in , ,

புத்தக பேய் (ஒரு பக்க கதை) – செந்தில் செழியன்

எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அறை முழுவதும் நிரம்பியிருந்த புத்தகங்கள் அவன் முகத்தை மூடும் அளவுக்கு நின்றிருந்தது. அதில் ஒரு புத்தகம் வெகுநாட்களாய் அவன் பார்வைக்கு உறுத்திக் கொண்டிருந்தது 

படிக்க நினைத்தும் படிக்க முடியாமல் பல நாட்கள் கடந்து விட்டிருந்த புத்தகத்தை இன்று படித்தே தீருவது என்று முடிவெடுத்து பார்த்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை கையில் எடுத்து அதன் அட்டை பக்கத்தில் தன் கவனத்தை செலுத்தினான்

சில நிமிட கவனம் கலைந்து புத்தகத்தின் அட்டை பக்கத்தை திறந்து முதல் பக்கத்திற்கு வந்தவனுக்கு பேரதிர்ச்சி 

தலைப்பு 

“அவசரப்பட்டுட்டியே அடுத்தது நீதான்”

கையில் இருந்த புத்தகம் நழுவி கீழே விழ, அதுவரை புத்தகத்தை பிடித்திருந்தவன் அங்கிருந்து காணாமல் போயிருந்தான் 

கீழே விழுந்த புத்தகத்தின் சில பக்கங்கள் காற்றில் பறந்து அடுத்த பாகத்தின் தலைப்பில் வந்து நின்றது 

இத்தோடு 13

எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிர் நாடி (சிறுகதை) – ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

    ஊருக்கு உபதேசம் (ஒரு பக்க கதை) – வைஷ்ணவி