in ,

முள் பாதை (அத்தியாயம் 8) – பாலாஜி ராம்

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

வேலை நேரம் முடிந்தது. 

தன் காதலனுக்காக வாங்கி வந்த சட்டையும் வேட்டியும் கையில் எடுத்துக் கொண்டாள் செண்பகம். “அவன்தான் நமக்கு இல்லன்னு ஆயிடுச்சு, அவன் ஞாபகமா அவனுக்கு வாங்கின பரிசை  நம்மோடு வச்சுக்கலாம் என்று நினைத்தாள். 

இந்த நேரத்தில் புவனேஷ் சென்பகத்திடம் வந்தான். புவனேஷை பார்த்த செம்பகம், அவனை ஒரு கோபமாக முறைத்து விட்டு  அங்கிருந்து வேகமாக சென்றாள். 

செண்பகம் ஒரு நிமிஷம் நில்லங்களே என்று சொல்லி கொண்டே செண்பகத்தின் பின்னே சென்றான் புவனேஷ். 

சார் உங்களுக்கு என்னதான் பிரச்சனை?  ” வேலை நேரமும் முடிஞ்சிடுச்சு, நான் இப்ப வீட்டுக்கு போகணும், எதுக்காக என் பெயர கத்திக்கிட்டு வரீங்க. 

“நீங்க என்னை தப்பா நினைச்சுட்டீங்க செண்பகம்”

“ஆமா சார் நான் உங்கள தப்பா நினைச்சி ஆசை வச்சிதாலதான் இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன்”

நீ என் அறைக்கு வரும்பொழுது,  நானும் சூப்பர்வைசர் நிர்மலாதேவியும் பேசிட்டு இருந்ததை பார்த்து நீங்க என்னை தப்பா நினைச்சுட்டீங்க,  உண்மையா என்ன நடந்தது தெரியுமா? என்று கூறி நடந்தவற்றையெல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறான் புவனேஷ். 

சூப்பர்வைசர் நிர்மலா தேவி என்னுடைய பெரியப்பா பொண்ணு. எனக்கு அக்கா முறை. நிர்மலாக்கு வர ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம்.  எங்க வீட்டு வழக்கப்படி நிச்சயதார்த்தத்தில் மோதிரம் மாத்திக்கொள்வோம். ஆனால் நிர்மலா தனது மோதிர விரலில் ஏற்கனவே அணிந்திருந்த மோதிரத்தை கழட்ட முடியாமல்,  என்னிடம் வந்தாள். நான் அந்த மோதிரத்தை கழட்டுவதற்கும், நீ உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. நான் மோதிரத்தை கழட்டுவதை பார்த்து, நான் அவளுக்கு மோதிரத்தை அணிவிக்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டாய். 

ஓ ஓ அப்படியா மன்னிச்சிடுங்க.. என்றாள் செண்பகம். 

உன்கிட்ட ஒன்னு சொல்லனும் என் அறைக்கு வாங்க என்று கூறிவிட்டு, தன் அறைக்கு சென்றான் புவனேஷ். 

தன் காதல் காலமாகிவிட்டது என்று பயந்தவளின் முகத்தில் மகிழ்ச்சி மீண்டும் பிறக்கிறது. பிப்ரவரி 14 இன்னைக்கு தன் காதலை சொல்றதுக்காகத்தான் என்னை கூப்பிடுகிறார் என்று நினைத்து, தன் காதலனுக்காக வாங்கிய வேட்டி சட்டையை எடுத்துக்கொண்டு புவனேஷின் அறைக்குள் சென்றாள் செண்பகம். 

செண்பகம் எனக்கு எப்படி சொல்வது என்று தெரியல. எனக்கு சுத்தி வளைச்சி பேசத் தெரியாது  என்று சொல்லிக் கொண்டே, ஐந்து ரோஜாக்களையும் காதலிக்காக வாங்கிய பட்டு சேலையும் கையில் எடுத்தான். 

இந்த ரோஜாக்களை பார்த்ததுமே செண்பகத்தின் மனது பூரிப்படைந்தது. 

தன் கையில் வைத்திருந்த மலர்களையும்,  புடவையும் செண்பகத்திடம் கொடுத்து “ஐ லவ் யூ செண்பகம்” என்றான் புவனேஷ். 

இந்தத் தருணத்திற்காக காத்திருந்த செண்பகத்தின் மனதிற்குள், பல ரோஜா பூக்கள் பூக்கிறது, மல்லிகை வாசம் வீசுகிறது, வண்டுக்கள் தேனை குடிக்கிறது, பட்டாம்பூச்சிகள் பறக்கிறது, குயில்கள் பாடுகிறது, மயில்கள் ஆடுகிறது, மனதிற்குள் இவ்வளவு நடந்தும் அவளது கண்களும், உடம்பும் அசையவே இல்லை. 

செண்பகத்தின் இந்த மௌனம் புவனேஷ்க்கு புரியவில்லை. 

செண்பகம். .. செண்பகம்…. ஏதாவது பேசுங்க உங்க பதிலுக்காக நான் காத்திருக்கேன். 

இவ்வளவு நாட்கள் கழித்து ஒரு வழியாக தன்னிடம் காதலும் சொல்லிவிட்டான்.  ஆனால் இப்போது நான் எப்படி என் காதலை சொல்வது என்று தயக்கத்துடன் நிற்கிறாள். பேச ஆரம்பிக்கிறாள் ஆனால் சத்தம் வரவில்லை, இருந்தாலும் பேச ஆரம்பிக்கிறாள் செண்பகம். புவனேசுக்காக வாங்கிய ரோஜாக்களையும், வேட்டி சட்டையும் கையில் எடுத்து புவனேஷிடம் கொடுத்து “சேம் டு யூ” என்றாள் செண்பகம். உடனே செண்பகம் வெட்கத்துடன் அந்த அறயை விட்டு வெளியேறி தன் வீட்டிற்கு சென்று விட்டாள். 

செண்பகம் தன் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டாள்  என்று நினைத்த புவனேஷுக்கு, செண்பகம் சரி என்று சொன்னதும் சிறகுகள் முளைத்த பறவை போல் மனதிற்குள்ளே பறந்தான். 

எப்படியோ புவனேஷின் ஒரு தலை காதல் இன்று முழுமை பெற்றது. புவனேசுக்கு மட்டுமல்ல செண்பகத்திற்கும் தான். இவர்கள் இருவரின் ஆசையும் நிறைவேறியது. 

நிறுவனத்தின் விடுமுறை நாட்களில் இவர்கள் வெளியே செல்வது, நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும், பேசிக் கொள்வதும், வீட்டிற்கு வந்ததும் அலைபேசி மூலமாக அன்பு மழை பொழிவதுமாக இவர்களது காதல் இனிமையாக  வளர்ந்தது. 

இந்த நேரத்தில்தான் செண்பகத்தின் அப்பா செண்பகத்திற்கு மாப்பிள்ளை தேடும் வேளையில் ஈடுபட்டிருந்தார். 

செம்பகத்தின் குடும்பம் ஒரு ஏழ்மையான குடும்பம். அதனால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்றபடியான மாப்பிள்ளையை தேடினார். 

ஆனால் இவர் பார்த்த மாப்பிள்ளைகள் எல்லாம் இவர் வசதிக்கு அதிகமாகவே வரதட்சணையை கேட்டனர். தன் மகள் திருமணம் எப்பொழுதுதான் நடக்கும் எப்பொழுது தான் மாப்பிள்ளை அமைவான் என்ற வருத்தத்தில் இருந்தார். 

இந்த நேரத்திற்காகத்தான் காத்திருந்த செண்பகம் தன் அப்பாவிடம் சென்று புவனேஷும் நானும் காதலிக்கின்றோம் என்றாள். 

செண்பகத்தின் அப்பா மனதில் நினைக்கிறார், அந்த தம்பி நல்ல  பையன் தான். நமக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கு, அந்த தம்பி நமக்கு மருமகனா வந்தா நல்லா தான் இருக்கும். ஆனா அதுக்கு அந்த தம்பி வீட்டுல சம்மதிக்கணுமே என்று நினைத்தார். 

செண்பகம் பேச ஆரம்பிக்கிறாள் அவரும் என்னை காதலிக்கிறார், அவரு அவங்க வீட்டில பேசி எப்படியாவது சம்மதத்தை வாங்கிடுவாரு. நீங்க என்ன சொல்றீங்கப்பா அவரு நல்லவருதான்பா என்னை நல்லா வச்சி  பாத்துக்குவாரு. 

“எப்படியோ மா நீ நல்லா இருந்தா போதும்” என்று இவர்களது காதலுக்கு பச்சை கொடியை காட்டினார் இவளது அப்பா. 

அப்பா தன் திருமணத்திற்கு சம்பந்தம் தெரிவிச்சதை  புவனேஷ்க்கு உடனே போன் அடிச்சி சொல்லிட்டாள். புவனேசுக்கும் சந்தோஷம்தான் ஆனால், தன் வீட்டில் எப்படி சம்மதத்தை வாங்கப் போறேன்னு ஒரு பயத்திலே இருக்கிறான். புவனேஷ் ஒரு சூப்பர்வைசர், அவன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால், செண்பகம் ஒரு ஏழை வீட்டு பொண்ணு. ஒரு ஏழை பொண்ண தான் வீட்டில இருக்கிறவங்க எப்படி கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு ஒரு பக்கம் நினைக்கிறான். 

புவனேஷ் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் படித்தவர்கள். அதனால் கற்றறிந்தவர்கள் பேதமை பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தான்.

ஏழை பணக்காரன் என்று பேதமை பார்க்காமல் என் மனசைப் பார்த்து,  என் விருப்பம் போல் திருமணம் செய்து வைப்பார்கள் என்று உறுதியுடன் இருக்கிறான் புவனேஷ். 

புவனேஷ்  வீட்டில் சம்மதத்தை சொல்கிறார்களா? இல்லையா? என்று அடுத்த பகுதியில் பார்ப்போம். நன்றி! 

இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டாக்டர் மாப்பிள்ளை! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    திரும்ப வா… திருந்தி வா! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை