இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பனை மரங்கள் நிறைந்த தேரிக்காடு. பச்சை நிறம் மழைக்காலத்தில் மட்டுமே அங்கங்கே தென்படும். தரணி புகழும் பரணி பாயும் நெல்லை சீமையின் பாலை நிலம். சாத்தான்குளத்திற்கு அருகில் பெருமாள் குளம் எனும் மாசு கலக்காத மங்காத காற்று பாயும் குக்கிராமம். அக்கிராமத்தில் அண்ணன் குகன் குடும்ப வரறுமைக்காக தலைநகரில் ஒரு பாத்திரக் கடைக்கு வேலைக்கு செல்ல 12-ம் வகுப்பு படித்து வந்தாள் துர்கா.
இரு தங்கைகளும் அரசு பள்ளியில் தன்னுடன் பயில தாயும் தந்தையும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். பெரிய தொழில் வளமோ நிரந்தரமான விவசாய வேலையோ கிடைக்காத ஊரில் படிப்பு என்பது அவ்வளவு எளிதாக எல்லாருக்கும் கிடைத்துவிடவில்லை.
ஆனாலும் தாய் சக்தி கனி தன் தவப்புதல்வன் வீட்டிற்காக குழந்தை தொழிலாளர் ஆனபோதும் மூன்று பிள்ளைகளையும் எப்பாடுபட்டாவது படிக்க வைக்க வேண்டும் என்ற கனவில் இருந்தாள். பெரிய படிப்பு படித்து உயர்ந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்ற பெரும் நோக்கம் துர்காவிற்கு இருந்தது.
தனக்கு மிகவும் பிடித்த தந்தையின் குடிப்பழக்கம் துர்காவுக்கோ பிடிக்காதிருந்தது. ஆனால் அந்த பழக்கம் தன் கனவை சிதைக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நாள் மதுவின் மீது அதிக மோகம் கொண்டு உறங்கிய தகப்பன் காலையில் முழிக்கவே இல்லை.
அடுத்த முறை சாப்பாட்டுக்கு இந்த குடும்பம் என்ன செய்யும் என்று சொந்தங்கள் உச் கொட்டி விட்டு மூன்றாம் நாள் காரியத்துடன் கலைந்தனர். பள்ளி இறுதி ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த துர்காவை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணிய சக்தி கனி அவளை அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு அனுப்பினாள்.
சக்தி கனியின் 100 நாள் வேலை திட்டமும் அண்ணன் குகனின் சொற்ப சம்பளமும் வீட்டின் ஆதாரமாயின. ஈரான் படிப்பு முடித்த உடனே வந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தானே முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றாள்.
சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி இறந்து விட்டன் என்பது போல் அந்தத் தேர்வில் வெற்றி பெற்ற யாரையும் அரசு பணிக்கு அழைக்காதது எண்ணி மனம் நொந்தாள்.
தேர்வின் முடிவும் குடும்ப வறுமையும் இருண்ட எதிர்கால பயமும் அவளை விபரீத முடிவுக்கு தள்ளியது. பயமறியாதவர்கள் எடுப்பதுதான் தற்கொலை முடிவு என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். தன் வீட்டிற்கு ஒளியாக இருக்க வேண்டிய தான் சுமையாக ஆகிவிட்டேனே என மனம் நொந்தாள்.
இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings