“உணவே மருந்து மருந்தே உணவு” என்பது சித்தர்களின் மொழி.
பூண்டு & சின்ன வெங்காய வத்தக் குழம்பு செய்தால், ஊரே மணக்கும். அதன் வாசனையும் ருசியும் ஆஹா சூப்பர்!!!
அது மட்டுமின்றி, சின்ன வெங்காயத்தில் புரதச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைய உள்ளது. பல நாடுகளில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்துகிறார்கள்
மேலை நாடுகளில் பூண்டு அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அதில் அதிக அளவு தாதுக்கள் விட்டமின்கள், அயோடின், சல்பர், குளோரின் ஆகிய சத்துக்களும் உள்ளது
வெந்தயம் சிறந்த மருத்துவ குணம் உடையது, இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது
நல்லெண்ணெயில், இரும்புச்சத்து, வைட்டமின் K&E, உள்ளது
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் – 200 கிராம்
- பூண்டு – 20 பல்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- துவரம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
- கடுகு – ஒரு டீஸ்பூன்
- புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
- தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- தனியா- 2 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 15
- வெந்தயம் – ஒரு ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பொடி செய்ய
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம் ஆகியவைகளை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். அது ஆறியதும், மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து, பொடியை தனியாக வைத்து விடுங்கள்
செய்முறை
- வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, முதலில் கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு மூன்றையும் போட்டு வெடித்ததும், வெங்காயத்தையும் போட்டு சிறிது வதக்கியதும், பூண்டையும் போட்டு கொஞ்சமாக வதக்க வேண்டும்
- புளியை நன்றாக கரைத்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டு, வதக்கிய வெங்காய பூண்டு கலவையில் கொட்ட வேண்டும்
- அதில், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி போட வேண்டும்
- நன்றாக கொதித்ததும், அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்
- அதில், தேங்காய் துருவலை சிறிது நீர் விட்டு அரைத்து எடுத்த பாலை விட வேண்டும்
- பின், அரிசி மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து சேர்க்கவும்
- குழம்பு நன்றாக கொதித்து நுரைத்து வரும் பொழுது, மீதியுள்ள எண்ணெயை விட்டு, கருவேப்பிலை போட்டு, இறக்கி வைக்க வேண்டும்
- இப்பொழுது பூண்டு வெங்காய குழம்பு ரெடி!!
சுடச் சுட சாதத்தில், குழம்பை விட்டு பிசைந்து சாப்பிட சூப்பரோ சூப்பர்!
தயிர் சாதத்திற்கும் இந்த குழம்பு சூப்பர் சைட் டிஷ்!!!!
முன்னெல்லாம் அடிக்கடி பண்ணுவேன். இப்போதெல்லாம் பூண்டு ஒத்துக்கொள்ளுவது இல்லை. ஆனால் பொடியெல்லாம் வறுத்து அரைத்துப் போடாமல் தேங்காய்ப் பாலும் சேர்க்காமல் சாதாரணமான குழம்புப் பொடியிலேயே பண்ணி இருக்கேன். இம்முறையில் பண்ணினதில்லை.
பூண்டு சூடுன்னு நானும் இப்ப அதிகம் சேக்கறதில்ல மாமி . ஆனா உடம்புக்கு நல்லதுனு ரசத்துல எப்படியும் போட்டுடறது
ஆஹா! சின்ன வெங்காய,பூண்டு வற்றல் குழம்பு படிக்கும் பொழுதே நாவில் நீர் ஊருகிறது. தேங்காய் பால் ஊற்றுவதைத் தவிர நானும் இப்படிதான் செய்வேன். அடுத்த முறை தேங்காய் பால் சேர்த்து செய்து பார்க்கிறேன்.
உண்மை தான், வற்றல் குழம்புன்னாலே ரெண்டு கவளம் எக்ஸ்ட்ரா உள்ள போகுமே அம்மா எல்லாருக்கும். கருத்துக்கு நன்றி
இதுக்குக் காலம்பரவே கருத்துச் சொல்லி இருந்தேனே? எங்கே காணோம்? வறுத்து அரைச்ச பொடி போடாமல் வெறும் குழம்புப்பொடி மட்டும் போட்டுப் பண்ணுவேன் என்று சொல்லி இருந்த நினைவு. இப்போல்லாம் பூண்டு ஒத்துக்கலை என்பதால் பண்ணறதில்லைனும் சொன்ன நினைவு! எங்கே போச்சு அந்தக் கருத்துரை? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்? காக்கா? தூக்கி?
சாரி மாமி, நேத்து எல்லோரும் வீட்டில் என்பதால் கொஞ்சம் பிஸி, இந்த பக்கம் வரவே இல்லை. இப்போ கமெண்ட்ஸ் எல்லாம் ரிலீஸ் பண்ணிட்டேன் 🙂
ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்னோட கருத்துக்களெல்லாம் காணாமப் போகுதே? இங்கே ஏன் தெரியலை! ஏடிஎம்?
இப்போ எல்லா கமெண்ட்ஸ்’ம் ரிலீஸ் பண்ணிட்டேன் மாமி. Sorry for the delay