in ,

பதக்கம் (சிறுகதை) – சத்யநாராயணன்

எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்                                                      

அன்று :

அமெரிக்காவின் ஒகியோ நதி கரையில் ….

ஒரு மேட்டின் மேல் உட்கார்ந்து ….தனது தலையை கால் முட்டியின் கைகளை

வைத்து கொண்டு…..

தூரத்தில் இருப்வர்களுக்கு அவர் உடல் வேகமாக குலுங்குவது தெரிந்த்து .

ஆம் …!

அவர் குலுங்க குலுங்க அழுது கொண்டு இருந்தார் .யாரும் அவர்

பக்கத்தில் இல்லை .

எலியை கண்ட பூனை போல அமெரிக்க ஊடகங்கள் அங்கே அடித்து

கொண்டு ஓடி வந்தனர் .

கைகளில் மைக் மற்றும் காமிராவுடன் வந்தனர் .அவர்கள் அழுகின்ற

மனிதனை கையால் தட்டி எழுப்புகின்றன்ர் .அவர் அழுது கொண்டே

மேலே எழுகிறார் . தன் ஆடைகளை சரி செய்து கொள்கிறார்.

பின் உரையாடல் …

முழுவதும் ஆங்கிலதில் ….

” சார் ..நீங்கள் முகமது அலி தானே …”

அழுகயை சற்று நிறுத்தி ” ஆம் ” என்கிறார் .

” நீங்கள் தானே ஒலிம்பிக்ஸில் குத்து சண்டையில் தங்க பதக்கம்

பெற்றவர்…? “

“ஆம் “

” நீங்கள் ஏன் அழுகிறேர்கள் …? “

” மனம் சரி அல்ல …”

” என்ன சார் …நீங்கள் உலக அளவில் குத்து சண்டையில் சாம்பியன் …

உங்களுக்கு என்ன வருத்தம் … “

” இந்த உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனால் அமெரிக்காவில்

இன்றும் நிற வெறி தலை விரித்து ஆடுகிறது . ஒரு நிற வெறி பிடித்த

ஒரு நாட்டின் பிரதிநிதியாக ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டது பெரும்

அவமானமாக கருதுகிறேன் …. “

” சரி. நீங்கள் எவ்வாறு நிற வெறியால் பாதிக்க பட்டீர்கள் …”

” வேண்டாம் ..வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்கள் …! “

” சரி சார் …இங்கு வந்து தனியே ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள் …? “

” நான் பெற்ற தங்க பதக்கத்தை இந்த நதியில் வீசி எறிந்து விட்டேன் …! “

” ஓ மை காட் …!!! “

இன்று :

இந்தியா . டெல்லி .நடு ரோடு .

மல்யுத்த வீராங்கனைகள் மத்திய எம். பி . பூஷன் மீது நடவடிக்கை

எடுக்க கூறி போராட்டம் நடதுகின்றனர் .

குற்றம் : பாலியியல் வன்முறை …!

பூஷனை கைது செய்ய சொல்லி போராட்டம் .

எப்போதும் போல் நிருபர்கள் கையில் மைக் மற்றும் காமிராவுடன் …

இனி உரையாடால் முழுவதும் ஹிந்தியில் ….

” மேடம் உங்களின் குறிக்கோள் என்ன ..? எதற்காக இந்த போராட்டம் ..? “

மிகுந்த வருத்துத்துடன் ஒரு வீராங்கனை அழுது கொண்டே சொல்கிறார் ..

” நாங்கள் பாலியியல் வன்முறை …குறித்து எம். பி. பூஷன் மீது புகார்

தந்தும் …அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை …

அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் …! “

” சரி …அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் …? “

” நீதி கிடைக்க வில்லை என்றால் நாங்கள் வாங்கிய பதக்கத்தை

கங்கை நதியில் வீச தீர்மானித்து உள்ளோம் …”

” மேடம் …காவல் துறை என்ன சொல்கிறது …? “

” நாங்கள் புகார் கூடுத்தும் …பூஷனை கைது செய்ய எந்த ஆதாரமும்

இல்லை என்று சொல்லி விட்டார்கள் …! “

” நீங்கள் புகார் செய்து உள்ளீர்கள் அல்லவா …? “

” ஆம். ஆனால் அரசு அதை கணக்கில் எடுத்து கொள்ள வில்லையே ? “

படார் …! படார் …!! படார் …!!!

சுற்றி இருந்த போலீஸ் திடீர் என மல்யுத்த வீராங்கனைகள் மீது

கொடூர தாக்குதல்…

அவர்களை குண்டு காட்டாக வலிய கொடூரமாக தூக்கி போலீஸ்

வண்டியில் ஏற்றினார்கள் . வீராங்கனைகள் தடுத்தும் பயன் இல்லை.

கைது செய்வதாக போலீஸ் கூறியது .

எம். பி. பூஷன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்தோஷமாக

பங்கு கொண்டு இருந்தார்.

நீதி கேட்டவர்கள் கைது…!

குற்றம் சாற்றபட்டவர் புதிய நாடாளுமன்றதில் ….

நிற்க .

உலகத்தில்…. மிக மிக ‘ புனித ‘ நதி கங்கை ..! அதில் சடலங்கள்

மிதந்து செல்வது வாடிக்கை . உலகில் அதிக மாசு பட்ட நதிகளில்

முக்கியமான நதி கங்கை ….

வீராங்கனைகளின் பதக்கத்தை விழுங்குவதற்காக காத்து

கொண்டு இருக்கிறது .

மல்யுத்த வீராங்கனைகளின் கைது குறித்து இன்று (01-06-2023 )

ஒலிம்பிக் கமிட்டி மிக கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளது .

வாழ்க ஒலிம்பிக் கமிட்டி …!

கங்கை காத்து கொண்டு இருக்கிறது …!!

பி. கு. 1983ல் உலக கிரிக்கெட் கோப்பையை வென்ற கேப்டன் கபில் தேவ் இன்று ( 02-06-2023 ) மிகுந்த வேதனையை வெளிபடுத்தி உள்ளார்…!

எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீபாவளி (சிறுகதை) – சத்யநாராயணன்

    கனவு (சிறுகதை) – சத்யநாராயணன்