அக்டோபர் 2022 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள்
வணக்கம்,
அக்டோபர் 2022 மாத சிறந்த படைப்பு போட்டியில் பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
எழுத்துத் துறையை பொறுத்த வரை, நிறைய போட்டிகளில் பங்கு பெறுவதே நம்மை செதுக்கும் உளியாய் இருக்கும். பங்கு பெரும் அனுபவம் தரும் படிப்பினைகள், சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும் என்றால் அது மிகையில்லை.
சஹானா இணைய இதழில் அறிமுக எழுத்தாளர்கள் மட்டுமன்றி, பிரபல எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளை பதிந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களோடு நாங்களும் தொடர்ந்து பயணித்து வருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நன்றி. அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அக்டோபர் 2022 மாதத்தின் சிறந்த படைப்பு போட்டியின் வெற்றியாளர் விவரத்தை இந்த பதிவின் மூலம் பகிர்வதில் மகிழ்ச்சி.
போட்டியில் பங்கேற்ற படைப்புகளை வாசிக்க இணைப்பு – https://sahanamag.com/2022/10/
பரிசு என்ன என்பதை இந்த அறிவிப்புலேயே பகிர்வதை விட, வெற்றியாளருக்கு surprise ஆக பரிசை அனுப்புவது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறோம். ஆகையால், வாசகர்களுக்கு பரிசு விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். நன்றி
வெற்றி பெற்றவர் பற்றிய விவரங்கள் இதோ
எழுத்தாளர் பற்றி:
ஈரோட்டைச் சேர்ந்த சின்னுசாமி சந்திரசேகரன், தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமணி கதிர், மங்கையர் மலர், மல்லிகை மகள், கல்கி, மை விகடன் மற்றும் சஹாணா இணைய இதழ்களில் இவரின் பல சிறுகதைகள் வெளி வந்துள்ளன. இவற்றுள் சில சிறுகதைகள் பரிசுக்குத் தேர்வு பெற்றுள்ளன.
விரைவில் இவரின் சிறுகதைத் தொகுப்பு புத்தகமாக வெளிவர உள்ளது. அண்மையில் மங்கையர் மலர் நடத்திய ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியில் இவரின் ‘காவடி ஆட்டமும் காந்திமதியின் காதலும்’ என்ற சிறுகதை ₹ 3000/- பரிசை வென்றுள்ளது.
போட்டியில் பங்கேற்ற படைப்புகளை வாசிக்க இணைப்பு – https://sahanamag.com/2022/10/
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
GIPHY App Key not set. Please check settings