in

புத்தகம் (கவிதை) – ச. பூங்குழலி, வடசேரி தஞ்சாவூர் மாவட்டம்

உன் வடிவம் அழகான *செவ்வகம்*

 உன்னுள் இருப்பது அளவில்லா *முகம்*

 உனக்காக காத்திருக்கலாம் எத்தனையோ *யுகம்*

 மெலிந்ததும் பருத்ததும் உன் *தேகம்*

 உன்னை வாசித்தால் போகும் *சோகம்*

 வரிகளால் தீர்ப்பாய் கல்வி *தாகம்*

 உலகில் நீ தனி *சுகம்*

 உன்னால் மாறும் நாளைய *உலகம்*

 நீ அதிகம் இருப்பது *நூலகம்*

 படிக்க படிக்க தெளியும் *அகம்*

 நீ இல்லையேல் கடிப்பேன் *நகம்*

 உன்னால் வாழ்க்கையில் ஏற்படும் *வேகம்*

 நீ இல்லையேல் ஏது *விவேகம்*

 சுவைத்துப் பார்ப்பேன் உன் *பாகம்*

 உன்னுள் எத்தனை வரலாற்று *துரோகம்*

 பலரின் கைகளில் பார்த்துள்ளேன் *அதிகம்*

 உன்னை பாதுகாப்பதில் சிறந்தது *தமிழகம்*

 நெருப்பாலும் வெறுப்பாலும் அழியா *மின்* *நூலகம்*      

 இப்படி வர்ணித்தேன் அது என் *புத்தகம்* *புத்தகம்* *புத்தகம்* 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

புவனா… ஒரு கேள்விக்குறி (சிறுகதை) – அர்ஜுனன்

என்னைக் காணவில்லை (சிறுகதை) – இரஜகை நிலவன்