2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5
வேகமாக நடந்து, தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு வந்தாள் செண்பகம். அன்றைய நாள் முழுவதும் செண்பகத்தின் கவனம் தான் செய்யும் வேலையில் இல்லை. நேற்றைய தினம் நடத்த சம்பவங்களை பற்றியும், தான் செய்த கொலையில் மாட்டிக் கொள்வேனோ? என்ற பயத்திலும் அவளது மனநிலை இருந்தது.
அன்றைய நாள் செண்பகத்திற்கு, ஆறுதல் கூற யாரும் இல்லை. ஏனெனில் புவனேஷ் அன்று விடுமுறை.
இந்த நேரத்தில், செண்பகம் வேலை செய்யும் இடத்திற்கு, இன்று காலை அவள் சந்தித்த போலிஸ் அதிகாரி வந்தார். போலீசை பார்த்ததும் செண்பகத்தின் மனதின் ஒரு மூலையில் ஒட்டி இருந்த தைரியமும் காணாமல் போனது.
போலிஸ் அதிகாரி, மேனேஜரின் அறைக்குள் சென்றார். மேனேஜரும் போலீஸ் அதிகாரையும் பேசிக்கொண்டு இருக்கும் போது, ஒரு பணிப்பெண் செண்பகத்திடம் வந்து “உங்களை மேனேஜர் அழைக்கிறார்” என்று கூறினாள்.
செண்பகம் பதற்றத்துடன் மேனேஜரின் அறைக்கு சென்றாள். மேனேஜருக்கும், போலீஸ் அதிகாரிக்கும் வணக்கம் கூறினாள்.
“நீ இந்த கம்பெனியில் வேலைக்கு சேரும்போது உனக்கு கொடுத்த ஐடி கார்டு எங்கே? தினமும் ஐடி கார்டு போட்டு தான் வேலைக்கு வரணும்னு தெரியாதா உனக்கு” என்று மேனேஜர் செண்பகத்தை திட்டிக் கொண்டிருக்கும் போது, அந்தப் போலீஸ் அதிகாரி இடைமறித்து செண்பகத்திடம் பேசத் தொடங்குகிறார்.
“அம்மா, நீ காலையில் என்னிடம் பேசிவிட்டு சென்ற பிறகு, அதே வழியாக மீண்டும் திரும்பி வரும்பொழுது ஒரு ஐடி கார்டு இருந்தது அதை எடுத்து பார்த்தேன். அதில் உன்னுடைய புகைப்படமும், உன்னுடைய பெயர், நீ வேலை செய்யும் நிறுவனத்தின் முகவரியும் இருந்தது. நான் இந்த வழியாக தான் வீட்டிற்கு செல்வேன், அதனால் போகும் பொழுது உன்னிடம் கொடுத்து விடலாம் என்று இங்கு வந்தேன்” என்று கூறி, தன் கையில் இருந்த ஐடி கார்டை செண்பகத்திடம் கொடுத்தார் போலிஸ் அதிகாரி.
பயந்த அவளது மனது இப்பொழுது தான் தெளிந்தது.
“மன்னிச்சிடுங்க சார்.. இது போல தவறு இனியும் நடக்காது” என்று மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டாள்.
“ம்ம்ம் சரி போய் வேலையை பாருங்கள்” என்றார் மேனேஜர்.
போலீஸ் அதிகாரிக்கு நன்றி கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் செண்பகம். அவளுக்கு இப்பொழுது அதிர்ஷ்டம் அடித்தாலும், ஏழரை நாட்டு சனி பிடிப்பது உறுதி, ஏனா அவ செஞ்ச காரியம் சாதாரணமானதா, ஒரு கொலையே செஞ்சிட்டு இருக்காள்.
முழு பூசணிக்காயை எவ்வளவு நேரம் தான் சோத்துல மறைக்க முடியும். கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும். எப்படி இருந்தாலும் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சே ஆகனும்.
வேலை முடிந்ததும் தன் வீட்டிற்கு சென்றாள். இரவும் வந்தது. பொழுதும் விடிந்தது.
அன்றைய நாள் காலை, வேலைக்கு செல்லுவதற்கு முன், தன் வீட்டிற்கு பின்னால் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு செல்கிறாள் செண்பகம்.
‘அப்பா ஈஸ்வரா சர்வேஸ்வரா சரபேஸ்வரா அகத்தீஸ்வரா புவிஸ்வரா பிரகதீஸ்வரா ஜெகதீஸ்வரா. ஒரு பெண்ணுக்கு மானத்தை விட பெருசு வேற எதுவுமே இல்ல. என் மானத்தை காப்பாற்றுவதற்காக அவன் கழுத்தை பிடிச்சேன் என் துரதிர்ஷ்டமோ என்னவோ தெரியல அவன் செத்துட்டான். ஒரு கொலை பழிக்கு நான் ஆளாயிட்டேன், இந்தப் பழியில் இருந்து நீ தான் என்னை காப்பாத்தணும் சுவாமி.. உன்ன விட்டா வேற யாரும் எனக்கு கிடையாது’ என்று மனம் உருகி வேண்டிக் கொண்டிருக்கிறாள்.
இந்த நேரத்தில் செண்பகத்தை தேடி புவனேஷ் அவன் வீட்டுக்கு வருகின்றான். செண்பகத்தின் தந்தையிடமும், தம்பியிடமும் விசாரித்து வீட்டிற்கு பின் உள்ள கோவிலுக்கு செல்கிறான் புவனேஷ்.
கோவிலின் கொடி மரத்திற்கு முன் உட்கார்ந்து, தன் முந்தானையை கொண்டு கண்களிலிருந்து வரும் நீரை துடித்தபடி கருவறையில் உள்ள சுவாமியை பார்த்துக் கொண்டிருக்கிறாள் செண்பகம்.
புவனேஷ் செண்பகத்தின் முன் வந்து நிற்கின்றான். செண்பகம் நிமிர்ந்து பார்க்கின்றாள். புவனேஷின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது, ஏதோ மகிழ்ச்சியான செய்தி தான் கொண்டு வந்திருக்கிறான் என்று. அவனுடைய கையில் ஒரு நாளிதழும் வைத்துள்ளான்.
“செண்பகம்… உன்னை பார்க்க தான் நான் சீக்கிரமா வீட்டிலிருந்து கிளம்பி வந்தேன்”
“என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா”
“எந்த பிரச்சினையும் இல்லை, உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி தான் கொண்டு வந்திருக்கேன். ஆட்டோக்காரனை நீதான் கொலை செஞ்சனு பயந்துட்டு இருக்கிறியே! ஆட்டக்காரனை நீ கொலை செய்யல”
“அப்போ யாரு கொலை செஞ்சது?” என்று கேட்டாள் செண்பகம்.
“அவனை யாருமே கொலை செய்யல. அவன் பாம்பு கடிச்சு தான் செத்தான் என்று இன்னைக்கு வந்த நியூஸ் பேப்பர்லயே வந்துடுச்சு. இனி நீ பயப்படத் தேவையில்லை” என்றான் புவனேஷ்.
அந்த ஆட்டக்காரன் பெயர் காமேஷ். என்று நியூஸ் பேப்பரில் என்ன உள்ளதோ அதை செண்பகத்திற்கு சொல்ல ஆரம்பிக்கிறான் புவனேஷ்.
காமேஷும் அவனது நண்பன் சுரேஷும் அன்று இரவு மெயின்ரோடு வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் பொழுது, சுரேஷ் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால் ஓடும் ஆட்டோவிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டான் என்று பிரேத பரிசோதனையிலும், போலிஸ் விசாரணையிலும் தெரியவந்துள்ளது.
காமேஷ் தன் நண்பன் கீழே விழுந்ததை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்த நினைத்து பிரேக்கை அழுத்திருக்கிறான். அப்போது அவனது காலுக்கு பின் ஒளிந்து கொண்டிருந்த பாம்பு ஒன்று அவன் காலில் கொத்தியது, வலி தாங்காமல் நிலைத்தடுமாறி ஆட்டோவை செலுத்தி மரத்தில் மோதுவதற்கு முன்னே நிறுத்திருக்கிறான். பாம்பு கடித்ததால் அவன் மூர்ச்சையாகி இறந்து விட்டான் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. என்று கூறி முடித்தான் புவனேஷ்.
செண்பகத்தின் மனதை பல சந்தேகம் என்னும் அம்புகள் துளைத்து எடுத்தன. கேள்விக்கு மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.
“நான் தானே அவனை கழுத்து இறுக்கி கொலை செஞ்சேன்” என்றாள் செண்பகம்.
“அவனைப் பாம்பு தீண்டி, அவன் மயக்கம் போடும் நிலையில் இருக்கும்பொழுது, நீ அவன் கழுத்தை இறுக்கி இருக்கலாம். அவன் மூர்ச்சை ஆனதும், நீ தான் அவனை கொலை செய்தேன் என்று பயந்து போய் ஓடி வந்திருப்பாய். உண்மையில் அவனை நீ கொலை செய்யவில்லை” என்றான் புவனேஷ்.
“அவன் பாம்பு கடிச்சு தான் செத்தான் என்றால், அவன் அளவுக்கு மீறி மது அருந்தினான் தானே நியூஸ் பேப்பர்ல போட்டு இருக்கு. ஒருத்தன் மது அருந்திய நிலையில் பாம்பு கடி விஷம் ஏறாதுன்னு நான் கேள்விப்பட்டிருக்கேனே?” என்றாள் செண்பகம்.
“மது அருந்தியவன் ஆட்டோக்காரன் (காமேஷ்) இல்லை, அவன் நண்பன் சுரேஷ் மட்டும்தான். நியூஸ் பேப்பரில் சுரேஷ்தான் மது அருந்தினான் என்று போட்டிருக்கின்றது” என்றான் புவனேஷ்.
சோகத்திலிருந்து செண்பகத்தின் முகம் மலர ஆரம்பித்து விட்டது.
‘சுவாமி… நீ என்னை காப்பாற்றி விட்டாய். என் வேண்டுதல் வீண் போகவில்லை’ என்று கீழே விழுந்து சிவபெருமானை வணங்கினாள்.
மகிழ்ச்சியுடன் புவனேஷின் காரிலேயே செண்பகம் வேலைக்கு செல்கின்றாள்.
“பாவையின் கண்ணீரைக் கண்டதும்
பாம்பின் மனமும் இறங்கியது“
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings