மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
நம் தென்னிந்திய சமையல்களில் பலவித பலகாரங்கள் செய்யப்படுகிறது. அதில் பிடி கொழுக்கட்டை என்பதும் ஒன்று இது உடலுக்கு மிகவும் நல்லது ஏனென்றால் இது அவ்வளவாக எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்துக்களோ கிடையாது எனவே இது சுலபமாக ஜீரணமாகும். இது செய்வதும் சுலபமானது அதைப் பற்றி இன்று காண்போம்
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – ஒரு கப்
- சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- தேங்காய் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- பெருங்காயம் – ஒரு ஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- மிளகாய் – நான்கு
- உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
- கடுகு – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
செய்முறை
- அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ரவையாக அரைக்க வேண்டும்.
- அதன் பின் ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் ஆகியவற்றை வெடிக்கவிட வேண்டும்.
- அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பை போட்டு தளதளவென்று கொதிக்க விட வேண்டும்.
- அதில் அரைத்து வைத்துள்ள ரவையை கொட்டி கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.
- இத்துடன் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.
- கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும்.
- ஆறியதும் கொழுக்கட்டை போல் பிடிக்க வேண்டும்.
- அதை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும், பின்பு ஆறியதும் எடுத்து பரிமாறலாம்.
இதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி உகந்தது. இதைப் பிடித்து வைப்பதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று பெயர்.
GIPHY App Key not set. Please check settings