2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
டிகிரி முடித்து, திருநெல்வேலி தாண்டி அதிகம் ஊர் போகாத ரகுவிற்கு, தூத்துக்குடி நிறையவே கற்றுத் தந்தது. முக்கியமாக அதுவரை பெண்களிடம் பேசி அறியாத ரகு பக்கத்து சீட்டில், அழகான பாவனா வை பார்த்ததும், அவள் இயல்பாக கை கொடுத்து வாழ்த்தியதும், இரவு அம்மாவிடம் செல்லில் பேசும்போது சொன்னான்.
அம்மா கொஞ்சம் பயந்து போனாள். வெளி உலகம் அறியாத திருப்பணிகரிசல் குளம் காரி அவள். கணவர் திடீர் மறைவிற்கு பின், ரகுவை டிகிரி வாங்க வைத்ததும், மகளை அரசு கல்லூரியில் பி ஏ படிக்க வைத்ததும் கூட சாதனை தான்.
ரகு மத்திய அரசு நிரந்தர வேலை கிடைத்த பின் தான், ரகு பெரியப்பா, அவனை அழைத்து போய், டாக்டர் செர்டிபிக்கெட், நற்சான்று இதழ், போலீஸ் வெரிஃபிகேஷன் எல்லாம் அவர் செலவில் முடித்து, நிறுவனத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டு, கேன்டீன் வசதி, அலுவலக பேருந்து நேரம் எல்லாம் கேட்டு அவனிடம் குறித்து கொடுத்தார்.
“உன் அப்பா, வயலில் வெயில், மழை பாராமல் உழைத்து சாம்பாதித்தது, படிக்க வைத்தது வீண் போகவில்லை. இந்த வயசு கனவுகள் முளைக்கும் வயசு. நல்லது சொன்னா பிடிக்காது. கவனமா இருக்கணும் நல்ல பெயர் சம்பாதி, நல்லா உழை. அம்மா தங்கை நாங்க ஊரில் இருக்கோம். மறந்துடாதே. வேலை கிடைச்சாச்சே என்கிற மிதப்பு கூடாது. ரெண்டு வருஷம் பயிற்சி காலம் தான். அதை கடக்கணும். புத்தி கொண்டு பொழை. அவர் நகண்டால் நல்லது என்று தோன்றியது”
இத்தனை புத்திமதி சொன்னவர், பக்கத்து சீட் பத்மா சீட்டை ஓட்டி நின்றார். முதல் நாள் வேலை முடிந்ததும், ராஜன் சொன்ன ஹாஸ்டல் தேடி போனான். டவுனை விட்டு தள்ளி தான். பக்கத்தில் உப்பளம். தியேட்டர் கூட பக்கத்தில் இல்லை. நல்ல ஹோட்டல் இல்லை. பெரியப்பா சொன்னார், சின்ன கடைகளில் கூட பரோட்டா சூப்பரா இருக்கும் ஊரில் வாரத்துக்கு ஒருமுறை தோசை பார்ப்பதே பெருசு.
இரவு அம்மாவிடம் வேலை, ஹாஸ்டல், பரோட்டா பற்றி எல்லாம் சொன்ன ரகு, பக்கத்து சீட் அழகி கை கொடுத்து வாழ்த்தியதை சொல்லவில்லை. அம்மா சந்தோசத்தில் அப்பவே அவனைப் பார்க்க ஆசைப்பட்டாள்.
தங்கை வானதி தான் அந்த கல்லூரி மாணவர்களிடம் கையில் கயிறு (ஜாதியை பறை சாற்றும் நிற கயிறு) செய்திய சொன்னது.
“அம்மா ரொம்ப பயப்படறாங்க. படிப்பை நிறுத்திடலாமானு யோசிக்கறாங்க. நீ ஊருக்கு வரும் போது அம்மாகிட்டே நம்பிக்கையா பேசு அண்ணே. சரி அதுவரை நீ நம்ப ஜாதி கயிறு தானேனு யாரையும் தேர்வு செய்து விடாதே”
“ஏன் அண்ணே?”
“என்ன தான் கயிறு கலாச்சாரம் வந்தாலும், கல்யாண செலவு பெண் வீடு சார்ந்தது. அதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. காதல்னு வந்தால் மாறுமோ என்னமோ? பார்க்கலாம்”
“யார் விஷயத்தில் அண்ணா?”
வானதி குரல் ரொம்ப நேரம் கேட்டுக் கொண்டே இருந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings