எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காதல் …!
காதல் …!!
காதல் …!!!
மூர்த்தி 3 வருஷமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறான் . அவள் பெயர் இந்து . ஆழமான காதல் . பார்க்க ரொம்ப அழகு . உருண்டை முகம் .நல்ல அகன்ற நெற்றி . தினமும் உடைக்கு ஏற்றவாறு ஸ்டிக்கர் பொட்டு .கல்லோரியில் படிக்கிறாள் . பி .எ . சரித்திரம் .மூர்த்தியின் நண்பன் ஒரு ” வாட்ச் ” கடை வைத்து இருந்தான் . தினமும் காலை மற்றும் மாலையில் அவன் அங்கு நின்று கொண்டு இந்துவை ” வாட்ச் ” (சைட் )செய்வான் .அவள் பெயர் , குடும்ப விவரம் மற்றும் படிக்கும் ஆண்டு நண்பன் மூலம் அறிந்தான் . மூர்த்தி அதே கல்லூரியில் படித்தவன் .
மூர்த்தி ” வாட்ச் ” செய்வதை அவளும் “வாட்ச் ” செய்தாள் .மூர்த்தி அவள் அழகில் மயங்கி , லயித்து போய் இருந்தான் .
மூர்த்தி டிகிரி கிடைத்ததும் ஒரு வங்கியில் பணி செய்தான் .அதிகம் படிப்பான் . விவேகனந்தா நூல்கள் மிகவும் பிடிக்கும். சமூக சேவையில் ஆர்வம் .அடிக்கடி சென்னை சென்று ராமகிருஷ்ண ஆஸ்ரமம் போய்விட்டு வருவான் ..சமூக சேவை ஆர்வம் அவனை வேலையை ராஜினாமா செய்ய வைத்தது . சென்னை சென்று ரா .கி ஆஸ்ரமத்தில் சேர்ந்தான் . அவனுக்கு மிஷன் நடதுதும் மாதாந்திர பத்திரகையில்
உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. சம்பளம் இல்லை . சாப்பாடு மிஷன் போட்டுவிடும் . நன்றாக எழுதினான் . அவன் வேலை மற்ற சேவகர்களால் பாராட்டபட்டது . எல்லாம் 3 வருஷங்கள் தான் . மூர்த்திமன குழப்பம் அடைந்தான் . கல்யாணம் செய்து கொள்ள ஆசை . அவனுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் .தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தான் .
வங்கி வேலையை முன்யோசனை இல்லாமல் விட்டுவிட்டோமே என வருந்தினான் .
தன் மூட்டை , முடிச்சுகளுடன் சொந்த ஊர் வந்தான் .பிறகு தான் இந்துவை பார்த்தான் . இந்துவுக்கு பரிசும் , கடிதமும் கல்லூரி முகவரிக்கு அனுப்பி வைத்தான் . அவள் முர்த்தியை கண்டு கொள்ள வில்லை. இப்படி 2 வருடம் ஓடிவிட்டது . அவள் வீட்டில் இந்த விஷ்யத்தை சொல்லி இருப்பாள் என மூர்த்தி உறுதியாக நம்பினான் .
அவளிடம் பேச துடித்தான் .
மூர்த்தியின் பிறந்த நாள் . ஒரு முடிவு எடுத்தான் .அவன் நேர்மை மிக்கவன் . தைரியசாலி . நேரே இந்து வீட்டுக்கு போனான் . அவள் தங்கை கதவை திறக்க ….இவன் உங்க அம்மாவை பார்க்க வேண்டும் என சொல்ல …
அவர் அம்மாவிற்கு ஷாக் .
மூர்த்தி நேரே விஷ்யத்திற்கு வந்தான் .
” நான் இந்துவை விரும்புகிறேன் . கல்யாணம்
செய்து கொள்ள பிரியபடுகிறேன் …”
” இல்லை ….அவளுக்கு டுபாய் மாப்பிளை நிச்சயம்
முடிந்து விட்டது …”
என்று வாய் கூசாமல் போய் சொன்னார் . மறு நாள் லஞ்ச் சமயத்தில் மூர்த்தி கல்லூரி சென்றான் . அவள் 4 நண்பர்களுடன் “பாஸ்கெட் பால்”மைதானதத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் . பயம் எதுவும் இல்லமால் மூர்த்தி பேச்சை ஆரம்பித்து ….
” நான் பிறகு பேசவா …?”
” இல்லை இப்போதே பேசு …!”
” இந்து …ஐ லவ் யு …!”
” எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது …!”
” இல்லை அது பொய் என்று எனக்கு தெரியும் …!”
“ம்ம …ஆமாம் பொய் தான் …!”
“நீங்க என்ன சொல்றீங்க …?”
” யு ஆர் மை எனிமி …!”
” இல்லை …நான் உங்களை உண்மையாக….”
“உனக்கு என்ன தகுதி இருக்கு …? “
” என்ன எதிர் பார்ப்பு …?”
” ஸ்டுப்பிட் …! கெட் லாஸ்ட் …!”
மூர்த்திக்கு செம ஷாக் . பளார் ..பளார் …என்று கன்னத்தில் அரைந்த்தது போல இருந்தது .கிளம்பி விட்டான் . நேரே மது கடைக்கு போனான் .பிறகு தன் முடிவை மாற்றி கொண்டான் . பேரிடி . ” உனக்கு என்ன தகுதி …?”- இதுவே அவன் காதுகளில் எதிரொலித்தது . அவன் குலுங்கி
குலுங்கி நடு ரோடிலையே அழுதான் . துடிதுடித்து போனான் .
எந்த பெண் ஒன்றும் இல்லாதவனை விரும்புவாள் ..?
இது அவனுக்கு தோன்றவே இல்லை..
சொத்து இல்லை….!
வேலை இல்லை….!!
பணம் இல்லை ….!!!
காதலுக்கு கண் உண்டு .
அவன் ஒரு மடையன் …!
எழுத்தாளர் சத்யநாராயணன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings