இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பெரிய விநாயகர் கோவிலை அடைந்ததும், வண்டியை நிறுத்துங்க சார் இங்க தான் எங்க வீடு இருக்கு.
கார்த்திக்கும் வண்டியை நிறுத்தினான். வண்டியில் இருந்து இறங்கிய “செம்பகம் எனக்கு நீங்க ரொம்ப உதவி செஞ்சிருக்கீங்க சார் இந்த உதவியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன், நன்றி சார்” என்றாள்.
“எதுக்குங்க நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு, எனக்கு ஒரு உதவி செய்றீங்களா செண்பகம்”
“சொல்லுங்க சார், என்னால முடிஞ்சத செய்யுற”
என்னுடைய மொபைல் எங்க வெச்சேன்னு தெரியல, ஒருவேளை ஹோட்டலில் மறந்து வச்சிட்டு வந்துட்டேனா கூட தெரியல, என் நம்பருக்கு கால் பண்றீங்களா? என்றான் கார்த்திக்.
“இதுல என்ன சார் இருக்கு, நான் உங்க ஃபோனுக்கு கால் பண்றேன், உங்க நம்பர் மட்டும் சொல்லுங்க” என்று கூறி தன் ஹேண்ட் பேக்கில் இருந்து தன்னுடைய பட்டன் போனை எடுத்து, கார்த்திக் சொன்ன நம்பருக்கு கால் செய்தாள்.
கார்த்திக் பைக்குள் இருந்து ரிங்டோன் வந்தது. நான் சரியான ஞாபக மறதி, என் பேகுக்குள்ளே போனை வச்சுட்டு, காணாம போச்சுனு தேடுறேன், என்றான் கார்த்திக்.
சில நேரத்துல நானும் அப்படித்தாங்க, பேக்குக்குள்ள போன் வச்சிட்டு வெளியே தேடுவேன், என்றாள் செண்பகம்.
“நாளைக்கு எத்தனை மணிக்கு நீங்க கம்பெனியில் இருக்கனும்”
“நான் காலையில் 8:00 மணிக்கு கம்பெனியில் இருக்கணும் சார்”
“வீட்டில் இருந்து கம்பெனிக்கு எப்படி போவீங்க”
“நடந்து தான் சார் போவேன்”
எனக்கும் ஹாஸ்பிடல்ல 8 மணிக்குலாம் இருக்கணும். நான் தினமும் இதே வழி தான் ஆஸ்பிட்டலுக்கு போவேன். நீங்க தினமும் இங்க வந்து நின்னீங்கன்னா நான் போகும் போது உங்கள கம்பெனில விட்டுட்டு நான் ஹாஸ்பிடலுக்கு போயிறேன், என்றான் கார்த்திக்.
“சார்.. உங்களுக்கு ஏன் சிரமம். நான் நடந்தே போயிருவேன்”
என்ன உங்க தம்பி போல நினைச்சுக்கோங்க. தினமும் எப்படி நீங்க நடந்து போய் நடந்து வருவீங்க.
“சரிங்க சார் நாளைக்கு காலையில இதே இடத்துல வந்து நிக்குறேன். “
ம்ம் சரி நான் போய்ட்டு வரேன் செண்பகம்.
“சரிங்க சார்”
செண்பகம் தன் வீட்டிற்கு சென்று, வீடு பெருக்கி, துணி துவைத்து, சமையல் செய்து வேலைகளை எல்லாம் முடிப்பதற்கு இரவு ஆகிவிட்டது.
பிறகு, புவனேஷ்க்கு நலம் விசாரிப்பதற்காக கால் செய்தாள் செண்பகம்.
ஹலோ. ..
‘சொல்லு செண்பகம்’
“இப்போ உடம்பு எப்படி இருக்கு? உடம்பு வலி குறைஞ்சிடுச்சா”
‘பரவால்ல செண்பகம், உடம்பு வலி குறைஞ்சிடுச்சு. இப்ப நல்லாவே நடக்க முடியுது’.
“எப்போ டிசார்ஜ் பண்றாங்க?”
‘தையல் பிரிக்கிற வரைக்கும் இங்கே இருக்க சொல்லிக்கிறாங்க. ஒரு வாரம் ஆகுமாம், அப்புறம் தான் வீட்டுக்கு அனுப்புவாங்களாம்.’
“புவனேஷ் லைன்லையே இருங்க. எனக்கு புது நம்பரிலிருந்து கால் வருது.” என்று கூறி ஃபோன் காலை அட்டென்ட் செய்கிறாள் செண்பகம்.
“ஹலோ யாருங்க” என்றாள் செண்பகம்.
“இந்த நம்பர்ல இருந்து எனக்கு மிஸ்டு கால் வந்தது”
“நான் யாருக்கும் போன் பண்ணலங்க, என்றாள் செண்பகம்.”
“இந்த நம்பர்ல இருந்துதான் எனக்கு போன் வந்தது”
‘எப்போ வந்தது’
“மதிய நேரத்துல வந்தது”
மதிய நேரத்தில் கூட நான் யாருக்கும் போன் பண்ணலையே! நீங்க டாக்டர் கார்த்திக் ஆஆ, என்ற சந்தேகத்தில் கேட்டாள் செண்பகம்.
ஆமா.. நீங்க யாரு?
“சார், நான் தான் செண்பகம் மதியம் நீங்க போன தொலைச்சிட்டீங்கன்னு என்னை கால் பண்ண சொன்னீங்க, அப்போ ஃபோன் பண்ணேன்.
ஆமா செண்பகம், நான் கூட பேக்லயே போன் வச்சிட்டு தேடுனேனே மறந்தே போயிட்டேன். இதுதான் உங்க நம்பரா?
“ஆமா சார்”
சரி செண்பகம் நான் உங்க நம்பரை சேவ் பண்ணிக்கிறேன். நீங்களும் என் நம்பரை சேவ் பண்ணிக்கங்க.
“சரிங்க சார்”
சாப்பிட்டீங்களா செண்பகம்?
இனிமேல் தான் சாப்பிடனும் சார்? நீங்க சாப்பிட்டீங்களா சார்?
நானும் இனிமேல் தான் சாப்பிடணும்.
சரிங்க செண்பகம், சாப்பிட்டு தூங்குங்க நான் போன் வைக்கிறேன்.
“சரிங்க சார்”
‘பாய்… குட் நைட்’ என்று சொல்லி கார்த்திக் போன் கட் செய்தான்.
இவ்வளவு நேரமாக ஹோல்டில் இருந்த புவனேஷ் பேசுகிறான்.
“இந்த நேரத்துல உனக்கு யார் போன் பண்ணுது?”
‘கார்த்திக் சார் கால் பண்ணாரு’
“யாரு அந்த கார்த்திக்?”
“அவர் டாக்டர். கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல வேலை செய்றாரு”
‘அவரை எப்படி உனக்கு தெரியும். எதுக்கு அவர் உனக்கு கால் பண்ணாரு?’
“உன்ன பாத்துட்டு ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியே வந்தேன்னா என தொடங்கிய செண்பகம் முழு கதையும் சொல்லி முடித்தாள்.”
“அவரு ரொம்ப நல்லவரு, நான் நடந்து போறத பாத்துட்டு தினமும் அவரே என்னை கம்பெனிக்கு ஏத்திட்டு வந்து விடுறேன்னு சொன்னாரு”
“அதுக்கு நீ என்ன சொன்ன?”
“சரிங்க சார், தினமும் உங்க கூடவே வரேன்னு சொன்னேன்”
“நீ யார் வண்டிலும் போக வேண்டாம், தினமும் நானே உன்னை காருல ஏத்திக்கிட்டு கம்பெனியில விட்டுறேன். வேலை முடிஞ்சதும் திருப்பி வீட்டுல விட்டுறேன்”
‘உனக்கு ஏன் இந்த கஷ்டம், அவர் ரொம்ப நல்லவர் அவர் கூடவே வரேன்’
“நான் சொல்றதை நீ கேளு, இந்தக் காலத்துல யாரையும் நம்ப கூடாது”
“சரி நான் அவர் கூட வண்டில வரல, நடந்தே வரேன்”
‘சரி செண்பகம், சாப்பிட்டு நீ தூங்கு நான் நாளைக்கு பேசுறேன்’
“ம்ம் சரி, புவனேஷ் நீயும் சாப்பிட்டு தூங்கு, நான் போனை வைக்கிறேன்”
மறுநாள் காலை, செண்பகம் சீக்கிரமாகவே வேலைக்கு சென்றாள். அன்றைய நாள் செண்பகம் காலை 07:30 மணிக்குள் நடந்தே கம்பெனிக்கு சென்று விட்டாள்.
காலை 07:30 மணிக்கு கார்த்திக் மெயின் ரோட்டில் செண்பகத்தின் வருகைக்காக காத்திருக்கின்றான்.
நேரம் 07:45-ஐ கடந்த போதிலும் செண்பகத்தை காணவில்லை.
“செண்பகம், இன்னைக்கு கம்பெனிக்கு லீவு போட்டாங்களோ! இல்ல சீக்கிரமா போயிட்டாங்களோ, இன்னும் காணாமே, நமக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரம் ஆயிடுச்சு” என்று நினைத்த கார்த்திக் ஆஸ்பிட்டலுக்கு புறப்பட்டான்.
கம்பெனியில் செண்பகம் தன் வேலையை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பணிப்பெண் செண்பகத்திடம் வந்தாள்.
” உன்ன மேனஜர் சார் வர சொன்னார்”
“என்ன விசயம்னு தெரியுமா”
“எனக்கு ஏதும் தெரியாது”
செண்பகம் மேனேஜர் அறைக்குள் சென்றாள்.
“வாங்க மேடம், வாங்க இந்த லெட்டர்-ல கையெழுத்து போட்டு வீட்டுக்கு கிளம்பி போங்க”
“என்ன லெட்டர் சார்”
“ரிசைன் லெட்டர்”
“நான் என்ன சார் செஞ்சேன், ஒழுங்கா தானே வேலை பாக்குறேன், தப்பு ஏதாவது செய்திருந்தா மன்னிச்சிடுங்க சார்”
“நேத்து பொய் சொல்லிட்டு யாரை பார்க்க போன”
“என் தம்பிக்கு உடம்பு சரியில்லனு பார்க்க போனேன் சார்”
‘நடிக்காத எனக்கு எல்லாம் தெரியும், உண்மையை சொல்லு’ என்றார் மேனஜர்.
இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings