in , ,

பேராயுதம் (அத்தியாயம் 3) – மதுரபாண்டியன்

இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இருள் சூழ்ந்த தன் வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தப் போகும் எதிர்பார்ப்பு அவள் மனதில் அங்கலாய்த்து கொண்டிருந்தது. சாத்தான்குளத்தில் அந்த இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை தன் தோழியுடன் அடைந்தாள் துர்கா. அங்கு ஆசிரியராக பணியாற்றும் தாழம்பூவைப் பார்த்தவுடன் பல ஆண்டுகள் அவரோடு பழகியதுபோல் மிக இயல்பாய் அவள் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தார்.

எவ்வாறு இந்த மையம் இலவசமாக நடத்தப்படுகிறது என்று துர்கா கேட்க தாழம்பூவோ சாத்தான்குளத்தில் இருந்து இந்திய ஆட்சிப் பணிக்கு சென்ற ஒருவரின் முன்னெடுப்பில் இம்மையம் தொடங்கப்பட்டது. பல ஊர்ப்பெரியவர்கள் ஈடுபாட்டுடன் இம்மையம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கிருந்து படித்து வேலைக்கு சென்றவர்கள் இம்மையத்தில் இலவசமாக பாடம் எடுக்கிறார்கள்.

முகமலர்ச்சியுடன் துர்கா தன்னுடைய ஆர்வத்தைத் தெரிவிக்க தாழம்பூவும் அவளுக்கு உதவுவதாக கூறினார். துர்கா தமிழில் பட்டம் பெற்றுள்ளதை சொன்னவுடன் தாழம்பூ “அதுக்குத்தான் 20% இட ஒதுக்கீடு இருக்கே அதனால் நிச்சயமாக தேர்வில் வெற்றி கிடைக்கும்” என்றார். ஆனாலும் தலை குனிந்து தன்னுடைய வீட்டின் நிலையையும் தன் தாயின் சந்தேகத்தையும் அவரிடம் தயக்கத்துடன் சொல்ல சட்டென்று தாழம்பூ பெருமாள்குளத்திற்கு பேருந்தில் செல்வோம் என அழைத்தார்.

சக்திகனியை கண்டவுடன் தாழம்பூ நிச்சயமாக உங்கள் மகள் அரசு அதிகாரியாக வாய்ப்பு உள்ளது. அதனால் சந்தேகம் இன்றி துர்காவை போட்டி தேர்வுக்கு படிக்க வையுங்கள் மற்ற பிரச்சனைகளை எல்லாம் மையம் பார்த்துக் கொள்ளும் என நம்பிக்கை ஊட்டினார். வட்டார பாசம் சக்திகனிக்கு தாழம்பூ மீது இணக்கத்தை ஏற்படுத்தியது.

அடுத்த நாளே துர்கா அந்த மையத்திற்கு படிக்கச் செல்ல போட்டித்தேர்வின் அடிப்படைகளை ஒன்று ஒன்றாக சொல்லிக் கொடுத்தார் தாழம்பூ. அந்த மையத்தின் ஒரு தூணாக ஆனந்த் என்ற ஆசிரியர் இருக்கிறார் என தாழம்பூ கூறினார். மெதுவாக துர்கா அந்த நெல்லை போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் ஆயிரம் பேர் படிக்கிறார்களே எப்படி போட்டித்தேர்வில் வெற்றி பெறுவது? என்று கேட்க வரும் தொகுதி 2 தேர்வில் 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் தெரியுமா? என்று சொல்ல துர்காவோ திடுக்கிட்டாள். உடனே தாழம்பூ தீவிரமாக ஒரு லட்சம் பேருதான் தேர்வுக்கு தயாராவர்கள் அவளிடம் தமிழில் பட்டமும் உள்ளதால் வாய்ப்பு இருக்கு என்றாள்.

ஏற்கனவே தொகுதி 4 தேர்வில் வெற்றி பெற்ற ஆனந்த் அம்மையத்திற்கு வந்து மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பேசி வந்தான். தன்னுடைய பெற்றோர்கள் ஒரு சோசியக்காரரை அணுகி சாதகத்தை கொடுத்து ஆனந்தை வெளிநாட்டுக்கு அனுப்பலாமா அல்லது அரசுபணிக்கு படிக்க வைக்கலாமா என்று ஆலோசனை கேட்டனர்.

அந்த சோசியக்காரரோ ஆனந்துக்கு அரசாங்க வேலைக்கு வாய்ப்பு இல்லை அதனால் வெளிநாட்டுக்கு போக சொல்லுங்க என அறிவுரை கூறினார். இந்தச் செய்தியை ஆனந்திடம் சொல்ல விடாமுயற்சியுடன் படித்த ஆனந்த் ஒரு மதிப்பெண்ணில் தன் முதல் தேர்வில் தோல்வியடைந்தான்.

வேறு யாராக இருந்தாலும் அந்த சோசியக்காரர் சொன்னதை நினைத்து போட்டித்தேர்வுக்கு தயாராவதிலிருந்து விலகியிருப்பர். ஆனால் ஊக்கத்துடன் அடுத்த முயற்சி எடுத்த ஆனந்துக்கு பெரிய வெற்றி கிடைத்தது. தொகுதி 4 தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் வந்தான் ஆனந்த். அரசு பணியில் அதிகம் தொண்டு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆனந்த் தன்னுடைய உரையில் மாணவர்களுக்கு சொன்னான்.

பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு அரசுப்பணி என்பது சரியான தேர்வல்ல. வாழ்க்கையில் அறத்தையும் நல்ல மனிதர்களையும் சம்பாதிக்க வேண்டும் அதுதான் தன்னுடைய வாழ்வின் குறிக்கோள் என்றான். இவ்வளவு கதைகளை சொல்லிவிட்டு இறுதியாக இந்த தொகுதி 2 தேர்விற்கு தானும் போட்டியிடுகிறேன் என்று சொன்ன வார்த்தை மட்டும் துர்காவின் காதில் நங்கூரமாய் விழுந்தது.

சென்னையில் தங்கி தொகுதி 1 தேர்வில் வெற்றி பெறுவதே தன் இலட்சியமாக கொண்ட ஆனந்த் எந்த ஒரு கட்டணம் கேட்கும் போட்டித்தேர்வு மையத்திலும் படித்ததில்லை. தமிழக அரசு நடத்தும் இலவச மாதிரி போட்டி தேர்வு ஒன்று மாவட்ட மைய நூலகம் மேற்பார்வையில் ஒரு போட்டித் தேர்வு மையத்துடன் இணைந்து நெல்லையில் நடைபெற்றது.

திருநெல்வேலியில் பெரிய போட்டித் தேர்வு மையத்தில் பயின்று வந்த மருது தொகுதி ஒன்னு தேர்விற்கு தனியாக கட்டணம் கேட்டதால் அதில் சேர முடியாமல் தனியாக பயின்று வந்தான். எதேட்சையாக தமிழக அரசு நடத்தும் இலவச மாதிரி போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தான். சற்று எதிர்மறை சிந்தனை உடன் படித்து வந்த மருது தான் பயின்று வரும் மையம் கூறுவதையே வேதவாக்காக நம்பினான்.

தன்னுடைய நண்பன் ஒருவன் ஆனந்தை அந்த இலவச போட்டித்தேர்வுக்கு அழைக்க தன்னால் அவ்வளவு தூரம் அடிக்கடி அலைய முடியாது என மறுத்தான். அப்போது ஒரு வியாபாரம் பேசினான் ஆனந்தின் நண்பன். ஆனந்து போக்குவரத்து செலவை தான் பார்த்துக் கொள்வதாகவும் மாதிரி போட்டித்தேர்வில் முதலிடம் பெற்றால் பரிசினை தனக்குத் தர வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தான்.

நிபந்தனையை ஏற்று அந்த மாதிரி போட்டி தேர்வுக்கு வந்தான் ஆனந்த். ஆனந்தும் மருதும் அருகருகே அமர்ந்து தேர்வினை எழுதினர். ஆனந்த் இரண்டாம் இடம் படிக்க 20 வது இடத்தை பிடித்தான் மருது. பரிசளிப்பு விழா நடக்க ஆனந்த் தயங்கியபடியே அந்த பரிசினை ஏற்றான். மெல்ல மருதுவிடம் தான்தான் முதலிடம் பெற்றதாகவும் ஆனால் இணைந்து நடத்தும் அந்த தேர்வு மையம் அவர்களிடம் படிக்கும் மாணவருக்கு முதலிடம் கொடுத்துவிட்டு தனக்கு இரண்டாம் இடம் கொடுத்து விட்டனர் என்று தன் குமுறலைக் கூறினான். இருப்பினும் பெற்ற பரிசினை நிபந்தனையின்படி நண்பனிடம் ஒப்படைத்தான். அந்த பரிசுப் புத்தகங்கள் ஆங்கிலத்திலிருந்ததால் ஏமாற்றமடைந்தான் நண்பன்.

எப்போதும் காலையில் மாதிரித்தேர்வு முடிந்தவுடன் மதியம் இலவச மாதிரி வகுப்பு நடைபெறுவது வழக்கம். அதில் மருது கலந்து கொள்ள விருப்பமா என்று ஆனந்த் கேட்க எத்தனை மாதிரி வகுப்புகளை பயில்வது என நொந்து கொண்டான். அவனுக்கு என்ன இலட்சியம் என்று ஆனந்த் கேட்க ஒரு வருடத்திற்குள் ஏதாவது அரசு பணிக்கு செல்ல வேண்டியதே தன் இலட்சியம் என்றான்.

இலட்சியத்தை பெரிதாக வையுங்கள் தலைவரே என்றான் ஆனந்த். இதற்கு முன் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை ஆனால் தன்மீது அக்கறையுடன் பேசும் ஆனந்தைக் கண்டு அதிசயத்தான் மருது. ஒருநாள் நட்பு ஆல்போல் வளர்ந்தது.

தொகுதி 1 முதல்நிலை தேர்வில் மருது தோல்வியடைய ஆனந்த் வெற்றியடைந்தான். அடுத்ததாக நடைபெற்ற தொகுதி 2 தேர்வில் இதே போன்று மாவட்ட மைய நூலகம் நடத்திய மாதிரி தேர்வில் இருவரும் கலந்து கொண்டனர். அதில் மருது பத்து இடங்களுக்குள் வர ஆனந்தின் வினாத்தாளை தவறாக திருத்தியதால் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.

முந்தைய தேர்வு வரை 10 இடங்கள் வரை பரிசளித்த நடைமுறை மாற்றி எட்டு இடங்கள் வரை பெற்றவருக்கு மட்டுமே பரிசளிக்கப்பட்டது. தமிழ் பாடத்திற்கான வினாத்தாளிற்கான விடைகளை மாற்றி ஆங்கில பாடத்திற்கான விடைகளை ஒப்பிட்டு திருத்தியதால் ஆனந்திற்கு அதிக அளவில் மதிப்பெண் கிடைக்கவில்லை. இனி இப்படியான தேர்வுக்கு தான் வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டு பிரிந்தான் ஆனந்த். பரிசு கிடைக்காத ஏக்கத்தில் வீட்டை அடைந்தான் மருது.

இலவச போட்டி தேர்வுமையத்தில் இரவு பகலாக எதையும் எதிர் நோக்காமல் படிப்பைத் தொடர்ந்தாள் துர்கா. புத்தகம் அவள் அவயங்களில் ஒன்றானது. தூக்கம் மறந்து போனது. கண்களில் வெறி மட்டுமே குடி கொண்டது. தனக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் படிக்கத் தேவையான நாளிதழ்களை அளித்து பலர் நண்பராயினர். கடன் அன்பை முறிக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இவளுக்கு அன்பை வளர்த்தது.

மிகவும் எதிர்பார்த்திருந்த அந்த தொகுதி இரண்டு தேர்வு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தது. முன்னாடியே துர்காவிடமும் மருதுவிடமும் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தான் ஆனந்த். தன் முந்தைய தேர்வு வினாத்தாளை கண்ணீருடன் புரட்டிய மருதுவுக்கு அன்றிரவு தூக்கம் வரவே இல்லை. மறுபக்கம் தான் கொண்ட இலட்சியத்திற்காக துர்காவும் அரை தூக்கமே தூங்கினாள்.

இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேராயுதம் (அத்தியாயம் 2) – மதுரபாண்டியன்

    பேராயுதம் (அத்தியாயம் 4) – மதுரபாண்டியன்