2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மழை முகத்தை அறைந்தது, கொஞ்சம் கைகள் தடுமாறியது
அந்த குளிர் காற்றில்.ஹெல்மெட்டின் முக மறைப்பில் தண்ணீர் வழிந்து பார்வையை மறைத்தது என் யமாஹா அந்த 2 அடி தண்ணீர் தேக்கத்தில் தடுமாறியது. வேற வழியில்லை பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி,ஒதுங்கி நின்றேன். நனைந்திருந்த கைகளை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு பார்வையை சுழல விட்டேன்.
கை,கால்களை விறைத்துக் கொண்டு இளம் தாயாரின் மடியில் படுத்து அழும் அந்த இளசு, மழைக்கு ஒதுங்கி சுற்றி நிற்கும் கூட்டத்தின் இடையில் மார்பை மறைப்பது எப்படி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் குழந்தைக்கு பாலூட்டுவது எப்படி.
அவள் பரிதாபமாய் சுற்றிப் பார்த்தது வேதனை அளித்தது.
நானும் சுற்றியிருப்பவர்களை பார்த்தேன், கிட்டத்தட்ட பன்னிரண்டு ஜோடி ஆண் கண்கள் சில வக்கிரமானவை,ஒரே ஒரு பெண் கல்லூரி மாணவி போல. அந்தப் பெண்ணை நான் பார்த்தேன், அவள் அணிந்திருந்த தொள தொள ரெயின் கோட்டை பாத்தேன். அவளை அணுகி “ஹலோ” என்றேன்.
என்ன என்பதைப் போல என்னைப் பார்த்தாள்.
“உங்க ரெயின் கோட் கொஞ்சம் தர முடியுமா”
சிறு குழந்தைக் குரல், “ அச்சோ நானே ஓசி , எங்க அண்ணாவோடது”
“அந்த பெண் தன் மானத்தை மறைத்து குழந்தையின் பசி தீர்க்க உதவும்னு கேட்டேன்”
என்னை இப்போது நன்றாக ஏறெடுத்துப் பார்த்தாள், அந்த அழும் குழந்தையை பார்த்தாள், சட்டென தன் மழைக் கோட்டை கழட்டி என்னிடம் கொடுக்க வந்தாள்.
“ நீயே அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு அவளை மறைத்த வண்ணம் நில்லு”
சரி என்பது போல தலை அசைத்து நான் சொன்னதைப் போல செய்தாள். சில ஜோடி ஆண் கண்கள் வெறுப்புடன் தலை திரும்பிக் கொண்டன.
மழை சற்றே தணிந்தது, குழந்தையின் பசியும் தணிந்தது, பொக்கை வாய் திறந்து எல்லாரையும் பாத்து சிரித்தது.
அந்த தாயார் திரும்ப தந்த மழைக் கோட்டை புன் முறுவலுடன் மறுத்து விட்டு ஒரு கர்வத் தலை தூக்கலுடன் பஸ் நிறுத்தத்தை விட்டு நடந்தாள் அவள்.
“ மிஸ், நான் வேணா வீட்டில் டிராப் பண்ணவா?”
“நோ, பத்து வீடு தள்ளிதான் என் வீடு, உங்க கூட பைக்ல வந்தா, எங்க கணேசு தோலை உறிச்சிடுவான்” சிரித்த படி சொல்லிட்டே, “உங்க பேரு பாரியா” என்றாள்.
ஏன்னு கேட்டதுக்கு “பாரி வள்ளல் முல்லை கொடிக்கு தன் தேர் கொடுத்தாராம், நீங்க அடுத்தவர் ரெயின் கோட்டை தானம் கொடுக்கறீங்க அதான்.”சொல்லிண்டே நடந்து போனாள்.
அவள் அந்த பச்சை கேட் வீட்டை அடையும் வரை என் கண்கள் அவளை தொடர்ந்தன.
மழை முற்றிலும் நின்றது. என் யமாஹா அந்த வீட்டை கடக்கும் போது வாசலில் பெயர் பலகை பால கணேசன், சிவில் லாயர் என்றது.
மாதங்கள் பறந்தன, அந்த பெரு மழை, மழைக் கோட், அந்தப் பெண், எல்லாம் மெதுவே மனதை விட்டு, மிதக்கும் மேகமாய் மெல்ல நகர்ந்து போனது.
அப்பா, “ டேய் ஶ்ரீதரா, உன் தங்கை வளந்து நிக்கறா தெரியறதா இல்லையா”
நான்,”ஆமாம் குதிரை மாதிரி வளந்து குதிரா நிக்கறா அதுக்கென்ன” சொல்லிட்டே என் தங்கை வினிதாவைப் பாத்தேன். அவள் என்னைப் பாத்து குத்துச் சண்டை வீரனைப் போல ஒரு பன்ச் பாவனை செய்தாள்.
“ ஒரு அண்ணனோட பொறுப்பான பதிலா இது? சரி, சரி இந்த ஞாயித்துக் கிழமை ஃபிரீயா இரு ஜோசியர் சொன்ன பையன் வீட்டுக்கு போகணும்.”
சனிக் கிழமை நைட்ல இருந்தே மழை கொட்டியது. வெளியே தண்ணி ஆறாய் பொங்கி ஓடியது, வெளியே காலை வைக்க முடியாத அளவு துர்நாற்ற கழிவுநீரும், மழை நீரும் கலந்து செங் கருப்பு நிறமாய் ஒரு வினோத வெள்ளம்.
“ ஏண்டி வினி, உனக்கு முத முத மாப்பிள்ளை பாக்க பிளான் போடறப்பவே இப்படி மழை சொதப்பறதே”
“நானா கேட்டேன், பாக்க வேண்டாம். ஆனா உன் கல்யாணப் பேச்சு வரப்ப இடுப்பளவு தண்ணி ஓடும் பாரு”
அப்பா,” கழுதைங்களா சும்மா இருங்க, கல்யாணப் பேச்சு வரப்ப மழை பெஞ்சா சுபிட்சம். கார்லதானடா போப் போறோம் ஏன் அஸ்து பாடறே.உங்க அம்மா மட்டும் இருந்திருந்தா அவளே எல்லாம் பாத்திண்டிருப்பா”
காலை 9 மணிக்கு புறப்பட்டோம் மழை கொஞ்சம் பிசுபிசுத்தது. ரோட்ல தண்ணி வடியலை.
“அப்பா எதுவும் வாங்கிக்க வேண்டாமா, தேங்கா, பழம்,பூன்ற மாதிரி?”
“ இல்லைடா அவா குடும்பத்தை ஃபார்மலா சந்திக்கப் போறோம்,சும்மா வழில ஸ்வீட் ஏதாவது வாங்கிப்போம். அப்பறம் ஒத்து வந்தா அவங்கதான் நம்ம வீட்டுக்கு பொண்ணு பாக்க வருவாங்க.”
“ஓ அப்படியா பையன் நல்ல வேலைல இருந்து பாக்க நல்லா இருந்தா என்ன செலவானாலும் முடிச்சிடலாம்”
அப்பா காரை மெதுவா ஓட்டிண்டே,”அதில்லைடா பிரச்சனை அவா பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கற ஐடியால இருக்காங்க.அவர் பெரிய சிவில் லாயர் பால கணேசன்னு பேரு, பையன் சி.ஏ., அந்தப் பொண்ணு பி.எஸ்.சி கம்ப்யூடராம், வேலை தேடிண்டிருக்காம்”
அப்பானு கத்தினேன், கிரீச் சத்தத்தோட கார் நின்றது.
“என்னடா ஆச்சு”
“இருங்க அந்த கடைல போய் ஒரு ரெயின் கோட் வாங்கிண்டு வரேன்.”
அப்பா ஒன்றும் புரியாமல் விழித்தார்.மழை கொஞ்சம் பலத்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings