in , ,

ஆடும் மயிலே…! (சிறுவர் கதை) – பிரபாகரன்.M

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முல்லைக்காடு: அதில் அழகிய ஆண் மயில் ஒன்று வசித்து வந்தது. அது  அருகில் வயல் வெளிகளில் இருந்து தனக்குத் தேவையான தானியங்களை உண்டு வாழ்ந்து வந்தது. மயில் வசித்து வந்த காட்டில் சிறு குன்று போல் வளர்ந்த மொட்டைப் பாறை ஒன்று இருந்தது.

மழை வரும் நாட்களில் மயில் அந்தப் பாறை மீது நின்று ஆடும். தோகை விரித்தாடும் ஒயில் போன்ற அதன் நடனம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மயில் ஆடுவது மழையின் அறிகுறி என அந்தக் காட்டின் மற்ற பறவை மிருகங்கள் புரிந்து கொள்ளும். மழை வருவது மாலைப் பொழுதெனில் அவைகள் விரைவில் கூடு திரும்பும். மற்ற பொழுதானால்; ஆங்காங்கே தங்கி வரும்.

மயில் இருந்த காட்டில் ஒரு பெரிய வான்கோழியும் வசித்து வந்தது. அது மயிலைப் போல தானும் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டது. யாரும் பார்க்காத இடத்தில் அது மயிலைப் போன்று ஆடிப் பார்த்தது. அதன் ஆட்டம் அதற்கே பிடிக்கவில்லை. தன்னால் ஆட முடியவில்லையே என்ற ஏக்கம் மயிலின் மீது அதற்கு வெறுப்பாக மாறியது.

அது ஒருநாள் பாறை மீது ஆடிக் கொண்டிருந்த மயிலிடம் சென்றது. நயவஞ்சகமாக “மழை பெய்யுறது அது பாட்டுக்கு பெய்யத்தான் போகுது! நீ எதுக்கு கஷ்டப்பட்டு ஆடுற? ஆடாம இருக்கலாமே?” – என்றது.

அதற்கு மயில் “மழை வரும் போதுலாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! ஆடனும் போலத் தோனுது! அதுனால ஆடுறேன்! இதை மத்தவங்க மழைக்கான நிமித்தமா எடுத்துக்குறாங்க!” – என்றது.

அந்த சிறிய குன்றின் அடிவாரத்தில் குகை ஒன்று இருந்தது. அதில் மந்தி ஒன்று வசித்து வந்தது. வயதில் மூத்த அந்த மந்தி பெரும்பாலும் குகையில்தான் இருக்கும். அதற்குத் தேவையான உணவுகளை சிறிய மந்திகள் கொண்டு வந்து கொடுக்கும்.

அந்தப் பகுதியில் வசித்து வரும் பறவைகள் மிருகங்கள் எல்லாம் அந்த பெரிய மந்தியிடம் ஆலோசனை கேட்டுச் செல்லும். ஒருநாள் வான்கோழி அதனிடம் வந்தது.

“மெனக்கெட்டு பாறை மேல ஏறி இந்த மயில் ஆடுறதப் பாக்குறதுக்கு எனக்கு மனசு கஷ்டமா இருக்கு! பெய்யுற மழை எப்படியும் பெய்யத்தான் போகுது! நீங்களாவது அதை ஆட வேண்டாம்னு சொல்லக் கூடாதா?” – என்றது வான்கோழி:

மந்தி புன்னகைத்தது. அது வான்கோழியின் தவறான நோக்கத்தைப் புரிந்து கொணடது. அது வான்கோழியிடம் “மயில் ஆடுறதுனால உனக்கு என்ன பிரச்னை!” – என்று கேட்டது.

அதற்கு வான்கோழி பதில் ஒன்றும் சொல்லவில்லை. மந்தி தொடர்ந்து “மயில் உனக்காகவும் எனக்காகவும் ஆடலை! அது தனது பிரபஞ்சத் தொடர்புகளுக்காக ஆடுது!” – என்றது.

வான்கோழி புரியாமல் பார்க்க மந்தியே தொடர்ந்து “பிரபஞ்சம்னா என்னனு தெரியுமா உனக்கு?” – என்று கேட்டது.

தெரியும்! மண் நீர் தீ காற்று ஆகாயம்! இந்த ஐந்து கூறுகளால் ஆனதுதான் பிரபஞ்சம்!” – என்றது வான்கோழி;.

“பரவாயில்லை! தெரிஞ்சு வைச்சிருக்க! என்ற மந்தி தொடர்ந்து “தான் நிலைச்சு நின்னு வாழ இடம் கொடுத்த மண்ணுக்கு நன்றிக்கடனா அது பாறை மேல ஏறுது! ஆடும் போது உண்டாகும் தோகையின் சலனத்தால காற்றோட தன்னை தொடர்பு படுத்திக்குது! அகவும் போது தலையை உயர்த்தி வானத்தை பார்;க்குறதுல அது ஆகாசத்தோட தன்னை தொடர்பு படுத்திக்குது! பெய்யுற மழையால் நீரோட தொடர்பும் வெப்பம் குறையுறதுனால தீக்கூறின் தொடர்பும் அதுக்கு உண்டாகுது! மகிழ்ச்சிக்காக மயில் ஆடுனாலும் அதை ஆட வைப்பது இந்த பிரபஞ்சம்தான்! இப்ப சொல்லு! மயில் ஆடுறத நிறுத்தச் சொல்லிரலாமா?” – என்று மந்தி கேட்டது.

வான்கோழி மவுனமாக இருந்தது. அது தனது தவறை உணர்ந்தது. மயிலுடன் தன்னை ஒப்பிடுவதைக் காட்டிலும் தன் வழியில் பயணிப்பதே தனக்கு நல்லது என்பதைப் புரிந்து கொண்டது.

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டிரைவர் சார் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    உன் விழிகளில் விழுந்தேன்❤️(அத்தியாயம் 1) – கி.கரோலின்மேரி