்கிட…

வானவில்லுக்கு நிறங்கள் கூட்டுவோம்

வான் நிலா இல்லாத நாளில் வெள்ளை அடித்து

வெளிச்சம் போடுவோம்…

கடலில் நடந்து மகிழ்வினை கொள்ளை

அடிப்போம்…மூழ்கி மூழ்கி முத்தெடுத்து

மற்றோரின் மூச்சடைப்போம் ஆச்சரியத்தால்…

ஆண்டாண்டு காலமும்

மாண்டே அழுதாலும் மீண்டெழுந்தே

இறந்தோர் இனி வருவாரோ

எனும் பேச்சை உடைத்து தீயில் போட்டு

உருவாக்குவோம் உயிர் மூச்சினை…

வந்து பிறந்து விட்டோம் – இனி

வாழத்தெரியவில்லை – எனும் உணர்விற்கே

இறக்கைகள் கட்டி பறக்க விட்டு..

வெட்டிப் பேச்சும் கற்பனை கனவுகளும்

விலக்கி வைத்தே – கடின உழைப்பில்

மிடுக்குடன் கால்கள் நடனமிட

காலமெல்லாம் கனவுகள் மெய்ப்பட

வசந்த்ங்களை வாங்கி வந்து தொங்க

விடுவோம் நம் வீட்டு மாடத்திலே…

வாழ்வதோ ஒருமுறை

வித்தைகள் செய்வோம் விண்ணையும்

அளப்போம்.. செவ்வாய் கிரகம் சென்றே

தங்குமிடம் கட்டுவோம்… எங்கும் எதுவும்

முடியாதென… விடியும் எனக்காத்திருக்காதே-

கிழக்கில் ஆகாயத்தைப் பிளந்து உதயனையே

அழைத்து வர… மனதில் சங்கல்பம் கொண்டே-

மனதில்  நீயும் தெளிவாக செயல்படு

நாளைய உலகம்  என்ன…

என்றுமே உலகம் உன்வசம்

 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தேவனின் பேரொளி! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    சுதந்திரமே உன் விலை என்ன? (சிறுகதை) – இரஜகை நிலவன்