திருநெல்வேலி பக்கங்களிலும் செட்டி நாடு பக்கங்களிலும் செய்யப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் செய்தாலும் நான் என் பாட்டியை நினைத்துக் கொண்டு செய்கிறேன். அவர் திருநெல்வேலி சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர். பாரம்பரிய இனிப்பு என்கிற போதே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் செய்திருப்பார்கள் என்று தெரிந்திருக்கும்
பெரும்பாலும் தீபாவளி சமயங்களில் செய்யப்படும் இனிப்பு என்றாலும் நாம் நமக்கு விருப்பப்படும் போதும் செய்து சுவைக்கலாம்
தேவையான பொருட்கள்:-
- கடலைப்பருப்பு – 1 கப்
- வெல்லம் – 1 கப்
- ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி
- முந்திரி – சிறிதளவு
- நெய் – சிறிதளவு
- தேங்காய்த்துருவல் – 4 தேக்கரண்டி
- ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி
செய்முறை:-
- கடலைப்பருப்பை நீரில் நன்கு சுத்தம் செய்து மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்
- ஊறிய பருப்பை மிக்சியில் சற்று கெட்டியாக கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- அரைத்த விழுதை இட்லிப் பானையில் ஆவியில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
- எடுத்த கலவையை நன்கு ஆற விட்டு உதிர்க்கவும். இல்லையென்றால் மிக்சியில் இரண்டு சுற்று விட்டு விட்டு ஓட்டி எடுக்கவும். பொலபொலவென்று உதிர் உதிராக இருக்க வேண்டும்..
- ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரிகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
- அதிலேயே நிதானமானத் தீயில் தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து எடுக்கவும்
- இப்போது அந்த கடாயிலேயே பொடித்த வெல்லத்தை சேர்த்து அது மூழ்கும் அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்
- வெல்லத்திலிருக்கும் குப்பை, அழுக்குகளை அகற்ற பின்பு அதை வடிகட்டி எடுத்து அதே கடாயில் சேர்த்து கொதிக்க விடவும்
- பாகுப் பதம் தேவையில்லை..நன்கு கொதித்ததும் உதிர்த்த கலவையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.. நீர்த்தன்மை அகன்றால் போதும்.. வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்
பாரம்பரிய இனிப்பான உக்காரை/ஒக்கோரை தயார்
பின் குறிப்பு:-
1) சிலர் மூன்று பருப்புகளாக கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றும் சம அளவில் சேர்த்தும் செய்வார்கள்
2) அரைத்த கலவையை ஆவியில் வைக்காமல் வாணலியிலேயே பிரட்டியும் செய்வார்கள்
3) தேங்காய்த்துருவல் சேர்க்காமலும் செய்யலாம்
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
ஹை ஆதி எங்க வீட்டுல ஒக்கோரை இல்லாம தீபாவளி கிடையாது பிறந்த வீட்டில். பு வீ ல செய்ய மாட்டாங்க இருந்தாலும் நான் செய்யறதுண்டு.
ஆதி உங்க ரெசிப்பி அளவு சேம் தான் எங்க வீட்டுலயும். சூப்பரா வந்திருக்கு. நான் மட்டும் வெல்லம் குறைச்சலா போடுவேன்.
என் பாட்டி கடலைப் பருப்போடு துவரம் பருப்பும் சேர்ப்பாங்க.
நல்லா வந்திருக்கு ஆதி. வாழ்த்துகள்
ஓ போட்டியா? அதற்கும் வாழ்த்துகள் ஆதி!
அப்பாவி தங்கமணி உங்களுக்கும் வாழ்த்துகள். நல்லாருக்கு சஹானா
கீதா
Super, thanks for sharing your experience
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா சேச்சி. என் புகுந்த வீட்டில் உக்காரை வழக்கமில்லை..